Saturday, 2 November 2019

கழுகுமலை முருகன் கோயிலும், பள்ளர்களின் பங்குனித் திருவிழாவும்


பள்ளர் கோட்டை என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு அதி மதுர பாண்டியன் என்பான் ஆட்சி செய்து வந்தான். பள்ளர் கோட்டையான பழனங்கோட்டை (வயல் சூழ்ந்த கோட்டை) பிநாளில் பழங்க்கோட்டை (பழமையான கோட்டை) என்றானது. இவ்வூர் தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டி வட்டத்தில் கழுகுமலை அருகே உள்ளது. ‘குழுவானை நல்லூர்’ எனவும் அழைக்கப் பெற்ற கழுகுமலையில் ‘சமணப் பள்ளி’ இருந்தது. பள்ளர் குல மக்களே சமணத்தை தழுவி இருந்தனர். இச்சமணக் கோயிலானது கி.பி.8 -12 ஆம் நூற்றாண்டுகளில் இந்துக் கோயிலாக மாற்றப் பட்டது ஈனக் கூறுவார் நாவலாசிரியர் பூமணி. பாண்டியர்கள் ஆண்டு வந்த பழங்க்கோட்டையை கைலாசபுரம் ரெட்டியார்களும், மறவர்களும் அழித்துள்ளனர். இவ்வூரில் உள்ள பள்ளர் தெருவில் பழமையான சிறிய கல்மண்டபம் இன்றும் உள்ளது. அதிமதுர பாண்டியன் என்னும் பள்ளர் குல வேந்தன் அருகில் வடபுறம் ஒரு கல் தொலைவிலுள்ள உவணகிரியைச் (உவணம் – கழுகு;கிரி – மலை ) சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் வேட்டையாடச் சென்றார். அப்போது இளைப்பாறிக் கொண்டிருந்த வேளையில் ஒரு பசு பாறை ஒன்றின் மீது தானாகவே பால் சுரப்பதைப் பார்த்தாராம். அப்போது மணி ஓசையும் காதில் விழுந்ததாம்.வியப்படைந்த பாண்டிய வேந்தன் எழுந்து பசு அருகே செல்லவும், பசு மிரண்டு ஓடியதாம். பூசை மணி ஓசையும் நின்றுவிட்டதாம். அன்று இரவே முருகன் தனது பக்தர்கள் இரண்டு பேரின் கனவில் தோன்றி மன்னரிடம் சென்று பசு பால் சுரந்த இடத்தில் தனக்குக் கோயில் எழுப்புமாறு கூறிக் கட்டையிட்டாராம். இச்செய்தியறிந்த வேந்தன் உடனே தனது படையணிகளோடு உவணகிரி காட்டுப் பகுதிக்குச் சென்று பசு பால் சுரந்த பாறையைப் பெயர்த்தெடுத்தாராம். அனே ஒரு க்கையும், குகையினுள் மயில் மீது அமர்ந்த முருகன் சிலையினையும் கண்டு வணங்கினாராம். உடனடியாக உடன்காடாய் இருந்த உவனகிரிப் பகுதியைத் திருத்தி முருகனுக்குக் கோயில் அமைத்துத் தன மக்களைக் குடியமர்த்தி அவ்விடத்திற்கு உவணகிரி எனப் பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. (தினமலர் 26 .07 .2000 ப.11).கோவிலினுள் மலைப்பாறைக்கருகில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 குறுக்க பரப்பளவில் நடுவில் மகிழ்வு மணடபத்துடன் நான்கு புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட தெப்பக்கு குளத்தையும், இப்பாண்டிய வேந்தன் வெட்டினான். மழைக்காலங்களில் கரிசல் காடுகளில் பெய்யும் மழைநீர் மேற்க்குக் கண்மாய் மதகு வழியாக அடிப்பகுதியில் அமைக்கப் பட்ட கல் வாய்கால் வழியாகத் தெப்பத்திற்கு வருகிறது. இத்தெப்பத் தண்ணீர் இவ்வூர் மக்களுக்கு இன்று குடிநீராகப் பயன்படுகிறது. இந்தத் தெப்பத்தில் ‘அப்ரேக்’ என்னும் தாமிரச் சத்துள்ள கரிசல் மண் கலந்துள்ளதால் தண்ணீர் கெட்டுப்போகாமலும்,
