Saturday, 2 November 2019

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது பாண்டிய வேந்தர்கள் கட்டியதாகும். இக்கோயிலுக்கு உரிமையுடைய அனுப்பானடித் தெப்பக்குளத்தில் தை மாதம் தெப்பத் திருவிழா பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் போது அனுப்பானடி ஊர்க்குடும்பனுக்கு முதல் மரியாதை வழங்கும் மரபு தொன்று தொட்டு இன்றும் இருந்து வருகிறது. மதுரை அனுப்பானடி பள்ளர்கள் குல மக்கள் தனித்தன்மையோடு வாழும் பேரூர் ஆகும்.
(1919 ஆண்டு தோற்றம்)
முதல் நாள் கதிர் அறுப்பு விழாவாக மீனாட்சி அம்மன் திருவிழா நடைபெறுகிறது. வைகை ஆற்றில் இருந்து முதல் மடை திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக வரும் நீர் இவ்விழாவிற்க்காகவே அனுபபானடிப் பள்ளர்கள் உழவு செய்கின்ற வயலில் பறித்து, அதனை நட்டு, நெல் விளைவித்து அறுவடைக்காகக் காத்திருக்கும் பள்ளர்கள் வயலில் இறங்கிக் கதிர் அறுக்கப் பள்ளத்தியராக மீனாட்சி தேரில் ஏறி வருகிறாள். மீனாட்சியும் வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுக்கிறாள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து பள்ளர்களின் இவ்வேளாண் தொழிற் காட்சியினைக் கண்டு களிப்படைகின்றனர். முதல் நாள் பள்ளர் வயலில் நெற்கதிர் அறுத்துக் கதிர் அறுப்பைத் தொடங்கி வைத்த மீனாட்சி, அடுத்த நாள் தெப்பக் குளத்திலிருந்து வந்து மள்ளர் குல மன்னன் சோமசுந்தர பாண்டியருடன் தெப்பத் தேரில் அமர்கிறார்.

மதுரை அனுப்பானடி ஊர்க் குடும்பன் அறிவிப்பின் பேரில் அனுபபானடிப் பள்ளர்கள் ஒன்று திரள மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். தெப்பக்குள வந்து சேர்ந்த பள்ளர் குலப் பெருமக்களின் ஊர்வலத்தக் கோயில் அறங்காவலர்களும், அரசு அதிகார்களும் எதிர் நின்று வரவேற்கின்றனர். படகு ஒன்றின் மூலம் ஊர்க்குடும்பனும் இன்ன பிற பள்ளர்களும் தெப்பக்குள நடுமண்டபத்திர்க்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தெப்பக்குளத்தில் எதிர் எதிர் பக்கங்களில் இரண்டு வடங்கள் இருக்கின்றன. ஒரு வடம் தெப்பக்குள நடுமண்டபத்திலும், மற்றொரு வடம் தெப்பக்குள வெளிப் பக்கத்திலும் இருக்கிறது. (நேர்காணல், முனைவர் சு.பாண்டியன், மதுரை)
வெள்ளை யானையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்திரன்: மதுரை மீனாட்சி கோவில் தெற்கு கோபுரம்
நடுமண்டபத்தில் உள்ள வடம் பள்ளர் குலத்தாரின் கைகளில் மட்டுமே உள்ளது. வெளிப்பக்கம் உள்ள வடம் பள்ளர் குலத்தாரால் தொட்டு கொடுக்கப்பட்ட பின் அங்கே கூடியிருக்கும் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்களின் கைகளிலும் கொடுக்கப் படுகிறது. இருபுறமும் வடம் இழுக்கப்பட்டு மீனாட்சி அமர்ந்திருக்கும் படகுத் தேர் தெப்பத் தண்ணீரில் இருமுறை நடு மண்டபத்தைச் சுற்றி வளம் வருகிறது.
அன்று இரவு மீண்டும் ஒரு முறை தேர் நடு மண்டபத்தைச் சுற்றி வருகிறது. அதன் பிறகு அருகில் உள்ள மூர்த்தீஸ்வரர் கோயிலில் அனுப்பானடி ஊர்க்குடும்பானுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்படுகிறது (நேர்காணல்: சு.ப.மாரிக்குமார், மதுரை). தற்போது ஒரு சில அரசு அதிகாரிகளுக்கும் பரிவட்டம் கட்டும் முறை புகுத்தப்பட்டுள்ளது. குல அடிப்படையில் பள்ளர்களுக்கே பரிவட்டமும், முதல் மரியாதையும், வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது அக்கினி வீரன் என்ற பள்ளர் குல இளைஞர் அனுப்பானடி ஊர்க்குடும்பனாக உள்ளார். கோயிலுக்கு உரிமையுடைய நிலங்களும் சொத்துகளும் இப்போதும் பள்ளர்களுக்கே சொந்தமாக உள்ளது. (நேர்காணல்: முனியசாமி, அனுப்பானடி, மதுரை)

