வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யக் கல்வெட்டுச் சான்றுகள் மிகவும் இன்றியமையாததாகும். “மள்ளர்” என்ற பெயரில் இதுகாறும் ஒரு கல்வெட்டு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. ‘ள’கரம், ‘ல’கரமாகி “மல்லர்” என்று பதிவு பெற்ற கல்வெட்டுப் பொறிப்புகளே ஏராளம் காணக் கிடைக்கின்றன. கல்வெட்டுகள் மிகவும் காலத்தால் பிற்பட்டன. ஆதலால் இலக்கியங்களைப் போன்று கல்வெட்டுகளில் தொன்மையையும், பிழையின்மையையும் காணமுடியாது. ஏனெனில் இலக்கியங்கள் மொழிப்புலமை வாய்ந்த புலவர்களாலும், கல்வெட்டுகள் தொழில்புரியும் கல்தச்சர்களாலும் எழுதப் பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘ள’ கரம் ‘ல’ கரமாவது இயல்புதான் ‘மள்ளர்’ என்பதை ‘மல்லர்’ எனக் கொள்ளின் அக்து பிழையுமாகாது. மள்ளர், மல்லர் என்ற இரு சொற்களையும் தமிழ்ப் புலவர்களும் கையாண்டுள்ளனர். மல்லர் வரலாற்றை மீட்டெடுக்கக் கல்வெட்டுகள் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றி இங்கே பார்ப்போம்.
மள்ளர்
“திருமள்ள வீரசோழப் பேரரையன் மகன் அத்திப் பேரரையன்” (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.107 ) சந்தி விளக்கு வைத்த செய்தியை, செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கூவம் திருப்புராந்தககேசுவர் கோயில் கல்வெட்டு (தெ.க.26 – 360 ) தெரிவிக்கின்றது.
மல்லர்
வடஆர்க்காடு மாவட்டம், வாலாசாபேட்டை வட்டம், திருமால்புரம் மனிகண்டேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.22 / 298 , கி.பி.943 -44 ). நிலம் விற்றுக் கொடுத்த அதிகாரி “கடகன் குஞ்சரமல்லனாகிய சோழமாராயன்” என்கிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், திருமழவாடி வைத்தியநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.5 /635 ) கோயிலுக்கு விளக்கெரிக்க நெய்கொடுக்க சாவா மூவாப்பேராடுகளை ஏற்றுக் கொண்ட மள்ளர்கள் “குஞ்சிர மல்லன் பெருவழுதி,குஞ்சிர மல்லன் காடன், குஞ்சிர மல்லன் திருமால்” (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.59 ) என்கிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /816 ) நெய்க்காக கோயிலுக்கு பசுக்கள் 32 கொடை அளித்தவர், “திரிலோகிய மல்லன்,கிரிதுர்க மல்லன்,புவனேகநேத்திரன் வைதும்ப மகாராஜன் ராஜேந்திர சோழ மும்முடி விஷ்ணுதேன் துரை அரசன்” (ஆய்வுக்கோவை – 2010 , பாரதியார் பல்கலைக் கழக வெளியீடு, ப.572 ) என்கிறது.
“காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /315 பகுதி சி). போருக்குச் செல்ல ஒப்புக்கொண்ட “பரமேசுவர மல்லர் அதுக்கு ஹிரண்யவரம்ம மகராஜ குல மல்லரையும் கூவி விவை ஆகும். போகராத்தம் மகன் ஸ்ரீ மல்லனு,ரண மல்லனு,சங்கரராம மல்லனு என்பார்கள் விவை குடு என்பர் நி……தாமரவோ செய்வர் நாம் போகாமென பந்தாபந்தா மருப்ப…..வ மல்லனான பரமேஸ்வர நான் போவானேன்று தொழுது நின்ற இடம்” என்கிறது.
திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.3 /95 பகுதி – 3 கி.பி.910 ) கோயிலுக்கு விளக்கு வைக்க பொன் கொடை அளித்தவர். “கற்பூண்டி நாடுடைய பரபூமிகன் மல்லனாகிய கண்டராதித்தப் பல்லவரையன்” என்கிறது.
