Monday, 14 October 2019

நெல் நாகரிகம்

முனைவர் குருசாமி சித்தன் பங்களிப்பு

‘உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம் (சுiஉந ஊரடவரசந)” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள் (ஊரடவரசயட ர்நசழ)” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.

நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல் – திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு விசுவாவசு வரு~ம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து. தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல் விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும் பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும் ஒரு சாவியும் கொண்டு éமியில் வந்தான். நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும் வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம் பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக் கொடுக்கும் நன்மைக்கு
16 பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .
18 மேளமும் கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . .

– தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803
துவாபர யுகம் என்பது கி.மு. 3102 க்கு முற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட ஊழி. நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த பாண்டிய வேந்தர் வம்சத்தைச் சேர்ந்த மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.

தமிழ் நில வகைகள் – தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை ஐந்து வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை எனப்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும். முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் வேளாண்மை செய்யப்படும் வயலும் வயல் சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். நெய்தல் என்பது கடலை ஒட்ழய மணல் பரந்த நிலம் ஆகும். பாலை நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும்.

உலக நாகரிகஙகள் – ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் நைல் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய சுமேரிய நாகரிகம் ய+ப்ரட்டீஸ். டைகீரீஸ் நதி சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது சிந்து நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன மஞ்சள் நதிச் சமடிவளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது கங்கை நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான்.

தமிழர் நாகரிகம் – காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும்;. இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.

தொல்காப்பிய வேந்தன் – தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர். பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது.

வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் – தொல்காப்பியம் – பொருளதிகாரம்
நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனானா (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்.

பாண்டியன் வேந்தன் – பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம்.
வானுட்கும் வழ நீண்டமதில்
மல்லன் மூதூர் வய வேந்தெ.
– புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.
சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்
கொண்ட உயர் கொற்றவ

– மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார்.- (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்ழயன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது.
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய

– புறநானூறு 24 மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது.
சோழ வேந்தன் – சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது.
மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழ ங்கு தானை மூவருள்ளும்
அரசெனப்படுவது நினதே பெரும
ஆடுகட் கரும்பின் வெண்ப+ நுடங்கும்;
நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ.

– புறநானூறு 35, வெள்ளைக் குழ நாகனார்
கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது.
சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.

– பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248 – கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது.
சேர வேந்தன் – சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது.
விண்பொருபுகழ் விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ
வெப்புடைய வரண் கடந்து
தும்புறுவர் புறம் பெற்றிசினே
புறம் பெற்ற வயவேந்தன்
மறம் பாழய பாடினியும்மே
ஏருடைய விழுக் கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே

-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது.
உழுபடையல்லது வேறு படையில்லை
திருவில் அல்லது கொலை வில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்.
(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20,
குறுங்கோழிய+ர் கிழார் பாடியது.
(சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி).

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் வி~;ணுவர்மன் குடும்;பர் குலத்தினன் எனக் கூறுகிறது. “வி~;ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”.
இதன் பொருள் – வி~;ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும்.
வேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர்.

சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும்,
மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன:
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே

– புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவெ தலை

– குறள் 1031
உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.

– குறள் 1033
மருத நில மக்கள் மள்ளர், உழவர். களமர். கடைஞர். வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர். கடைசியர், ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக

அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
– என்று திவாகர நிகண்டும்.

செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப
– என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.

நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம்.
மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்

தொல்காப்பியம் என திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும்.
இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன்.

மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி.

– பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.
இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.
கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு

– பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25
“குன்றுடைக் குலமள்ளர்” என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.

நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்

– கம்பராமாயணம், வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21)
இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்ப+மியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.
தெய்வேந்திரர் வரலாறு:

சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து
மதுரையை நோக்கி வரும் வழியதனில்
உலகலாமீன்ற உமையவள் மனதில்
திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
வைகையில் விடுக்க
வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து
குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
ஈ~;வரி தேடி யிருளில் நடக்க
கூவிய சத்தம் குமரனை நோக்கி
வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து
வலமார் பிய்ந்து அமுர்தம்
பொழிந்து அ~;த்தம் கொடுக்க
பாலன் நரிவு பணிவிடைக்காக
புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க
தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :
கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசிக்க வென்று
காராவின் பாலை கரகத்திலேந்தி
சீறாக அன்னம் சிறப்பித்த போது
தெய்வேந்திரன் விருதுகள் :
ஈ~;வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும்
விமரிசையாக விருது கொடுக்க
மாலயன் ருத்திரன் மகே~;பரன் மகிழ்ந்து
பொன்முடி யதனில் ப+சன மணிய
வாடாத மாலை மார்பினி லிலங்க
வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே
டாலுடம்மான சத்தம் அதறிட
மத்தாளம் கைத்தாமம் மகெ~;பரத் துடனெ
எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசனம் செய்து
பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
புரவியிலேறி ப+லோக மதனில்
சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது
விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
மூவராசாக்கள் முடிமணம் சூட்ட
செந்நெல்லை படைத்தோர்
குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனரளாலே திருநீறணிந்து
யெ;லலா வுலகும் யிறவியுள் ளளவும்
தௌ;ளிமை யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச் செல்வரான
செந் நெல் முடி காவரலான
முத்தளக்கும் கையாதிபரான
பாண்டியன் பண்டான பாறதகதபரான
அளவு கையிட்டவரான
மூன்று கைக்குடையாதிபரான
பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
மாடக் குளத்தில் வந்துதித்தவறான
பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான
தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய
பழனித் தலத்தில் காணியாளனாகிய
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி – பழனிப் பட்டயம், வரி 195 – 217

நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தழிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிர்; வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது.

சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்;காரர் (வாய் – நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும்.

தமிழ் மள்ளர்களின் இந்நெல் நாகரிகம் இந்தியா முழுவதிலும் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் (பர்மா), பாகிஸ்தான், சீனா, சப்பான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பங்காள தேசம், பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது, இதன் சிறப்பையும் இன்றியமையாமையையும் உணர்த்துகின்றது மள்ளர் வரலாறு.

நீதிமன்ற தீர்ப்பும் சாதி பட்டியலில் திருத்தமும்

திருவிதாங்கூர் எல்லைக்குட்பட்டு இருந்த செங்கோட்டையில் பாண்டியர் பட்டம் யாருடையது? என்பது குறித்து பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் ஏற்ப்பட்ட முரண்பாடுகளாலும், மோதல்களாலும் மறவர் சமூகத்தின் சார்பாகக் கொல்லம் நீதிமன்றத்தில் 'பாண்டியர்கள்' தாங்கள் தாம்  என்றும், பள்ளர்கள் பாண்டியர் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இறுதியில் 'பள்ளர் தாம் பாண்டியர்' என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பற்றிய செய்திகளை செங்கோட்டை மேலூரில் வாழும் முதியோர்களிடம் நாம் இன்றும் செவிமடுக்கலாம்.

