Devendra Kula Vellalar community website is a collective space dedicated to the community welfare and to make awareness of who we were and now without polity or provoking other communities.
சேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு.
பின்னர்சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது.
கரிகால்சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
பேரூரில் நான்கு வகைப் பள்ளர்கள் உள்ளனர். அவர்கள் முறையே கொங்குப்
பள்ளர்கள், கடையப் பள்ளர்கள், சோழியப் பள்ளர்கள், பாண்டியப் பள்ளர்கள் என
வழங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வகையினருக்கும் பதினெட்டு
குடும்புகள் (ஊர்,நாடு, பட்டி, பதி, பாளையம்,வட்டகை) உண்டு. அப்பதினெட்டு
குடும்பிற்க்கும் ஒரு பட்டக்காரர் என் நான்கு வகுப்பாருக்கும் சொந்தமானது
பேரூர் நாட்டுத் தேவேந்திர குல வேளாளர் சமூக மடம். இம்மடத்தின்
தூண் ஒன்றில் களிறின் சிற்பமும், மற்றொரு தூணில் மீன் சின்னமும் பொறிக்கப்
பட்டுள்ளது. இந்த மடம் ஏறத்தாள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச்
சிறப்புமிக்கதாகும்.(நேர்காணல்: பு.வே.அசோக் பண்ணாடி, கோவை)
நாற்று நடவுத் திருவிழா
மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா.
நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள்
தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே
பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக்
கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு
நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர்
எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும்
பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில்
போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து
வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.
தேவேந்திரர் குல வேளாளர் பெண்கள் அவர்களது மண்டபத்தில் முளைப்பாரி
வைத்து இருப்பார்கள்.தினந்தோறும் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மன்
உடன் சென்று முளைபாரிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி, தொடர்ந்து மகா
தீபராதனை நடைபெறும்.மாலை பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ரிஷப வாகனத்தில்
நாற்றுகள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குப் புறப்படும் போது நந்தியிடம்
“நாற்று நடும் நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சுந்தரமூர்த்தி கேட்டால் தகவல்
கூற கூடாது“ என கூறும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சுவாமிகள் ரதத்தில்
மண்டபத்திற்கு சென்றனர்.
கோயில் வாயிலில் காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, ஏர் கலப்பைக்கு
பொன்னேர் பூஜை நடைபெறும்.சுந்தரமூர்த்தி நந்தியிடம் சென்று சிவபெருமான்
எங்கு சென்று உள்ளார். என கேட்டதற்கு நந்தி பதில் கூறாமல், தலையை தெற்கு
புறமாக சாய்த்து, நாற்று நடவு மண்டபத்தில் சுவாமிகள் உள்ளதை மறைமுகமாக
தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.தொடர்ந்து பட்டத்து யானை முன்னே செல்ல
தாரை தப்பட்டை மற்றும் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பட்டீஸ்வரர் மண்
வெட்டியுடன், பச்சை நாயகி அம்மன் நாற்றுகள் எடுத்து கொண்டு நாற்று நடவு
மண்டபத்தில் எழுந்தரும் முன்னதாக வயலில் தண்ணீர் நிரப்பப்பட்டு, கலப்பையால்
உழவு செய்யப்படும்.தேவேந்திர குல தம்பதியினர் வேடத்தில் சுவாமிகள் வயலில்
இறங்கி, சுவாமி மண் வெட்டியால் வெட்ட, அம்மன் நாற்றுகளை நடும்போது
பெண்கள் குலவை சத்தம் எழுப்பி, போட்டி, போட்டு குழந்தைகள் முதல்
முதியவர்கள் வரை நாற்றுகள் நடுவார்கள்.அப்போது அங்கு வந்த சுந்தரமூர்த்தி
பட்டீஸ்வரரை சந்தித்து, “திருப்பணிக்கு பொன், பொருள்கள் கேட்டு பாடல்கள்
பாட அதற்கு சுவாமிகள் “இங்கு முக்தி கிடைக்கும் என கூறி பொன் பொருளுக்கு
சேரமானை சந்திக்க ஓலை கொடுக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து சுவாதி திருவீதி
உலா.சுந்தரமூர்த்தியிடம் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால்
சுவாமி வெட்டும் நிகழ்ச்சியும் மகாதீபாரதனையும் சிறப்பாக நடைபெறும்.
பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம்
நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை
நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள்.
இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார்
மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள்
கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று
இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில்
இருந்தே காணமுடிகிறது.