போளூர் திருமலையில் வண்ணச் சித்திரங்கள் உள்ள குகைக்கு கீழே உள்ள சிறிய கோயில் கல்வெட்டு (தெ.க.1 /73 ) “திருமலை பரவாதி மல்லர் மாணாககர் அரிஷ்டனேமி ஆச்சாரியார் செய்வித்த யக்ஷித் திருமேனி” என ஆசிரியராக மல்லர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றது.
காஞ்சிபுரம் வட்டம், சின்னக் காஞ்சிபுரத்தில் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /861 ) நந்தவனத்திற்கு நிலம் கொடை அளித்த மள்ளர் “கங்க மண்டலத்து மகாமண்டலிகள் சோழமாராசன் கட்டி நுளம்பன் ஸ்ரீ மன்னு புசபெலவீரன் ஆகோ மல்லரசன்” என்கிறது.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், சித்தலிங்கமடம் வியாக்கிரபாதீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.26 / 432 ), 26 / 435 ). நிலக் கொடை அளித்த மள்ளர் “திருமுனைப்பாடி கிளியூர் மலையமான் அத்திமல்லன் சொக்கப்பெருமாளான ராஜகம்பீர சேதிராயன்” என்கிறது.
திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழப் பழுவூர் வாதமூலிசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.5 /608 ) நந்தா விளக்கு கொடை அளித்த மள்ளர் “தொண்டிநாட்டு மணலூருடையான் மல்லன் கல்லறை” (மறைமலையடிகள், வேளாளர் நாகரிகம், பக். 41 – 42 ) என்கிறது.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், கீழூர் வீராட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு (இராசேந்திர சோழன் II ,கி.பி.1072 ) (தெ.க.7 /877 ) விளக்கு வைக்க பசு 16 கொடை அளித்த மள்ளர், “கோதண்டன் கண்டனான மதுராந்தக வளநாடாள்வானின் சிற்றப்பன் உபகாரி மல்லன்” என்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், திருசென்னம்பூண்டி சடையார் கோயில் கல்வெட்டு (பராந்தக சோழன் I , கி.பி.941 ) (தெ.க.7 /512 ) மள்ளருடைய மனைவி அரசன் மகளாவார். “இவ்வூருடையான் குணகல்வன் வீர மல்லன் மனைவாட்டி அரசன் கொற்ற பிராட்டி” (ந.சி.கந்தையா பிள்ளை , தமிழ் இந்தியா , பக்.46 -47 ) எனக் கூறுகின்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலஞ்சுழி கபாலீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.8 / 223 ) அரசு அதிகாரி “சேந்தன் மல்லன்” என்கிறது.
திண்டிவனம் வட்டம், திண்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 156 ) கி.பி.1003 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய நிலக்கிழார் “மல்லன் பராதயன்” என்கிறது.
திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலை பழுவூர் அகத்தீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 / 227 ) “பழ்வூர்ச் சங்கரபடி மல்லன் சங்கன்” கொடை பற்றிக் குறிப்பிடுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை தேவராயன் பேட்டை மத்தியபுரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 /15 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய மள்ளர் “கருகாவூர் கிழவன் வேளாண்குஞ்சிர மல்லன் மகன் குஞ்சிர மல்லன் கண்டராபணனான கணபதி” (பரிபாடல் 18 :38 :39 ) என்கிறது.
கிரிட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம், கம்பையநல்லூர் தேசீகாதீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 11 ) “அதிகாரி மல்லணார்” (ஐங்குறுநூறு 62 :12 )என்ற மள்ளர் குல அரசு அலுவலர்ப் பற்றி கூறுகிறது.
கோயமுத்தூர் மாவட்டம், அன்னூரில் மள்ளீசர் கோயில் கல்வெட்டு (ARE 586 /1922 ) அமுதுப் படிக்கு காசு கொடை அளித்தவர் “வல்லங்கிழான் மல்லன் அழகிய திருச்சிற்றம் பலமுடையானான முனையதரன்” (வை.கோவிந்தன், மகாகவி பாரதியார் கவிதைகள், தமிழ் சாதித் தொகுப்பு) என்கிறது.
தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு (தெ.க.2 /66 , கி.பி.985 -1014 ) நட்டுவம் செய்தவர் கோயில் கட்டிய தலைமை சிற்பி “1 .நட்டுவஞ் செய்த மல்லன் இரட்டையன், 2 .தச்சாசாரியார் வீர சோழன் குஞ்சர மல்லனான ராஜ ராஜப் பெருந்தச்சன்” என்று கூறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருக்கோடிக் காவல் திருகோட்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 /78 ) பொன் கொடை அளித்த மள்ளர் “கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வெங்கடேவன் கொடுத்த பொன் பதினைங்கழஞ்சி” என்கிறது.
விருத்தாச்சலம் வட்டத்தில் விருத்தகிரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 / 123 ) விளக்கு நெய்க்குப் பசு வளர்த்தவர் “மல்லன் ஆளப்பிறந்தி” (இ.அப்பாசுமந்திரி, புதுக்காப்பியம் (இலக்கணமும்) ப.297 ) என்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப் பாக்கம் அக்னீசுவரர் கோயில் கல்வெட்டு மள்ளர் குலத்தாரை “இலத்தூர் சேக்கிழான் அத்திமல்லன் சீராளன் பாடாநாட்டு கங்கநல்லூர் மாதெட்டல் இருங்கோளன்” என்றும், “மல்லன் நக்கன் என்றும், பங்கள நாடுடைய பிரிதியங்கரையன்” மகன் அத்தி மல்லனாகிய கன்நரதேவப் பிரிதியங்கரையன்” என்கிறது.
திருமய்யம் வட்டம், சித்தூர் திருவாகீசுவரர் கோயிலுக்குத் தேவதானமாக நாட்டு நியமனம் செய்கின்றவர் “பராந்தக குஞ்சிர மல்லனான இராசசிங்க பல்லவரையன்” என்கிறது.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சம்பை சம்புநாதர் கோயில் மூலதன வடக்குச் சுவரிலுள்ள இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தியது. வாணகோவரையன் சுத்த மல்லன் வேண்ட வேந்தர் இசைவு தந்து அந்த ஊருக்கு எல்லை வகுத்தது பற்றி ” ….. ஓர் ஊர்ரிட வேண்டுமென்று வாணகோவரையன் சுத்த மல்லன் விண்ணப்பஞ் செய்ய…..” எனக் கூறுகின்றது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை அருமைக்குளத்தின் வடபுறமுள்ள பாறையில் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டு “ஸ்ரீ அணிமதயேறி வென்றி மதத்தமிழ தியாரைனனான மல்லன் விட்மன் செய்வித்த குமிழி இது செ……தா தச்சன் சொனானனாரையனுக்கு குடு…..த குமிழ்த்துட… குழச்செய் வடவியது” என்கிறது.
குடிமக்களிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கினை வரியாக பெற்றதை முற்பராந்தகனின் செங்கல்பட்டு கல்வெட்டு, “ஆறு கூறில் புரவுமாயதியும் பொன்னும் பெறுமாறு சோழ கோன்… பறிவையர் கோன் மங்கல வீர சோழன் அத்தி மல்லன் முங்கில் வரி என்னும் வயல்தான் கொடுத்தான்”எனக் கூறுகிறது.