மருத்துவ சக்தியுடனும் இருக்கின்றது. கோய்ல்லின் பின்புறம் உள்ள மலையின் மேலே பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில் மூன்று சமணச் சிறப்பத் தொகுதிகளும், அய்யனார் கோயிலும், சுனையும் உள்ளன. தென்னகத்தின் எல்லோரா என அழைக்கப் பெரும் வெட்டுவான் கோயிலும் உள்ளது. இந்தக் கோயில் பெரும் பாறையில் 25 அடி ஆழத்தில் சமணத்தைத் தோண்டிய சிற்ப வெளிப்பாடாகும். “பாண்டிய மன்னர்கள் சமணத்தைத் தழுவியபோது அவர்தம் மரபினரான பள்ளர்களும் சமத்தையே தழுவினர். நாயக்கர்களின் படையெடுப்பால் பாண்டிய மன்னர்களும், ஏராளமான பள்ளர்களும் கொல்லப் பட்ட பின்னரே சமணம் என்னும் ‘ஆசீவகம் வீழ்ந்தது’ எனக் கூறுவார் ‘நாவலாசிரியர் பூமணி’.

    கழுகு மலைக்கு ‘அறைமலை’ என்றொரு பெயரும் இறந்து வந்தது. கழுகுமலையின் உண்மையான பெயர் திருநெற்சுரம் என்பதாகும். நெற்சுரம் என்பதே நேச்சுரம் என்றாகியிருக்க வேண்டும். இப்பகுதி நேச்சுரம் நாடு எனவும் வழங்கி வந்தது. இப்பகுதியை வீரநாராயண பாண்டியன் என்ற பாண்டிய மன்னும் ஆண்டு வந்துள்ளான். இவ்வூருக்கு வடபுறமுள்ள குளத்திற்கு ‘வீரநாராயண ஏரி’ என்று பெயர். உவர்ணகிரிக்கும், கவர்ணகிரிக்கும் வரலாற்றுத் தொடர்பு இருந்துள்ளது.பின்னாளில் உவர்ணகிரி என்பது கழுகுமலை என்று பெயர் மாற்றப் பட்டது. பாண்டிய மரபினராகிய பள்ளர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னல் இக்கோயில் நிருவாகம் முழுவதும் எட்டையபுரத்துப் பாளையக்காரனிடம் ஒப்படைக்கப் பட்டது. இன்றளவும் எட்டப்பனின் பிறங்கடைகளே இக்கோயில் வருமானத்தில் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர். இருப்பினும் அதிமதுர பாண்டியன், வீரநாராயண பாண்டியன் ஆகிய அபாண்டிய மன்னர்களின் மரபினர்களான பள்ளர்களுக்கும், இலைமறைகாயாகச் சில உரிமைகளும் பர்பு வழிப்பட்ட மரியாதைகளும் இன்றளவும் இருந்து வருகின்றன.     கழுகுமலை முருகன் கோயிலுக்கு உரிமை உடைய 25 குறுக்க நெல் வயல்கள் கழுகுமலை வடக்குத் தெருவைச் சேர்ந்த பள்ளர்களுக்கு உரிமை உடையதாக உள்ளது. கெச்சிலாபுரத்திற்கு வடக்கேயுள்ள கழுகுமலை முருகன் கோயிலுக்குரிய புன்செய் நிலங்கள் (4 .52 .௦ ஹெ.ஏர்) இவ்வூரைச் சேர்ந்த பெ.குமாரசாமி, பெ.மாரியப்பன் ஆகிய பள்ளர் குலத்தவர்களின் பெயரிலேயே (19 /3A , 19 /4 ) இன்றும் உள்ளது. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழாவின் போது இக்கோயிலில் தொன்று தொட்டு இன்று வரை பள்ளர்களுக்கே முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.தேரினை இயக்கும் தடிபோடும் உரிமை பள்ளர்களுக்கு மட்டுமே உள்ளது.