இந்த நிகழ்வை மள்ளர் 'அஞஞாடி பூமணி' அவர்கள் கூற கேட்ப்போம்.
"புது தில்லியில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் சாணார்களைப் பற்றிய சிவகாசிக் கலவரம் தொடர்பான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருந்த போது 'பள்ளர்கள தான் பாண்டியர்' என்று கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை படிக்க நேர்ந்தது.  செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்குமான தொடர் சாதிய மோதலை ஒட்டி 1920களில் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உரியதென்றும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளகூடாதென்றும் மறவர்கள் சார்பாகத் திருவிதாங்கூர் சமசுதானத்திற்க்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட வரலாற்று ஆவணங்கள், நில ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று 'பள்ளர்கள்தான் பாண்டியர்கள்' என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்புத் தந்துள்ளது. (Quilon District Court Judgement,Travancore State) இந்தத் தீர்ப்பினைப் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் வைத்துப் பார்த்தேன். ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்த அந்த தீர்ப்பின் நகலைத் தெளிவாகப் படித்து பார்த்ததில் பள்ளர்களே பாண்டியர்கள் என்பது சொல்லப் பட்டு இருந்தது. எனவே 'பள்ளர்கள் தான் பாண்டியர்கள்' என்பதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது"

மேலே சொன்ன தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு அன்றைய திருவிதாங்கூர் அரசாங்கம், புதிதாக திருத்தி வெளியிட்ட சாதி பட்டியலில் 'பள்ளரை' பாண்டியர் என்றே குறித்துள்ளது. (விவரங்கள் ஆதரங்களுடன் கீழே). இதை பற்றி விலாவரியாக பார்க்கும் முன்பு 'பாண்டியர் சங்கம்' பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

பள்ளர் குலத்தவரின் பாண்டியர் சங்கம்

பிற்கால பாண்டியர்களின் நேரடி வாரிசுகளான செங்கோட்டைப் பகுதிவாழ் பள்ளர்கள் கொல்லம் ஆண்டான 1099 இல்(கி.பி.1924) 'பாண்டியர் சங்கம்' தொடங்கினர். தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஒரேயொரு பாண்டியர் சங்கம் இதுவேயாகும். பிற சமூகத்தினர் எவரும் தமிழகத்தில் பாண்டியர் பெயர் தாங்கிய சாதி சங்கத்தினைத் தொடங்கவில்லை என்பதும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கதாகும்.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட பாண்டியர் சங்கத்தின் தலைவராக தி.சுப்பையா பாண்டியர் என்பாரும், செயலாளராக எம்.பாக்கியநாதன் பாண்டியர் என்பாரும், பொருளாளராக மா.பலவேசம் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.




உபரித் தகவல்: இவ்வாறு பள்ளர்களால் தொடங்கப்பட்ட பாண்டியர் சங்கத்தினர் மாநாடு ஒன்றை 1946 ஆண்டு நடத்தினர். கீழே குறிப்பிட்ட அனைவரும் பெரும் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர் எனபதும் சிறப்பு மிக்கதாகும்.
    * திருவிதாங்கூர் திவான்
    * இந்திய கவர்ன்மென்ட்
    * ஜெய்ப்பூர் பிரதம மந்திரி
    * சென்னை சர்க்கார் கல்வி மந்திரி
    * செங்கோட்டை மிட்டாதாரர்
    * திருவிதாங்கூர் மன்னர்

கீழே உள்ள கடித்தத்தில்  பள்ளர்கள் தங்களை பாண்டியர் என்றே குறித்துள்ளதையும், பாண்டியர் சங்கம் பற்றியும், அதன் தலைவர் திரு.சுப்பையா பாண்டியர் என்பதை கீழ்க்கண்ட கடித்தப்போக்குவரத்து மேலும் வலு சேர்க்கும்.

பாண்டியர் சங்க செயலாளர் திருவிதாங்கூர் திவானுக்கு எழுதிய மடல்
        பாண்டியர் சங்கச் செயலாளர் எம்.பாக்கிய நாத பாண்டியர் திருவிதாங்கூர் திவானுக்கு எழுதிய ஆங்கில மடல் ஒன்றில் பள்ளர்களைப் 'பாண்டியர்' என்றே பதிவு செய்துள்ளனர். அந்த மடலில் உள்ள செய்திகள் கீழ்க்கண்டவாறு அப்படியே தரப்பட்டுள்ளது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
From
        M.Pakiyanadhen Pandiar, Secretary,
        The Travancore Pandiar Sangam, Shencottah.
To
        His Excellency,
        The Dewan of Travancore, Trivandrum.

May it please your Excellency,
        I am the Secretary of the Travancore Pandiar Sangam, residing at Meloor, Shencottah, humbly beg to approach your Excellency with the following facts hoping that the same will receive sympathetic consideration and early favorable disposal.
        1. That there are 300 Pandiar houses containing 2000 people, 30 Sambavar houses and 30 Chakkiliar houses within the Municipal limits of Shencottah.
        2. That though Shencottah has been declared a town and a committee consisting of Officials and Non-Officials have been appointed from the beginning of 1087, and the being Government have been pleased subsequently to give the Public the right of election of Non-Official members, reserving to itself the right of nominating some 2 members, we were benefited only for the last 2 terms by the above.
        3. I humbly beg to point out that the pandiar, sambavar and the chakkiliar are the only classes that can be said to belong to the depressed classes and I further beg to bring to your Excellency's kind notice, that thought it is more than 12 users since Shecottah has been declared a town, only in the last 2 terms of the us Mr.Subbiah Pandiar was nominated a Councillor.
        4. That the presence of a said councilor ..... interests of the Pandiars, sambavar and chakkiliars .... so far as it relates to the proper sanitary arrangements of the locality in which we reside.
 That we believe that without one of us in Council, our interests will not be properly cared for and that the presence of one of us in the Council is indispensable to the welfare of the above said communities and that we have full confidence in the present Councillor Mr.Subbiah Pandiar. I therefore humbly pray your Excellency will be kindly pleased to nominate the above said Mr.Subbiah Pandiar the present Councillor, as one fo the nominated Non-Official councilors in the new council for another term also.
                                                                                    I humbly beg to remain,
                                                                                   May in please your Excellency,
                                                                            Your Excellency's most obedient servant,
                                                                                    M.Pakianathan Pandiar
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

அனுப்புனர்
    எம்.பாக்கியநாதன் பாண்டியர்.
    செயலாளர்,
    திருவிதாங்கூர் பாணியர் சங்கம்,
    செங்கோட்டை.

பெறுநர்
    மேதகு திருவிதாங்கூர் திவான்,
    திருவனந்த புரம்.

மேதகு திவான் அவர்களுக்கு பணிவான வணக்கம்.

    செங்கோட்டை மேலூரில் குடியிருக்கும் திருவிதாங்கூர் பாண்டியர் சங்கத்தின் செயலாளராக உள்ள நான், கீழ்க்கண்ட கோரிக்கைகளைத் தங்கள் முன் பணிவோடு சமர்ப்பிப்பதற்கும், தாங்கள் அவற்றை பரிவோடு ஆய்வு செய்து விரைவான, சாதகமான நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டுகிறேன்.

    1. செங்கோட்டை நகர்மன்ற எல்லைக்குள் 2000 மக்கள் தொகை கொண்ட 300 பாண்டியர் வீடுகளும், 30 சாம்பவர் வீடுகளும், 30 சக்கிலியர் வீடுகளும் உள்ளன.
    2. செங்கோட்டை ஒரு நகரமாக அறிவிக்கப்பட்டதன் பேரில் அரசு அலுவலர்களையும், அரசு அலுவலர்கள் அல்லாதவர்களையும் கொண்ட நிருவாகக் குழு ஒன்று 1087 முதல் அமைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசு கருணையோடு எங்களுக்கு வழங்கியிருந்தும் கூட, அந்த இரண்டு உறுப்பினர்களை நியமிக்கும் உரிமையை அரசு தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு பருவத்திற்கு மட்டுமே நாங்கள் பயன் பெற்றுள்ளோம்.
    3. இங்கே பாண்டியர், சாம்பவர் மற்றும் சக்கிலியர்கள் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகமாகக் கருதபடுவதைத் தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவிப்பதோடு, செங்கோட்டை நகர்மன்றமாக அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும், கடந்த இரண்டு பருவங்கள் மட்டுமே எங்களில் ஒருவரான திரு.சுப்பையா பாண்டியர் நகர் மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
    4. நகர்மன்றத்தில் இந்த பாண்டியர், சாம்பவர், சக்கிலியர் ஆகிய சமூகங்களின் சார்பாளர்கள் இருந்தால் மட்டுமே இவர்கள் குடியிருக்கின்ற பகுதிக்கான சுகாதாரப் பணிகள் முதலிய வசதிகள் செய்வதற்கு எதுவாகவும் என்று கருதுகிறேன்.