மதுரை தெப்பத் திருவிழா மற்றும் கதிர் அறுப்பு விழாவின் வரலாற்று சுருக்கம்:

“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில், தை பூசத்திற்கு முதல்நாள் கதிர் அறுப்புத் திருவிழா நடக்கிறது. இதற்காக பள்ளனான சுந்தரேசுவரரும், பள்ளத்தியான தடாதகைப் பிராட்டியும் மீனாட்சி அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு அனுப்பானடிக்கு அருகே மருதநிலப் பகுதியான சிந்தாமணி (முன்பு இது வயல்பகுதியாக இருந்த இடம். இப்போது இப்பகுதியில் அதிக கட்டிடங்கள் உருவாகிவிட்டன) என்ற பகுதிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலப்பகுதியானது ‘கிருதுமால்’ என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை நதியின் கிளைநதியான இந்த கிருதுமால் நதியின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாகிறது.
மீனாட்சி அறுவடை செய்யும் வயல் அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டது. இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம். மடைவாரியர் என்பது நெல் நாகரிக மக்களில் கண்மாய்ப் பாசனத்தை நிர்வகிக்கும் பள்ளனுக்குரிய பெயர் ஆகும். கிருதுமால் நதியைப் பற்றி இங்கு வாழ்ந்த முன்னோர்கள் குறிப்பிடுகையில், ‘நதியின் குறுக்கே மிருகங்கள்கூட கடந்து செல்லமுடியாத அளவிற்கு ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது’ என்று குறிப்பிடுகிறார்கள். தற்காலத்தில் அந்த இடத்தில் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வயலாக மாற்றுகின்றனர். வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிரை தற்காலிமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு மீனாட்சி அம்மன் கதிர் அறுக்கும் சடங்கு நடைபெறுகிறது.
(தற்காலிக வயல்)
அந்த விழாவில் கோயில் குருக்கள் கதிர் அறுக்கும் அரிவாளுடன் தற்காலிக வயலில் கதிர் அறுப்பு நிகழ்வு நடக்கும் பிறகு,
 மாரியம்மன் கோயில் அருகேயுள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு (உண்மை) மீனாட்சியும், சுந்தரேசுவரரும் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்கு காட்சி அளிக்க வருகிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெருகிறது

     இந்த தெப்பவிழாவில் அனுப்பானடிக் கிராமத்தில் வசிக்கும் பூர்வீகக் குடிகளான பள்ளர்களுக்கேவடம்தொட்டுக் கொடுக்கவும், வெள்ளை வீசி தெப்பத் திருவிழாவைத் துவக்கி வைக்கும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பானடியைச் சேர்ந்த ஊர்க்குடும்பனார் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் சென்று வணங்கி ஊர்வலமாகத் தெப்பத்திற்கு வருகிறார்தெப்பக்குளத்தில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இவரை வரவேற்கிறார்கள். பின்புமீனாட்சியம்மன் கோயில் குருக்கள் அனுப்பானடி ஊர்க்குடும்பனாருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு பின்பு பரிவட்டம் கட்டி, தெப்பத்திருவிழாவைத் துவக்கி வைக்க வேண்டுகிறார். அதன்பின் அனுப்பானடிக் குடும்பனார் தெப்பத்தின் வடத்தைத் தொட்டு வணங்கி, வெள்ளை வீசத் தெப்பத் திருவிழா தொடங்குகிறது. தெப்பத்தின் வெளி வடத்தை அனுப்பானடி மள்ளர்களும் மற்றும் பொதுமக்களும், உள்வடத்தை அனுப்பானடி மள்ளர்கள் மட்டுமே வடம்பிடிக்கும் உரிமை உள்ளது. பின்பு காலை இருமுறையும் மாலை ஒரு முறையும் தெப்பம் வலம் வருகிறது. அதன்பின்பு சுந்தரேசுவர பள்ளரும், மீனாட்சி மள்ளத்தியும் தங்களுடைய வாகனத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பெரிய தெப்பமானது 17 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது என்பது உண்மையே. அதற்கு முன்பு இதே சடங்குகள் கிருதுமால் நதியில் நடத்தப்பட்டது. இந்தக் குளம் உண்டான பிறகு இங்கு நடத்தப்படுகிறது.”
மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வீடியோ பதிவுகளை இங்கே காணலாம். ‘மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு’

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.