பள்ளர்கள் தவிர வேறு குலத்தவர் எவரும் தடியினைத் தொடக்கக் கூடாது. “தேவேந்திரன் தொட்டால் தான் தேரோடும்” என்னும் சொல் வழக்கு எல்லா தரப்பு மக்களிடமும் வழங்கி வருகின்றது. தேரின் மேலே நான்கு குதிரைகளை ஒட்டியவாறு தேவேந்திரன் உருவ மரச் சிற்பம் உள்ளது. தேரினைச் சுற்றியுள்ள சிற்பங்கள் யாம் காமக் கலைகளை கற்றுத் தருவதாக உள்ளது. தேரின் வலதுபுறத் தடி கெச்சிலாபுரம், சங்கரலிங்க புரம் பள்ளர்களுக்கும்,இடதுபுறத் தடி கழுகுமலை, ஆலங்குளம் பள்ளர்களுக்கும் உரிமையுடையதாகும்.100 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் பூசகர்களும், நிருவாகிகளும் பள்ளர் ஊர்களுக்கு மேளதாளத்துடன் சென்று, ஊர்க் குடும்பனாருக்கு மாலை அணிவித்து, தேங்காய்,பழம்,வெற்றிலை,பாக்கு வைத்து, வெண்கொற்றக்குடை பிடித்து முதல் மரியாதை செய்து அழைத்து வந்து, தேரோட்டச் செய்வாராம். ஆனால் இப்போது இந்நிலை படிப்படியாக மாறிப் பள்ளர் ஊர்களுக்கு சென்று அழைத்து வரும் மரபு அற்று போய்க் கோயில்களில் வைத்தே பள்ளர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு ஊர்க் குடும்பனார்களுக்குக் கழுத்தில் மாலை அணிவிக்கப் பட்டு, வலது கையில் பூ சுற்றப் பட்டு சந்தனம்,குங்குமம் அணிவிக்கப் பட்டு நல்ல முறையில் தேரோட்டி நகர் வளம் வந்து, விழா எடுத்து மக்களை மகிழ்வித்துத் தேரினை நிலையில் நிறுத்தக் கோயில் பூசகர்களால் (பிராமணர்களால்) வாழ்த்தப் படுகிறார்கள்.(நேர்காணல்,கு.பாதாளை அம்மாள், கெச்சிலாபுரம்).
தேர் நிலை கொண்டு நிற்கும் இடத்தருகே பள்ளர்களுக்கு சமூக மண்டபம் இருந்தது. இம்மண்டபம் பாண்டிய பெர்ரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட நாயக்கர் ஆட்சியின் போது இடித்து தள்ளப் பட்டது. மண்டபம்  இருந்த இடம் பள்ளர் சமூகத்திற்கு பாத்தியப் பட்டதாகவே இருந்தது.  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகப் பள்ளர்களின் அறியாமையாலும், குற்றப் பரம்பரையினரான மறவர்கள் கோயில் நிருவாகத்திற்குள் உட்புகுததாலும் இருந்த அந்த இட உரிமையும் பள்ளர்கள் இழக்க நேரிட்டது. அதிமதுர பாண்டியனின் மரபினரான கழுகுமலைப் பகுதி வாழ் பள்ளர்கள் தங்களது மரபு வளையக் கூட அறிய முடியாத அளவிற்கு வடுகராட்சி வினையார்ரியுள்ளது என்பது வேதனைக்குரிய புலனமாகும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.