    எங்களில் ஒருவர் நகர்மன்றத்தில் இல்லாத நிலையில் எங்களது தேவைகள் குறித்த கோரிக்கைகள் யார் காதிலும் விழாது. எனவே நகர் மன்றத்தில் எங்கள் சார்பாக ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்றும், அதற்க்கு தற்போது உறுப்பினராக இருக்கின்ற திரு.சுப்பையா பாண்டியர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதென்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே மேற்குறிப்பிட்ட திரு.சுப்பையா பாண்டியர் அவர்களை எங்களது சார்பாளராக மீண்டும் ஒரு பருவத்திற்கு தாங்கள் அருள் கூர்ந்து நியமித்து உதவுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                            பணிவுடன் தங்கள்
                                                                                            உண்மையுள்ள ஊழியன்
                                                                                            எம்.பாக்கியநாதன் பாண்டியர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனி நாம் 'சாதி பட்டியலில்' பள்ளர் எவ்வாறு பாண்டியர் என்று திருத்தப்பட்டது என்பதை கீழ் கண்ட கடிதப் போக்குவரத்துகள் முலம் அறிய முற்படுவோம்.

மக்கள் குடிக்கணக்கில் பாண்டியர் சமூகம்
    மக்கள் குடிக்கணக்கில் தங்களின் சமூகத்தைப் பதிவு செய்யும்போதே தமது மரபுப் பெயரான பாண்டியர் என்றே பதிவு செய்ய வேண்டுமென்று பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்கள் திருவிதாங்கூர் மக்கள் குடிக்கணக்கு ஆணையர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதிய மடல் வருமாறு:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
                                     Shencottah,

From
    T.Subbiah Pandiar Municipal Councillor,
    Shencottah.

To
    The Census Commissioner,
    Travancore, Trivandrum.

Sir,
    With reference to your letter addressed to me regarding the caste division effected for the ensuing census, I have the honoour to give my opinion with regard to item No.29 'Pallan'.

    I belong to the so called 'Pallan' community and my forefathers predecessors generally our caste people were known only by their name ..... caste name at all. ..... become an usage among ourselves ..... the word 'Pandian' as a caste name in all our documents and correspondences besides our name as Thirumalaiyandi 'Subbiah Pandiar' and the same has been recognized by all law courts and  by government too for the following reasons.

    I suggest that item No.29 'Pallan' be changed as 'Pandian'. As per the documentary evidence required for the same be furnished if need be.

                                                                                                              T. Subbiah Pandiar
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

அனுப்புனர்
    தி.சுப்பையா பாண்டியர்,
    நகர்மன்ற உறுப்பினர்,
    செங்கோட்டை.

பெறுநர்
    மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்
    திருவிதாங்கூர் சமஸ்தானம்
    திருவனந்த புரம்

ஐயா,

 வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தொடர்பாகச் செய்ய வேண்டிய சாதிப் பிரிவுகள் குறித்து தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக பிரிவு எண்.29 'பள்ளன்' என்ற சாதி குறித்து என்னுடைய கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

 நான் பள்ளன் சாதியைச் சேர்ந்தவன். மேலும் எனது முன்னோர்கள், பொதுவாக எங்களது சாதி மக்கள் - வேறு எந்த சாதிப் பெயருமின்றி இதே பெயராலேயே அறியப்பட்டார்கள். எங்கள் சமுதாயத்தினர் 'பாண்டியன்' என்ற சொல்லை எங்களது சாதிப் பெயராக அனைத்து ஆவணங்களிலும் மற்றும் தகவல் பரிமாற்றங்களிலும், எங்களது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வது வழக்கத்தில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக திருமலையாண்டி 'சுப்பையா பாண்டியன்' என்றே எனது பெயர் எழுதப்படுகிறது.

 மேலும் இப்பெயர் அனைத்து நீதிமன்றங்களிலும் மற்றும் அரசாலும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் பிரிவு எண்.29 'பள்ளன்' என்ற பெயர் 'பாண்டியன்' என மாற்றப்பட வேண்டும் என்ற எனது கருத்தை முன் வைக்கிறேன். இதற்க்கு ஆதாரமான சான்று ஆவணங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அனுப்பி வைக்கப்படும்.

                                                                                               தி.சுப்பையா பாண்டியர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆணையாளர், தி.சுப்பையா பாண்டியனாரிடம் ஆதாரங்களை அனுப்ப கோரிய மடல்
         மக்கள் குடிக்கணக்கில் பள்ளர் எனும் பட்டத்தை பாண்டியர் எனப் பதிவு செய்யக் கோரிய பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்களுக்கு அதற்க்கான எழுத்து மூலமான ஆவணங்களைக் கொடுக்குமாறு திருவிதாங்கூர் மக்கள் குடிக்கணக்கு ஆணையர் ஆங்கிலத்தில் எழுதிய மடல் வருமாறு:

##########################################################################
                                                          CENSUS URGENT

Telegraphic Address:
"CENSUS", Trivandrum
No.1428

       Office of the Census commissioner,
       Travancore, Trivandrum,
       17th July 1930

From
 N. KUNJAN PILLAI, ESQ, M.A, B.Sc., Ph.D.,
 Census Commissioner,
 Travancore.

To
 Mr.Ry.T.Subbiah Pandian,
 Municipal Councillor,
 Shencottah.

         Reference:
         Subject:

Sir,
 With reference to your letter dated 09.09.105, I have the honor to request you to be so good as to forward any documentary evidence in support of your request to change the designation of 'Pallan' in to 'Pandian'.

                                                                                                          Your obedient servant,
                                                                                                       (For Census Commissioner)
##########################################################################

  ##########################################################################
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

                                   மக்கள் தொகை கணக்கெடுப்பு -அவசரம்

தந்தி முகவரி:
Census திருவனந்தபுரம்

 மக்கள் கணக்கெடுப்பு ஆணையாளர்,
 அலோவலகம், திருவிதாங்கூர்,
 திருவனந்தபுரம்.

அனுப்புனர்
        என்.குஞ்சன் பிள்ளை அவர்கள், எம்.ஏ, பி.எசு.சி., பிஎச்.டி.,
        மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்,
        திருவிதாங்கூர்.

பெறுநர்
        திருமிகு.தி.சுப்பையா பாண்டியர் அவர்கள்,
        நகர்மன்ற உறுப்பினர்,
        செங்கோட்டை.

              பார்வை:
              பொருள்:

ஐயா,

        தங்களது 09.09.1105 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றோம். அதில் கோரியபடி 'பள்ளன்' என்ற பட்டத்தை 'பாண்டியன்' என்று மாற்றுவதற்கான தங்களின் கோரிக்கைக்கு ஆதாரமாக ஏதாவது எழுத்து மூலமான ஆவணங்கள் இருந்தால் அனுப்பி வைக்குமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

                                                           தங்கள் பணிவான ஊழியன்
                                              மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருக்காக
##########################################################################

தி.சுப்பையா பாண்டியனார் ஆதாரங்களை அனுப்புதல்
         பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்கள் 'பள்ளர்களே' பாண்டியர்கள் என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பு,சங்கப் பதிவு, நில ஆவணங்கள் (எண்ணிலடங்கா நில ஆவணங்கள்  'மள்ளர் ஆவணத்தில்' வேறொரு கட்டுரைகளில் பதியப்பட இருக்கின்றன.) ஆகிய பதிவு செய்யப்பட எழுத்து மூலமான ஆவணங்களை திருவிதாங்கூர் மக்கள் குடிக்கணக்கு ஆணையர் அவர்களுக்கு அனுப்பி வைத்து எழுதிய மடல் வருமாறு:

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
         Shencottah
         22nd July 1930
         08.12.1105

From
        T.Subbiah Pandiar,
        Municipal Councillor,
        Shencottah.

To
        The Census Commissioner
        Trivandrum.

Sir,
        With reference to your letter No.1428 dated 17th July 1930 regarding ensuing census, evidence to change our caste name from 'Pallan' into 'Pandian'.

        I have the honor to forward herewith some registered documents and also a summon addressed to me one member assuring our caste and request that you will be so good as to peruse the records and return the same to my address as they are important registered documents.