ரைசின் மைசூர் கல்வெட்டில் கொடுக்கப் பட்டுள்ள அரசர்களின் வரிசைப் பட்டியலில் “திரிபுவன மல்லர்” என்ற மல்லர் குல மன்னரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இன்றைய கேரளாவில் வயநாடு பகுதியில் எடக்கல் என்ற ஊருக்கு அருகே உள்ள ஒரு மலைக்குகைக் கல்வெட்டு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டு பழமையுடையது. அக்கல்வெட்டில், “விஷ்ணு வர்மம குடும்பிய குல வர்த்த நஸய லிகித” என்று சேர வேந்தன் விஷ்ணு வர்மனின் குடும்பிய குளம் பற்றிக் கூறுகிறது. (இந்திய தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1897 , எண்.120 -123 HULTSCZH )
கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூர் திரு மருதுடையார் கோயில் கல்வெட்டில், “கரைவழி நாட்டு ஊராளி தென் குடும்பரில் சிங்கன் சோழனான இராஜராஜதேவன்” என்று தென் குடும்பரான இராசராசசோழனால் நிலக் கோடை வழங்கப் பட்டதாக கூறும் கல்வெட்டு ஸ்ரீ வீரநாராயணனின் 7 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
தற்காலத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள ஓர் பூலாங்குறிச்சி. இவ்வூரில் உள்ள கண்மாய் மதகை ஒட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதியில் உள்ள ஒரு பெரும் பாறையில் சுமார் 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகளில் நடுவில் உள்ள கல்வெட்டு முற்றிலுமாக அழிந்து விட்டது. இடப்பக்கம் உள்ள கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. வலப்பக்கம் உள்ள கல்வெட்டு மட்டுமே தெளிவாக உள்ளது. அக்கல்வேட்டுச் செய்தி வருமாறு: “இக்கோயில்களில் பச்செறிச்சில் மலைமேல் செய்வித்த தேவகுலத்து குழலூர்த் துஞ்சிய உடையாரால் வேற்கூரில் பெறப்பட்ட குடும்பியர் பரம்பரையல்லது வேற்றார் தவிர்க்கப்பட வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குடிமியாமலை குடுமிநாத சுவாமி கோயிலில் இரண்டாம் கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் உள்ள கல்வெட்டுச் செய்தி வருமாறு:
“ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடைபன்ம்ரான திறபுவனச் சக்கிரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 27 ஆவது ஆவணிமாதம் 2 தியதி நாள் தென் கோனாட்டு சிகாநல்லூர் குடுமியார் உதையப் பெருமாள் உள்ளிட்டாற்கு புல்வயல் அஞ்சுநிலை ஊராக இசைந்த ஊரவரோம் தீர்வு முறி குடுத்த பரிசாவது முன்னாள் இவர் ஊர்…..”
கோயமுத்தூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளி அணியாதழகியார் கோவில் யாளிக் கல்லில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு கோனாட்டான் வீரசோழனின் 37 வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
“தென் குடும்பரான கோனாட்டான் வீரசோழன்” ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பல்லியில் அருக தேவருக்கு அளித்த நிலக் கோடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.
கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், கடத்தூர் கொங்கவிடங்கேசுவரர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள கி.பி.1233 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில்,
“கரை வழிநாட்டு ஏழூர் தென் குடும்பரில் ஆரியன் உலகுய்ய வந்தனான வீரராசேந்திர அணுத்திரப் பல்லவரையன்” கண்ணாடிப் புத்தூரில் உள்ள தன நிலத்தைக் கோவிலுக்கு அளித்து அதன் வருவாயில் ஐப்பசி மாதச் சிறப்புப் பூசைகள் நடக்க ஏற்பாடு செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை பாதையில் செலக்கிரிசல் என்ற ஊர் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே கருவேலங்குட்டை,வெள்ளைமேடு என்ற இடங்கள் உள்ளன. வெள்ளை மேட்டில் பழைய பானை ஓடுகள் நிறைந்து கிடக்கின்றன. இங்கேதான் பொற்காசுகள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. பாண்டிய வேந்தர் ஒருவர் இங்கு வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. இங்கே உப்பக் காய்ச்சியதனால் இதற்க்கு உப்பிலியன் திட்டு எனவும் பெயருண்டு. செலக்கரிசலில் உள்ள ஈசுவரன் கோயில் முன் சுமார் 4 கல்வெட்டுத் துண்டுகள் கிடக்கின்றன. அதிட்டானப் பகுதியைச் சேர்ந்த கற்கள் இவை. கி.பி.13 -14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்கள் அக்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் துண்டில் வெட்டப்பட்டுள கல்வெட்டு வரிகள் வருமாறு:
” ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குயாண்டு ஏழாவது இக்கோவில் திருநிலை வாகனையும், பொங்கலூர்க்கால் நாட்டுக் கீரனூரில் இருக்கும் ஐங்கைக் குடுமிச்சிகளில் சோழன் உமையான அணுத்திரப் பல்லவரசி தன்மம்” என்று குடும்பர்களைப் போன்று குடுமிச்சிகளும் அரசிகளாக இருந்து ஆண்ட வரலாற்றை மேற்கண்ட கல்வெட்டு மேற்கோள் காட்டுகிறது.
- கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வாரியூர் தென்னந்தோப்பு உப்பளத்தில் உள்ள ஒரு கல்வெட்டு குடும்பன் வில்லியம் பலவணானான சித்திரவல்லியின் உப்பளம் பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டு குலோத்துங்க சோழனின் 41 வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
“…..கோவிராஜ கேசரிபன்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு
யாண்டு 41 -வது இது ….. க்கு வார் திருவாணை நாஞ்சி நாட்டு சுந்தர சோழ
சதுர்வேதி மங்கலத்து சுசீந்திரமுடைய மகாதேவர்க்கு பெருமாள் திருமேனி கலியாண
திருமேனியாக இராசாதிராசப் பாண்டி நாட்டு உத்தம சோழ வள நாட்டு அமரபுரி
மங்கலத்து பொன் பற்றி உடையான் அரையன் மூவாயிரத்தொருவனான குருகுலவராயன்
வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று. இவ்விளக்குக்குப் புறந்தா நாட்டு
வாரியூரான பராக்கிரம சோழப் பேராத்து குடும்பன் வில்லியம்
பலவானான இரண்டாயி…. சித்திரவல்லி பணியில் இரண்டு பாத்தி சந்திராதித்தவற்
விலை கொண்டு குடுத்த குலோத்துங்க சோழன் திருநுந்தாவின்…..” (Trivancore
Archaelogical Series Vol.1, Edited by T.A.Gopinatha Rao, Dept. of
Cultural Publications, Govt. of Kerala, Reprinted in 1988, pg.355-356.)
- தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், இருவப்ப புறம் என்னும் ஊரில் ‘பெரும்படைச் சாத்தான் கோயில்’ உள்ளது. பெரும்படைச் சாத்தான் என்றால் பெரும்படை கொண்டு மக்களைக் காத்தவன் என்று பொருள். இக்கோயில் பள்ளர்களின் குல தெய்வ முன்னோர் வழிபாடாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுச் செய்தி வருமாறு:
“1815 ஆம் ஆண்டு கீதட்டா பாறை சுப்ப குடும்பன் மகன் கரை அடி ஊர் கோடாங்கி இருள குடும்பன் ஸ்ததிரி ஆள்வார் சாத்தாவுக்கு உபயம் ரூ.75 /- கோவில் கோடாங்கி” (பழங்காசுகள், காலாண்டிதழ், ஏப்ரல் 2002 , ப.21 )
இருவப்புரம்
பெரும்படைச் சாத்தான் கோயிற் பூசாரிகளான சுப்பக் குடும்பனும், அவரது மகன்
இருளைக் குடும்பனும், பெரும்படைச் சாத்தானை வழி வழியாக வழிபாடு செய்து
வந்துள்ளனர். இவ்விருவரும் அக்கோயிலில் தங்களது உருவச் சிற்ப்பங்களையும்,
கை குவித்து வணங்கி நிற்கும் நிலையில் அமைத்துள்ளனர். இவ்வாறு கோயில்
திருப்பணிகள் செய்கிறவர்கள் தங்கள் சிலைகளைக் கோயிலில் வைக்கும் மரபினை
முதன் முதலாகத் தொடங்கியன் இராசராச சோழனாவான். இசசோழ வேந்தன் தஞ்சை
பெருவுடையார் கோயிலில் தனது உருவம் பொறித்த செம்புச் சிலையினை அமைத்தான்
என்று அங்குள்ள கல்வெட்டுச் செய்தி கற்பிக்கின்றது. அதைப் போன்று மதுரை
மீனாட்சி கோயில், பேரூர் பட்டீசுவர் கோயில் முதலிய கோயில்களில்
திருப்பணிகள் செய்த பள்ளர்கள் அந்த அந்தக் கோயில்களில் சிற்ப்பங்களாக
செதுக்கப்பட்டு நிற்கும் காட்சிகளைக் காணலாம்.
இப்படியாக
இருவப்புரம் பெரும் படைச் சாத்தன் கோயிலி சுப்பக் குடும்பனும், இருளைக்
குடும்பனும் கழுத்தணிகளையும் குடுமிக் கொண்டை முடித்து சடையை விரித்த
நிலையில் காதுகளில் குண்டலங்களும், இடையிலிருந்து கணுக்கால் வரை பஞ்சகச்ச
ஆடையும், கைகளில் கடகமும், விரல்களில் கணையாழியும், தோள் பட்டைகளில்
வாகுவளையும் அணிந்து காணப்படுவது பள்ளர்களின் மேன்மையை விளக்குவதாய்
உள்ளது.