பேரூர் புராணம் கூறும் மள்ளர் தடங்கள்
இயற்றியவர் கச்சியப்ப முனிவர், காலம் 18 ஆம் நூற்றாண்டு திருநகரப்படலம் – 2 செய்யுள் 12 வில்லம்பு கொண்ட மள்ளர் “வாளொடு பரிசைகை வாங்கு மீளிகள் தோளொடு தூணிவிற்
றுதைந்த மள்ளர்கள் நாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள்
தாளொடு போர் பயில் சாலை யெண்ணில” “வாளோடு கேடயமும் கைகளில் பிடித்த
வலிமை மிக்க மள்ளர்கள், தோளோடு உள்ள அம்புக்கூடுகளில் வில்லம்புகள்
நிறைந்த மள்ளர்கள், நல்ல நாட்களில் வீரக் கதைகள் பேசும் மல்லர்களுக்கு
உழைப்போடும் போர்ப்பயிற்சிகள் கற்றுத் தரும் பாடசாலைகள் பல இருந்தன” என்பதை
மேற்கண்ட செய்யுளடிகள் உணர்த்துகின்றன.
15 சுமதி கதிபெரும் படலம் செய்யுள் 54
மல்லர்களுடைய கற்பு நெறி
“வருணமு மொழுக்கமு மல்லற் கற்பொடும் ஒருவியன்
பனைச் செகுத் துலப்பி றீங்குமுன் மருவின மின்னுநம் மாட்டு
ளாரினும் வெருவுறு கொலைப்பழி மேவற் பாலதோ” “மரபும், மரபு
ஒழுக்கமும், மள்ளர்களின் கற்பு நெறியோடு கேடுகள் செய்யும் ஒருவனைக் கொன்று
நீக்கித் தீமைகள் பலவற்றை முன்னே எதிர்த்துப் போராடினோம் இன்னும் தீயவர்
பலர் நம்முள்ளே உள்ளாராயினும் அவர்களைக் கொன்றால் கொலைப்பழி வந்து சேராதோ?”
என்று தீயவர்களைக் கொள்ளத் தயங்கும் மல்லர்களின் மனநிலை குறித்து மேற்கண்ட
பாடலடிகள் தெரிவிக்கின்றன.
பள்ளுப் படலம் செய்யுள் 26 “இந்திரன் பிரம னாரணன் முதலா
மிமையவர் நு கமல மேழி வெந்திறந் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துநா
றனைத்துமாயங்கு வந்தனர் பயில வன்கண நாத ரேவல்செய் மள்ளராய் விரவி
முத்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழி வழி வினை தொடங்கினரால்”
இந்திரன், பிரமன்,திருமால் முதலாகவுள்ள தேவர்கள்
நுகம்,கலப்பை,மேழி,கொழுவு,கயிறு,தார்க்கோல்,இடுபொருட்கள் ஆகியவற்றுடன்
வந்தார்கள். மள்ளராய் முன்னே செல்லும் பட்டிப் பள்ளனாகிய சிவ பெருமானைத்
தொடர்ந்து விரைந்து வந்து அவரின் ஏவல்படி வேளாண் தொழில் செய்யத் தொடங்கிய
செய்தியை மேற்கண்ட செய்யுளடிகள் விளக்குகின்றன.
செய்யுள் 27
பள்ளச் சிறாரான விநாயகனும் முருகனும் வயலில் மீனும் அமையும் எடுத்து விளையாடுதல்
“கடலிடைத் துளபக் கடமுடன்பிடித்த காமுகக் கடவுளு மீனின் தடமுலைச் சுவைப்பால் பருகிய மணிவேற் சாமியும் பள்ளனற்
சிறாராய் இடனகல் வயலிற் கமடமு மீனு
மெடுத்தெடுத்திரும்பணைப் புறத்துத் திடரிடத் துரத்திக்
குறுகுறு நடந்து சிறுவிளை யாட்டையர்ந் தனரால்” திருப்பாற் கடலிலே
மாமன் திருமாலாகிய ஆமையை முன்பு பிடித்துக் கொண்டு வந்து கைலாசப் பள்ளர்
பால் சேர்ப்பித்த யானை முகக் கடவுளும், மதுரை மீனாட்சி பள்ளத்தியாரின்
பருத்த முலைப்பால் சுவைத்த முருகக் கடவுளும் பள்ளருடைய நல்ல மக்களாய்
அகன்ற இடத்தையுடைய வயலிலே உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத்து எடுத்து
வயற்புறங்களில் வீசிக் குறுகுறு என நடந்து சிறு குறும்பாக விளையாடிக்
கொண்டிருந்தனர்.
பேரூர் கோவில் பற்றிய சிறு குறிப்பு
மூலவர்: பட்டீஸ்வரர் அம்மன்/தாயார் : பச்சைநாயகி, மனோன்மணி
தல விருட்சம்: புளியமரம், பனைமரம்
ஊர்: பேரூர்
மாவட்டம்: கோயம்புத்தூர் மாநிலம்: தமிழ்நாடு
திருவிழா: திருவாதிரை
முக்கிய திருவிழா.
பங்குனியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம்,
ஆனியில் நாற்றுநடும் உற்சவம்.
தல சிறப்பு: சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி
தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு “பிறவாப்புளி’ என்ற புளியமரம்
இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில்
உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.
தலபெருமை இறைவன் பள்ளர் சாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.