                                                                                                 I have (C&C)
                                                                                               T.Subbiah Pandiar
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

         செங்கோட்டை.
         22 சூலை 1930
         08.02.1105

அனுப்புனர்

        தி.சுப்பையா பாண்டியர்,
        நகர்மன்ற உறுப்பினர்,
        செங்கோட்டை.

பெறுநர்

        மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்
        திருவனந்தபுரம்

ஐயா,

        தங்களது சூலை 17,1930 நாளிட்ட 1428 எண்ணுள்ள கடிதம் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எங்களது சாதியான 'பள்ளன்' என்பதை 'பாண்டியன்' என்று பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை கோரியபடியால் இத்துடன் சில பதிவு செய்யப்பட ஆவணங்களையும் , எங்களது சாதிக்கு உறுதியளித்து ஒதுக்கப்பட்ட எண் குறித்து எனது முகவரிக்கு அனுப்பப்பட்ட அழைப்பு ஆணையையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

        மேலும் இந்த ஆவணங்களை பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை செய்வதற்கு தங்களது நல்மனதோடு இந்த பதிவினைச் செய்யவேண்டுமென்று தங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்வதோடு, அனைத்து ஆவணங்களையும் 'மிக முக்கியமான பதிவு ஆவணங்களாக இருப்பதால்' அவற்றை எனக்குத் திரும்பவும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.

                                                                                                  அன்புடன்
                                                                                  தி.சுப்பையா பாண்டியர்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஆவணங்களை Census  ஆணையர் ஏற்றுக் கொள்ளுதல்
        மக்கள் குடிக்கணக்கில் பள்ளர் எனும் பட்டத்தை பாண்டியர் எனப் பதிவு செய்ய கோரிய பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்கள் அதற்க்கு சான்றாக நீத்மன்ரத் தீர்ப்பு, சங்கப் பதிவு, நில ஆவணங்கள் ஆகிய பதிவு செய்யப்பட எழுத்து பூர்வமான ஆவணங்களை அனுப்பி வைத்ததை பெற்றுக் கொண்டு, 'பள்ளர்' என்பதை 'பாண்டியர்' என ஏற்று, அந்த முக்கியமான மீண்டும் சுப்பையா பாண்டியர் அவர்களுக்கு அனுப்பி வைத்து, ஆங்கிலேயே அரசியலமைப்புச் சட்டத்தில், உயரிய அதிகாரம் படைத்த மக்கள் குடிக்கணக்கு ஆணையர் அவர்கள் எழுதிய மடல் வருமாறு:

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
                           CENSUS URGENT

Telegraphic Address:
"CENSUS", Trivandrum,
No.137

         Office of the Census commissioner,
         Travancore, Trivandrum,
         22nd August 1930

From
        N.KUNJAN PILLAI,ESQ, M.A, B.Sc, Ph.D.,
        Census Commissioner,
        Travancore.

To
        Mr.Ry.T.Subbiah Pandian,
        Municipal Councillor,
        Shencottah.

                Reference:
                Subject:

Sir,
        With reference to your letter dated 22nd July 1930, I have the honour to return herewith the documents mentioned therein. Please acknowledge receipt of the same.

                                                                                 I have the honour to be
                                                                                          sir
                                                                             your most obedient servant
                                                                              For Census Commissioner
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

மக்கள் தொகை கணக்கெடுப்பு - அவசரம்

தந்தி முகவரி:
Census திருவனந்தபுரம்

         மக்கள் கணக்கெடுப்பு ஆணையாளர்,
         அலுவலகம்,திருவிதாங்கூர்
         திருவனந்தபுரம்,
         22 ஆகஸ்டு 1930

அனுப்புனர்

        என்.குஞ்சன் பிள்ளை அவர்கள், எம்.ஏ, பி.எஸ்.சி, பிஎச்,டி .,
        மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்,
        திருவிதாங்கூர்,

பெறுநர்

        திருமிகு.தி.சுப்பையார் பாண்டியர் அவர்கள்,
        நகர்மன்ற உறுப்பினர்,
        செங்கோட்டை.

                பார்வை:
                பொருள்:
ஐயா,

        தங்களது சூலை 22,1930 நாளிட்ட கடிதத்தின்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைஎல்லாம் இத்துடன் தங்களுக்குத் திருப்பி அனுப்பியுள்ளேன். அவற்றை பெற்றுக் கொண்டமை குறித்து தகவல் தெரிவிக்கவும்.

                                                                                 உண்மையுள்ள,
                                                                  தங்களது பணிவான ஊழியன்
                                                     மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையருக்காக

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சாதி பட்டியலில் திருத்தம்


        திருவிதாங்கூர் அரசுக்கும், பாண்டியர் சங்கத்திர்க்குமான மேற்கண்ட கடித்தப் பரிமாற்றங்களின் மூலம் பள்ளர்களே 'பாண்டியர்' என்பதை அரசு ஏற்றுக் கொண்டு மக்கள் குடிக்கனக்கிலும் அவ்வாறே பதிவு செய்துள்ளது.

 (Scheduled Caste List, Public Relation Department, Travancore-Kochin,1952).

இதன் தமிழாக்கம்:
1.அய்யனவர்
2.பரதர்
3.சக்கிலியர்
4.டொம்பன்
5.எரவாலன்
6.காக்கனன்
7.கணக்கன்
8.காவேரா
9.கூடன்
10.குறவன்
11.மண்ணான்
12.நாயாடி
13.படனன்
14.பள்ளன் (பாண்டியன்)
15.பள்ளுவன்
16.பாணன்
17.பரவன்
18.பறையன்(சாம்பவன்)
19.பதியன்
20.பெருமண்ணான்
21.புலையன்(சேரமார்)
22.தண்டான்(தச்சன்)
23.உள்ளாடன்
24.ஊராளி
25.வல்லோன்
26.வள்ளுவன்
27.வண்ணான்(வர்ணவர்)
28.வேலன்(சக்கமார்)
29.வேடன்
30.வெட்டுவன்

உபரித் தகவல்: இங்கே புலையர் என்று அறியப்படுபவர்கள் பள்ளர்களே. இவர்கள் சேர மரபினர்.

பள்ளரே பாண்டியர் என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து 'மறவரின்' மன நிலை:
         இப்படி ஒரு தீர்ப்பு வந்தால் மறவர்கள் சும்மா இருப்பார்களா என்ன....? என்ன நடந்தது என்பதை கள ஆய்வு கூறுகிறது இதோ:

        பள்ளர்களே பாண்டியர்கள் என்று கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்க மறுத்த மறவர்கள், அந்த தீர்ப்பின் நகலை நீதிமன்றத்திற்கு முன் உள்ள குளத்திற்குள் கிழித்துப் போட்டுவிட்டு, செங்கோட்டையில் உடனடியாகத் தங்களின் சாதிச் சங்கக் கூட்டத்தினைக் கூட்டினர். அக்கூட்டத்தில் "நீதிமன்றம் என்ன சொன்னாலும் சரி, நமது சாதியின் உயர்வுக்காக பாண்டியன் என்னும் பட்டத்தை நாம் எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும், அதற்காக மறவனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒருவரையொருவர் அழைக்கும் போது பாண்டியன் என்றே கூப்பிட வேண்டும். பிற சாதியினரையும், தங்களைப் பாண்டியன் என்று தான் அழைக்க வேண்டுமென்று கட்டாயப் படுத்த வேண்டும். அப்படி அழைக்க மறுப்பவர்களை அடித்து துன்புறுத்தியாவது பாண்டியன் என அழைக்க வைத்துவிட வேண்டும்" என்றும் தீர்மானித்தனர்.