- திண்டுக்கல் மாவட்டம், பழனி வாட்டம், கீரனூர் கல்வெட்டு பொன் அணிகலன்களை திருவாகீசுவர முடையார் கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்த குடும்பர் பற்றிக் கூறுகிறது. கல்வெட்டுச் சொற்றொடர் வருமாறு:
“கீரனூரான கொழுமங்கொண்ட சோழ நல்லூர் உடையார் குடும்பர் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்கோளன் மணவாட்டி இளையாண்டி“
- கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சங்கிராமநல்லூர் சோழீசுவரர் கோயில் கல்வெட்டொன்று கோயிலுக்கு நிலக் கோடை வழங்கிய குடும்பரை “குடும்பர் அணுத்திரப் பல்லவரையன்” என்று பொரித்துள்ளது.
- ஈரோடு மாவட்டம், குண்டடம் அமிர்தகடேசுவரர் கோயில் இடது நிலையில் உள்ள கல்வெட்டில் குடும்பர் பெயர் இடம் பெற்றுள்ளது. அக்கல்வெட்டு செய்தி வருமாறு:
“ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு இயாண்டு பத்தாவது குண்டோடத்தில் குடும்பரில் இருங்கோளன் …..
காவன்……நா……யா……கொங்கி…….” என்றுள்ளது. (Annual Reports on Indian Epigraphy (ARE) – 130/1920)
இவ்வாறாக சேர, சோழ, பாண்டிய என மூவேந்தர்களின் நாடுகள் அனைத்திலும் குடும்பர்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
உத்திரமேரூர் கல்வெட்டு – 1
தேவேந்திரன் சக்ரவர்த்தி
ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பாரந்தக சோழர் காலம்
அ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மர்க்குயாண்டு பனிரெண்டாவது உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம். இவாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீ முகப்படி ஆணை.
ஆ) இதனால் தத்தனூர் மூவேந்தர் வேளாண் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலம் சம்வத்சர வாரியமும், தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்.
இ) பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானியத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன மைனயிலே அ.
ஈ) கம் எடுத்துக் கொடன்னு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும், சாஸ்த்திரத்திலும், காரியத்திலும் நிபுணர் எனப் பட்டி.
உ) ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்மா சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய் தொழிந்த பெருமக்களுக்கு
ஊ) அணைய பந்துக்கள் அல்லாதாரை குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு
எ) பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வருசம் சம்பத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோலை
ஏ) லை வாங்கி பன்னிருவரும் தோட்ட வாரியம் ஆவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியம் ஆ
ஐ) வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும், முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவவியவஸ்தை ஒலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு
ஒ) ம். குடவோலையில் பேர் எழுதி இடப் படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவார வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத
ஓ) வாரியங்கள் ஒரு கால் செய்தாரை பிள்ளை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெராததாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட
ஓள) ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கேட்டு கிஷ்டர் வர்த்த்திதிடுவாராக வியவஸ்தை செய்தோம் உத்திர மேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம்.