        1930களுக்குப் பின்னரே மறவர்கள் பாண்டியன் என்னும் பட்டத்தைத் தமதாக்கிக் கொள்ள பொதுவிடத்தில் தங்களுக்குத் தாங்களே பாண்டியன் என அழைத்துக் கொண்டு கடும் பரப்புரைகளச் செய்வித்தும், தங்களுக்குப் பாண்டியன் என்று பெயர் வைத்துக் கொண்டும் அங்கலாய்த்தனர். பள்ளர்களுக்குரிய பாண்டியர் என்னும் குலப் பட்டத்தைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்ள விரும்பாத மறவர்களில் ஒரு தரப்பினர் 'பள்ளர்கள் தான் பாண்டியர்கள்' என்றும், மவர்கள் பாண்டியர்கள் என சொல்லிக் கொள்ளக் கூடாது' என்றும் செங்கோட்டை வட்டங்களிலுள்ள கம்பளி,நெடுவயல் உள்ளிட்ட ஊர்களில் எதிர்பரப்புரை செய்து வந்தனர்.

திராவிட ஆட்சியாளர்களின், பள்ளர்கள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறை:

திராவிட கயமைத்தனம்: 1

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பட்டியல் சாதிகளில்

* தேவேந்திர குலத்தான் (17)
* காலாடி (26),
* குடும்பன் (35),
* பள்ளன் (49),
* பள்ளுவன் (50),
* பண்ணாடி (54),
* புலையன் - சேரமார் (59),
* வாதிரியான் (72)

 முதலிய பள்ளர் குடிப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 1935 இல் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது தொகுக்கப்பட்ட 'பட்டியல் சாதிகள்' (Scheduled Caste ) என்ற தலைப்பில் உள்ள 74 சாதிகளில் அகரவரிசை எண் ஒன்பதில் 'பாண்டியன்' (9) என்னும் பள்ளர்களின் குடிப்பெயர் இடம் பெற்று இருந்தது.ஆனால் திராவிட சிகாமணிகள் அவர்களது ஆட்சி காலங்களில், 'காலாடி' என்பதைக் 'கல்லாடி' என்றும், 'குடும்பன்' என்பதைக் 'குடம்பன்' என்றும், 'பண்ணாடி' என்பதைப் 'பன்னாடி' என்றும், 'வாதிரியான்' என்பதை 'வாத்திரியான்' என்றும் திரித்ததைப் போல 'பாண்டியன்' என்பதைப் 'பாண்டி' என்றாக்கித் தற்போது 'பண்டி' என்று பொருள்புரிய முடியாதவாறு ஆக்கி வைத்துள்ளனர். (Tamilnadu Public Service Commissioin Instructions pg.18). திராவிட ஆட்சியாளர்களின் தமிழர் அடையாள அழிப்பு வேலைகளில் இதுவும் ஒன்று.

திராவிட கயமைத்தனம்: 2

பட்டியல் சாதிகளில் இடம் பெற்றுள்ள
 * ஆதி ஆந்திர'ர்'(1),
 * ஆதி திராவிட'ர்'(2),
 * ஆதி கர்நாடக'ர்'(3),
 * அருந்ததிய'ர்'(5),
 * மோக'ர்'(43)
முதலிய பிற தேசிப் பெயர்களுக்கெல்லாம் 'ர்' விகுதியும்,

 *தேவேந்திர குலத்தா'ன்',
 *பள்ள'ன்'
 *கடைய'ன்'
 *குடும்ப'ன்'
 *வாதிரியா'ன்'
முதலிய மண்ணின் மக்கட் பெயர்களுக்கு 'ன்' விகுதியும் எனப் பாகுபடுத்தும் திராவிட உத்திகளையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. 'ர்' 'ன்' விகுதி உயர்வு நவிர்ச்சி, தாழ்வு நவிர்ச்சி என்பதோடு மட்டுமின்றி ,'ன்' விகுதி ஒருமையைக் குறிக்கும், 'ர்' விகுதி பன்மையைக் குறிக்கும். பொதுவாக மக்களை குறிக்கும் வார்த்தை 'ன்' விகுதியிட்டு அழைப்பதென்பது இலக்கணப் பிழை மட்டுமின்றி, திராவிடர்களின் தமிழின படுகொலை என்பதையும் எண்ணத்தில் கொள்ள வேண்டும்.

திராவிட கயமைத்தனம்: 3

'Scheduled Caste' என்பதற்கு 'பட்டியல் சாதி' என்பதே சரியான தமிழ் மொழி பெயர்ப்பு. ஆனால் திராவிட ஆட்சியாளர்களின் வன்மத்தை இங்கே கூர்ந்து கவனியுங்கள். பட்டியல் சாதியினரின் நலத்துறை என்பதற்கு பதிலாக,

 * அரிசன நல இலாகா
 * தாழ்த்தப்பட்டோர் நலத்துறை
 * ஆதி திராவிடர் (பறையர், அரசாணை எண்.817) நலத்துறை
 என்றெலாம் பெயரிடுவது மூவேந்தர் மரபினராகிய பள்ளர்களின் வரலாற்றினை மூடி மறைத்து, இம்மக்களை பண்பாட்டு ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கும் விஜயநகர வடுக (திராவிட) வன்மம் என்பது தெளிவாகிறது.

Thursday, 3 October 2019

மள்ளர் - குடும்பர் ஒன்றே

மள்ளர் - குடும்பர் ஒன்றென உரைக்கும் பள்ளுப்பாடல்கள்

    வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கிவந்த வேளாண்குடி மக்களின் வேறுபட்ட பெயர்கள் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை உணர்த்தி, மள்ளர்களின் நீண்டதோர் வரலாற்றுத் தொடர்ச்சியினை இணைத்தும், பிணைத்தும் பள்ளுப் பாடல்களே தெளிவுற்றுகின்றன. மள்ளர் குலத்தவரின் குலப்பட்டமே குடும்பர் என்பது குறித்துக் கூறும் பள்ளுப் பாடல்கள் சிலவற்றை இங்கே காட்டாகக் காண்போம்.
  • சாமிநாதப் பள்ளு
        இயற்றியவர் சிவபெருமாள் கவி.
செய்யுள் 10
        "பெருக்கமிடும் பண்ணைதனைக் காவியத்தியாய்
                வந்த
மள்ளன் பிரபலமோங்கு
        திருக்குலவு வீராச்சிமங்கை நகரக்
குடும்பன்
                வந்த திரஞ் சொல்வோமே"
    அடர்ந்த கருங்கொண்டையை முடிந்து, மீசையை நன்றாக முறுக்கு, உருமாலையை இறுக்கிக் கட்டி, வண்ணச் சோமனை இடையிற்கட்டி, சோமபானம் அருந்தி, தென்கரை நாட்டில் பெரும் புகழ் பெற்ற குடும்பனார் வரவை, அவர்தம் குடியினரான மள்ளர்கள் புகழ்ந்ததாக மேற்க்கண பள்ளு அடிகள் பரப்புரை செய்கின்றன.
  • எட்டையபுரப் பள்ளு
          இயற்றியவர் முத்துப் புலவர்
செய்யுள் 37
        "வாய்ந்த ராமனூற்றுப் பண்ணை
        மள்ளர் கட்டிய வெள்ளை காளையைப்
        பேய்த்தண்ணீர் வெறியாலே கொம்பை
        யுயர்த்திப் பிடிப்பாராம்
        குருமலை தனில் வாழும்
கெச்சிலாக்
        குடும்பன் கட்டிய யிடும்புக் காளையை 
        மறுவிலாத தென்னிசைக் குடும்பன்
        வளைத்து பிடிக்கவே...."
செய்யுள் 41
        "நெஞ்சூ டெருதுகுத்தும் நீள்காயாத்தாற் காய்ந்தே
        தொஞ்சே மயங்கி மதிசோர்ந்திருக்கும் வேளைதன்னில்
        மஞ்சாடும் பூங்கூந்தல்
மள்ளியர்கள் வாய்மொழியோர்
        சஞ்சீவிக்
குடும்பன் தானெழுந்து கொண்டானே...."
    தென்னிசைப் பள்ளு அடிகள் மள்ளரும் குடும்பரும் ஒன்றென்பதைத் தீர்க்கமுடன் தெளிவுறுத்துகின்றன. இதில் முதற் செய்யுளில் இடம் பெற்றுள்ள 'கெச்சிலாக் குடும்பன்' நினைவாகவே 'கெச்சிலாபுரம்' என்ற ஊர்ப்பெயர் ஏற்ப்பட்டுள்ளது. 'கெச்சிலாபுரம்' என்ற பெயரில் கோயில்பட்டி அருகே ஓர் ஊரும், கழுகுமலை அருகே ஓர் ஊரும் உள்ளன.
  • தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு        
        "புள்ளியுரு மாலுங்கட்டி மள்ளியர்தமைப் பகட்டிப்
        போதவே சிலப்பங் கையில் வாணத்தடியுந்த்
        துள்ளிய வீசி முருக்கி வொள்ளிய கச்சை யிருக்கித்
        தொட்டு விளிக்குஞ் சபாது பொட்டது மிட்டு
        வள்ளல் பழனியப் பேந்திரன் பண்ணை வளம்பார்க்கிறான்
        மைந்தன்
உடையக் குடும்பன் வந்து தோன்றினானே...."
           மேற்கண்ட பள்ளு அடிகளும் மள்ளர் - குடும்பர் ஒன்றென்பதை உணர்த்துகிறது.
  • பொய்கைப் பள்ளு
          இயற்றியவர் கடிகை அங்கமுத்துப் புலவர், காலம் கி.பி. 1891 
செய்யுள் 25
        "குடும்பனென்ப துயர்ந்தசாதி யானல்ல வென்பர்
        குடும்ப நுயர்ச்சியினைக் கூறவெளி தோ
        நெடுங்கடற் புவியுள் ளோரவரவர் குலத்துக்கு
        நிகழ்த்துந் தலைமையுள் ளோனே
குடும்பனாம்
        திடஞ்சேர் மறையோராதி குலசிரேட் டருங்கெல்லாத்
        சேர்ந்திருக்கு மேன்பெயர் தெரியு மீது
        தடம்புயன் சொக்கலிங்கப் பெத்தண்ணல் பண்ணை மள்ளச்
        சாதிக் குடும்பனேன்னைத்
தள்ளலரிதே ..."
    மேற்கண்ட பள்ளு குடும்பர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை உணர்த்துவதோடு 'மள்ள சாதிக் குடும்பன்' என்ற சொற்றொடரின் ஊடாக மள்ளரும், குடும்பரும் ஒன்றென்பதை விளக்கி உரைக்கின்றது.
செய்யுள் 119
        "எண்டிசையும் போற்றுசொக்க லிங்கபெத்த னேந்திரதுரை
        மண்டலங்கொண் டாடுபண்ணை
மள்ளிமூத்  தாள்சாடி
        விண்டகன்ற பின் குடும்பன் மிகக்கிடை வைத்துவயல்
        கண்டுவந்தான் போலவொரு கணத்தினில் வந்துற்றானே .."
மேற்கண்ட பள்ளு மூத்த பள்ளியை மள்ளிமூத்தாள் என்றும் பள்ளியின் கணவனை 'குடும்பன்' எனவும் குறிக்கின்றது.

மள்ளர் - பள்ளர் ஒன்றே

மள்ளர் - பள்ளர் ஒன்றென ஓதும் பள்ளிசை

    இன்று வாழ்கின்ற பள்ளர்களே இலக்கியங்கள் புகழ்கின்ற மள்ளர்கள் என்பதற்குப் பல்வேறு வரலாற்று அறிஞர்களும், மொழியியல் அறிஞர்களும், தங்களின் விளக்கங்களோடு கூடிய கருதுகோளை முன்வைத்த போதிலும் , பள்ளர்களே மள்ளர்கள் என்பதற்கு மறுக்கவென்னாச் சான்றுகளைப் பள்ளுப் பாடல்களே அதன் பாடலடிகளின்  ஊடாகப் பதிய வைத்துள்ளன. அது குறித்துச் சற்றுக் கூர்ந்து நோக்குவோம்.

  • செங்கோட்டுப் பள்ளு

           இயற்றியவர் பொன்னுச் செல்லையா, காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
செய்யுள் 197 
        "பள்ளனும்பள் ளியருடனே  வந்து போற்றப்
                பண்ணையினார் கோல்காரன் தனையும் பார்த்து
        உள்ளமகிழ்த் திவூரில் பள்ளர் பள்ளி
                ஒருவரிலா மற்படியிங் கழையும் என்ன
        வள்ளல்மொழி கேட்டவன்போய் அளித்த பின்பு
                வழமை செறி மோரூரில் வாழ்ந்திருக்கும்
        மள்ளர்கள் பள்ளிய ருடனே கூடிவந்து
                மன்னவரைத் தொழஅவரும் மகிழ்ந்து சொல்வார்..
."
செய்யுள் 245 
        "வந்ததுமே திருக் கூட்டமதாகவும்
                மள்ளரும் பள்ளிமார்களும் கூடியே
        சிந்தை தானும் மகிழ்ந்து அவரவர்
                தெய்வங்கள் தமைப் போற்றியேகும்பிட்டு
"
செய்யுள் 354 
        "மள்ளனும் இளைய பள்ளி
                மனையினில் வந்தி ருந்து
        கள்ளிமோ கத்தால் காமக்
                கடலினில் அழுந்திக் கொண்டான்
        பள்ளன்செய் கொடுமை மூத்த
                பள்ளியும் மனம்பொ றாமல்
        வெள்ளியங் கிரியார் பண்ணை
                வேந்தர்முன் வந்து சொல்வாள்
"
செய்யுள் 819 
        "மங்கையர் மீதினில் மாங்க னி - பறித்
                தங்கிட
மள்ளர்வி  ளாங்க னி
        மந்தியின் மீதிலே எறிந்து மே - மகிழ்
                விந்தையைப் பாரடி
பள்ளிய ரே"
மேற்கண்ட செங்கோட்டுப் பள்ளுவின் செய்யுட்கள் பள்ளரே மள்ளர் என்பதை உறுதி செய்கின்றன.
  • திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு

          இயற்றியவர் சுப்பிரமணிய நாவலர், காலம் கி.பி.1882 
பகுதி 118 
        "பள்ளத் தடாக நல்லூர்ப் பள்ளி சொன்ன சொற்படியே
                மள்ளத் தலைவனைக் கால்மரம் வெட்டி விட்டபின்பு
        உள்ளத்து அறிவான் உடல்செலவு எல்லாம் போக்கி
                எள்ளத்தனை குறையாது இருப்பு வகை சொன்னானே
"
    பள்ளரே மள்ளர் என்கிறது மேற்கண்ட பள்ளு அடிகள்.
  • எட்டையபுரப் பள்ளு

          இயற்றியவர் முத்துப் புலவர்
செய்யுள் 146 
        "அகத்திலுகந்து கொண்டு நு கத்தை மகிழ்ந்து கையிலெடுத்தான்
                பண்ணையாண்டவர் சொல்படி பூண்டு
பள்ளரிடங் கொடுத்தான்
        மகத்துவ மீறிய வையகத்து மானதவாழ்த்தித் தொழுதார்
                மள்ளர் வலிலேரைப் பூட்டி நயமாகக் கூட்டியுழுதார்"
செய்யுள் 153 
        "வேலைவிட்டொன் னார்தளத்தை வென்றருள்கு மாறயெட்ட
                மாலையிட்ட தார்பரவு
மள்ளருக்குப் பள்ளியர்கட்
        செளைவிட்டுப் பின்வேறு சிந்தையுண்டோ செய்கால்வாய்க்
                காலைவிட்டாப் பாலே கடக்கக்கா லேறாதே
"
  • சாமிநாதப் பள்ளு

         இயற்றியவர் சிவப்பெருமாள் கவி
செய்யுள் 7
        "மஞ்சினஞ் சூழ்ந்திலகு வீராச்சி
                மங்கை நகர்க்கிசைந்திடும் பண்ணை
        மள்ளனுக்கே மனமகிழ் மூத்த
                பள்ளி வந்தனளே"
பள்ளரே மள்ளர் என்பதற்கு சாமிநாதப் பள்ளு ககரும் சான்று இது.
  • தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு

      பக்கம் 19 வரி 9 ,10
        "வருமனய மள்ளரெலா மூத்தபள்ளிக் காவேசம் வறுத்து வாய்மெய்
                பெருமையென வேளாரை வருகவென வந்தவகை பேசலாமே"
  • முக்கூடற் பள்ளு

         இயற்றியவர் பெயர் தெரியவில்லை, காலம் 1670
செய்யுள் 10
        "ஆதிமரு தீசருக்கும் ஆட்பட் டழகருக்கும்
                பாதியடி மைப்படுமோ
பள்ளிமரு தூரிளையாள்
        சோதிமுக மள்ளருக்கே தோன்ற வயலுற்ற நட்ட
                போதிலொரு பூவில் ஐந்து பூவும் பயிராமே
"
    தன ஒளி பொருந்திய முகம் மள்ளர் வடிவழகக் குடும்பனாருக்கு மட்டுமே தோன்றும் படியாக மருதூர் இளைய பள்ளி வயலில் நாற்று நட்டால் பயிர் செழித்து வளர்ந்து விளைச்சல் ஐந்து மடங்காய் பெருகி விளையும் என்னும் பொருள்பட அமைந்த மேற்கண்ட முக்கூடற் பள்ளு  அடிகள் பள்ளரே மள்ளர் என்பதையும் அறிவிக்கின்றன.

ஊர் குடும்பு ஆட்சி முறை

ஊர் குடும்பு ஆட்சி முறை - அன்றும் இன்றும்




         மருத நிலத்தில் தோன்றிய ஊர்க்குடும்பு ஆட்சிமுறை களத்து மேட்டை நடுவமாகக் கொண்டெழுந்த காணியாட்சி முறையாகவே தொடக்கத்தில் இருந்தது. எனவே தான் நெல் விளைவிக்கப்படும் நிலங்களின் தொகுப்பிற்கு 'குடும்பு' என்று பெயர் ஏற்ப்பட்டது. குடியிருப்பதற்காக மக்களிடம் இருந்து மன்னர்களால் பெறப்பட்ட வரிக்கு 'குடிமை' என்று பெயர். சோழர் காலத்தில் தோட்ட வாரியம், கழனி வாரியம், ஏரி வாரியம் எனத் தனித்தனி அமைப்புகள் இருந்ததைப் போன்று 'குடும்பு வாரியம்' என்றொரு தனி அமைப்பும் இருந்து இயங்கி வந்துள்ளது. இதில் பணி புரிந்தவர்கள் 'குடும்பு வாரியப் பெருமக்கள்' என்று அழைக்கப் பெற்றனர்.
       காஞ்சிபுரம் வட்டம், மணி மங்கலம் கல்வெட்டில் 'குடும்பிடு பாடகம்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. குடும்பிடு பாடகம் என்பது நிலப் பெயர் ஆகும். குடும்பு செய்வதற்கான நிலம் குடும்பிடு பாடகம் என்றானது. குடும்பர்களுக்கு உரிமையுடைய நிலம் குடும்பிடு பாடகம் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேசுவர சாமி கோயில் கருவறையின் தெர்க்குச் சுவரில் உள்ள கல்வெட்டு முதல் பராந்தக சோழனின் 40 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. (கி.பி.947 ) இக்கல்வெட்டில் 'குடும்பு காட்டுக்காற் குடும்பி' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.
      களத்து மேட்டைக் கவனிக்கவும், விளை பொருட்களைக் கள்ளர்களிடம் இருந்து காக்கவும், ஏர் மள்ளர்களான குடும்பர்களுக்குத் துணையாகப் போர் மள்ளர்களான காலாடிகள் விளங்கினர். ஏர்க்கள நிருவாகத்தொடு போர்க்கள நிருவாகமும் இணைந்தபோது குடும்பன் காலாடி ஆட்சி முறையான மூவேந்தர்களின் அடிப்படை ஆட்சிமுறை தோன்றியது. குடும்பர்களுக்கு உதவியாக இருந்த காலாடிகளுக்குப் பதிலாக சில இடங்களில் வாரியார்கள் இருந்தனர். வாரியன் என்ற சொல்லே பின்னாளில் வாதிரியான் எனத் திரிந்தது. வாதிரியான் என்பது தற்போது 'வாத்திரியான்' என்று திராவிடத்தால் திரிக்கப் பட்டுள்ளது. வாதிரியான் என்பது பட்டியல் சாதிகளில் அகர வரிசை எண்.72 இல் உள்ளது.
இடைக்கால சோழர் ஆட்சியில் குடும்பு முறை
     குடும்பு என்னும் சொல்லாட்சி வரலாற்றில் தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து இடம் பெற்று வருவதைக் காண முடிகிறது. பாண்டிய மன்னர்கள் ஏற்ப்படுத்திய குடும்பிய முறை பின்னர் சோழர்களிடமும், சேரர்களிடமும் வழக்கில் இருந்தது. ஊர்க்குடும்பு ஆட்சிமுறையை உலகிற்கு உணர்த்துவதற்கு உரிய சான்றாக நிப்பது உத்திரமேரூர் கல்வெட்டாகும். இக்கல்வெட்டின் மூலம் இடைக்கால சோழர் ஆட்சி குடும்பு முறை செயல்பட்டதைப் பற்றிப் பார்ப்போம்.

உத்திரமேரூர் கல்வெட்டு - 1 
தேவேந்திரன் சக்ரவர்த்தி
ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பாரந்தக சோழர் காலம்

அ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மர்க்குயாண்டு பனிரெண்டாவது   உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம். இவாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீ முகப்படி ஆணை.

ஆ) இதனால் தத்தனூர் மூவேந்தர் வேளாண் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலம் சம்வத்சர வாரியமும், தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்.

இ) பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானியத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன மைனயிலே அ.

ஈ) கம் எடுத்துக் கொடன்னு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும், சாஸ்த்திரத்திலும், காரியத்திலும் நிபுணர் எனப் பட்டி.

உ) ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்மா சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய் தொழிந்த பெருமக்களுக்கு

ஊ) அணைய பந்துக்கள் அல்லாதாரை குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு

எ) பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வருசம் சம்பத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோலை

ஏ) லை வாங்கி பன்னிருவரும் தோட்ட வாரியம் ஆவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியம்

ஐ) வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும், முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவவியவஸ்தை ஒலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு

ஒ) ம். குடவோலையில் பேர் எழுதி இடப் படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவார வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத

ஓ) வாரியங்கள் ஒரு கால் செய்தாரை பிள்ளை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெராததாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட

ஓள) ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கேட்டு கிஷ்டர் வர்த்த்திதிடுவாராக வியவஸ்தை  செய்தோம் உத்திர மேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம்.

உத்திரமேரூர் கல்வெட்டு - 2 
அ ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வன்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதினாறு காலியூர் கோட்டத்து தன கூற்று உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணன் ஸ்ரீ பராந்தக தேவன் ஸ்ரீ பரகேசரிவன் மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முப்படி ஆ

ஆ) ஞஞையினால் சோழ நாட்டுப்புறங் கரம்பை நாட்டு ஸ்ரீ வாங்க நகரக்கரஞ் செய்கை கெண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமாள் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும்  சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும், இடுவதற்கு வியவஸ்தை செய் பரிசாவது குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா

இ) ரே கூடிக் காணிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன மனையிலே அகம் மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்ப்பட்டார் மந்த்ர பிராமணம் வல்லான் ஒதுவித்தறிவானைக் குட வோலை இடுவதாகவும் அரக்கா நிலமே யுடையனாயிலும் ஒரு வேதம் வல்லனாய் நாலு பாஷ்யத்திலும்  ஒரு பா

ஈ) ஷ்யம் வக காணித்தறிவான அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆகாரமு டையாரானாரை யேய் கொள்வதாகவும் அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உடையாராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றனவர் பேரவ்வை

உ) க்களையும், அவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தகப்பநோடுப் பிறந்தானையும் தன்னோடுப் பிறந்தாளை வோட்டானையும் உடப் பிறந்தாள் மக்களையும் தன மகளை வேட்ட மருமகனையும் தன தமப்பனையும்

ஊ) தன மகனையும் ஆக இச்சுட்ட.....பர்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும், அகமியாகமனத்திலும் மகா பாதங்களில் முன் படைத்த நாலு மகா பாதகத்திலுமெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுடப்பபட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும் சம சரக்க பதிதாரை பராஸ்யசித்தஞ் செய்யுமளவும்

எ) குடவோலை இடாததாகவும்....தியும், சாகசிய ராயிரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் பரத்ரவியம் அபகரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத பிராயஸ் சித்தஞ் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் ப்ராணாந்திகம்

ஏ) வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெருந்தாகவும் .... பாதகஞ் செய்து பிராயச் சித்தர் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் ப்ராயஸ்சித்தஞ் செய்து சத்தரானாரையும் அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் ப்ரானாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதி எழுதிப்புகவிடப் பெருதாக

ஐ) வும் ஆகா இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இபன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மகா சபைத் திருவடியாரை சபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளீரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா

ஒ) மே மகா சபையிலேரும் மண்டகத்தி லேயிருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் வருத்தராய் இருப்பா ரொரு  நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்குலெடுத்துக் கொண்டு நிற்க பகலே யந்திர மறையாதானொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துகே புகவிட்டுக் குலைத்து அக்குடத்திலோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே

ஓ) குடுப்பதாகவும் அக்குடத்த வோலை மத்தியஸ் தன வாங்கும்போது அஞ்சு விரலும் அகல வைத்த உள்ளங்கையாலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்குள் மண்டகத்திருந்த தம்பிமார் எல்லோரும் வாசிப்பாராகவும் வாசித்த அப்பர் திட்டமிடுவதாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஒரே பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரினுந்தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விச்சையா வருத்தரையும்

ஓ) வயோவ்ருத்தர்களையும் சம்வத்ஸர வாரியராக கொள்வதாகவும் மிக்கு நினாருட்பன்னிருவரைத் தொட்ட வாரியங் கொள்வதாகவும் நின்ன அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும் இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன்னுற்றருபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்ய நின்றாரை அபராதங்

ஐ) கண்டபோது அவனை யொழித்துவதாகவும் இவர்கள் ஒழித்த அனந்தரமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன்மைக்ருதயங் கடை காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியே...க்ருக்குடவோலை பரித்தக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்து.

ஓ) க்கு முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி முப்பது வாயோலை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டு பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவனவாகவும் பிற்றை ஆண்டும் இவ்வரியங்களை குடவோலை பறிக்கும் போது இவ்வரியங்களுக்கு முன்னம் செய்

ஓ) த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக் இடப் பெருததாகவும் மத்தியஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி சுத்தன் ஆச்சி தன பின்னன்றி மாற்றுக் கண

ஓள) க்குப் புகழ் பெருதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மாற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெருதாராகவும் இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயா

அக்கு) ல் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்ட யாக்ரமவித்த பாட்டனாகிய சேர்மாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத்து அப்யுதயமாக துஷ்டர் கேட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையாம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வியவஸ்தை மத்யஸ்தன்

அ) காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்பிரியனேன்.

       குடும்பு ஆட்சியில் குடவோலை முறை குறித்து மேற்கண்ட உத்திரமேரூர் கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் இக்கல்வெட்டு இராசராசச் சோழனை தேவேந்திரன் சக்ரவர்த்தி குஞ்சர மல்லன், இராசமல்லன் எனவும் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
குடும்பு வாரியம்
    திருப்பாற்கடல் கற்ப்பூரிசுவரர் கர்ப்பகிரக வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு பரகேசரிவர்மன் பராந்தக சோழன் (கி.பி.918 ) காலத்தியது. இது குடும்பு வாரியப் பெருமக்களும்,தோட்ட வாரியப் பெருமக்களும் கழனி வாரியப் பெருமக்களும், ஏரி வாரியப் பெருமக்களும் பெரிய ஏரி மராமத்து செய்தது பற்றிக் குறிப்பிடுகின்றது.

"ஸ்வத்ஸ ஸ்ரீ மாதிரி கொண்ட சேர்ப்பரகேசரி பன்மர்க்குயாண்டு பன்னிரண்டாவது கோட் நாள் நூற்றுருபத்தொன்பது பருவூர்க் கோட்டடத்துக் காவதிப்பாக்கமாகிய அமணி நாராயணச் சதுர்வேதி மங்கலத்து......இவ்வாட்டைக் குடும்பு வாரிய பெருமக்களுந் தொட்ட வாரியப் பெருமக்களும் பட்டர்களும் வசிட்டர்களும் உள்ளிட்ட மகாசபையார் பணியால் இவ்வாண்டு ஏரி ாரிகஞ் செய்கின்ற ஏரிவாரிகப் பெருமக்களோம் சோழ நாட்டுப் பாம்புணிக் கூற்றுத்து  அரைசூர் அரை சூருடைய .... ன் தீரன் சென்னிப் பேரரையர் பக்கல் ஒன்பதரை மாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சுப் பொன்னும் எம்மூர் பெரிய ஏரி கரை மண்ணாட்டுகின்ற ஓட நாயன்மார்க்கிடுவதற்க்கு முதலாக கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சு பொன்னாலும் வந்த வர்த்தியாலேய் பாண்டியனும் ஈழத்தரையனும் வந்து பெருமானடிகளோடு வேரூர் அஸ்திகடை செய்த நான்று இச்சென்னிப் பேரையர் சென்ற இடத்துப்பட்ட சேவகர் காரிமங்கலமுடையானுக்கும் வலிக் குட்டிக்கும் பெருநாயகனுக்கும் அழிநிலை மாடம்பிக்கும் ஆக இந்நால்வரையும்."

    பள்ளு நூல்களில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கூடற் பள்ளுவில் வடிவழக் குடும்பன் குடும்பு செய்து ஊர் மக்களுக்கு உழைத்த செய்தியைக் கீழ்கண்டவாறு உரைக்கிறது.
செய்யுள் 88 
    "ஆளுக்கும் பணியாள் - சீவலப்
      பேரிக்குள் காணியான் - வில்லென்றும்
            அரிப்பிட்டுப் போட்டான் -
பள்வரி
            தெரிப்பிட்டுக் கோட்டான்
            ...................................... குடும்பு செய்
            தூராருக் குழைத்தான் - அழகர் சொம்
            மார்க்கப் பிழைத்தான்"

    என்று வடிவழகக் குடும்பன் குடும்பு செய்து ஊர்மக்களுக்காக உழைத்துத் தாழ்வின்றி தானும் பிழைத்த செய்தியை வெளிப்படுத்துகிறது. இங்ங்கனம் குடும்பு என்னும் சொல் ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் தலிமைப் பதவியைக் குறிக்கிறது.

    கி.பி.1891 இல் பதிப்பிக்கப்பட்ட ஆற்றங்கரை சம்சுதான வித்துவான் கடிகை ஐந்கமுத்து புலவர் இயற்றிய பொய்கைப் பள்ளுவில், பொய்கைக் குடும்பன் குடும்பு செய்த வரலாற்றினைக் கூறுவதாகவுள்ள பாடலடிகள் வருமாறு.

செய்யுள் 27 
    "இன்னமென்று சொல்வேனேன் பள்ளியர் தம் பெருமை
    யிதற்க்குமே லதிகமா மியம்பக்கே ளும்
    மன்னு திருநெடுமால் கொண்டதும்
பள்ளியீசன்
    மற்றோர்சேர் வதும்
பள்ளி மாநிலமெல்லாம்
    பண்ணுந் துலுக்கர்தொழு கையும்
பள்ளி வாசல்கல்வி
    பயிலு மிடமனைத்தும்
பள்ளி யிவற்றால்
    தென்னன் சொக்கலிங்கபெத் தண்ணல்பண் ணைக்
குடும்பு
    செய்யடியேன் குலத்திற் சிறந்தோ னானேன்
"