உத்திரமேரூர் கல்வெட்டு – 2
அ
) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வன்மர்க்கு யாண்டு பதினாலாவது
நாள் பதினாறு காலியூர் கோட்டத்து தன கூற்று உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து
சபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர
நாராயணன் ஸ்ரீ பராந்தக தேவன் ஸ்ரீ பரகேசரிவன் மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட
ஸ்ரீ முப்படி ஆ
ஆ) ஞஞையினால் சோழ நாட்டுப்புறங் கரம்பை நாட்டு ஸ்ரீ வாங்க நகரக்கரஞ் செய்கை கெண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமாள் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும் சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும், இடுவதற்கு வியவஸ்தை செய் பரிசாவது குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா
இ) ரே கூடிக் காணிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன மனையிலே அகம் மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்ப்பட்டார் மந்த்ர பிராமணம் வல்லான் ஒதுவித்தறிவானைக் குட வோலை இடுவதாகவும் அரக்கா நிலமே யுடையனாயிலும் ஒரு வேதம் வல்லனாய் நாலு பாஷ்யத்திலும் ஒரு பா
ஈ) ஷ்யம் வக காணித்தறிவான அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆகாரமு டையாரானாரை யேய் கொள்வதாகவும் அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உடையாராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றனவர் பேரவ்வை
உ) க்களையும், அவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தகப்பநோடுப் பிறந்தானையும் தன்னோடுப் பிறந்தாளை வோட்டானையும் உடப் பிறந்தாள் மக்களையும் தன மகளை வேட்ட மருமகனையும் தன தமப்பனையும்
ஊ) தன மகனையும் ஆக இச்சுட்ட…..பர்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும், அகமியாகமனத்திலும் மகா பாதங்களில் முன் படைத்த நாலு மகா பாதகத்திலுமெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுடப்பபட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும் சம சரக்க பதிதாரை பராஸ்யசித்தஞ் செய்யுமளவும்
எ) குடவோலை இடாததாகவும்….தியும், சாகசிய ராயிரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் பரத்ரவியம் அபகரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத பிராயஸ் சித்தஞ் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் ப்ராணாந்திகம்
ஏ) வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெருந்தாகவும் …. பாதகஞ் செய்து பிராயச் சித்தர் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் ப்ராயஸ்சித்தஞ் செய்து சத்தரானாரையும் அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் ப்ரானாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதி எழுதிப்புகவிடப் பெருதாக
ஐ) வும் ஆகா இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இபன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மகா சபைத் திருவடியாரை சபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளீரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா
ஒ) மே மகா சபையிலேரும் மண்டகத்தி லேயிருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் வருத்தராய் இருப்பா ரொரு நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்குலெடுத்துக் கொண்டு நிற்க பகலே யந்திர மறையாதானொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துகே புகவிட்டுக் குலைத்து அக்குடத்திலோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே
ஓ) குடுப்பதாகவும் அக்குடத்த வோலை மத்தியஸ் தன வாங்கும்போது அஞ்சு விரலும் அகல வைத்த உள்ளங்கையாலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்குள் மண்டகத்திருந்த தம்பிமார் எல்லோரும் வாசிப்பாராகவும் வாசித்த அப்பர் திட்டமிடுவதாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஒரே பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரினுந்தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விச்சையா வருத்தரையும்
ஓ) வயோவ்ருத்தர்களையும் சம்வத்ஸர வாரியராக கொள்வதாகவும் மிக்கு நினாருட்பன்னிருவரைத் தொட்ட வாரியங் கொள்வதாகவும் நின்ன அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும் இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன்னுற்றருபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்ய நின்றாரை அபராதங்
ஐ) கண்டபோது அவனை யொழித்துவதாகவும் இவர்கள் ஒழித்த அனந்தரமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன்மைக்ருதயங் கடை காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியே…க்ருக்குடவோலை பரித்தக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்து.
ஓ) க்கு முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி முப்பது வாயோலை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டு பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவனவாகவும் பிற்றை ஆண்டும் இவ்வரியங்களை குடவோலை பறிக்கும் போது இவ்வரியங்களுக்கு முன்னம் செய்
ஓ) த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக் இடப் பெருததாகவும் மத்தியஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி சுத்தன் ஆச்சி தன பின்னன்றி மாற்றுக் கணஓள) க்குப் புகழ் பெருதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மாற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெருதாராகவும் இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயாஅக்கு) ல் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்ட யாக்ரமவித்த பாட்டனாகிய சேர்மாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத்து அப்யுதயமாக துஷ்டர் கேட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையாம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வியவஸ்தை மத்யஸ்தன்
அ) காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்பிரியனேன்.
குடும்பு ஆட்சியில் குடவோலை முறை குறித்து மேற்கண்ட உத்திரமேரூர் கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் இக்கல்வெட்டு இராசராசச் சோழனை தேவேந்திரன் சக்ரவர்த்தி குஞ்சர மல்லன், இராசமல்லன் எனவும் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
குடும்பு வாரியம்
திருப்பாற்கடல் கற்ப்பூரிசுவரர் கர்ப்பகிரக வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு பரகேசரிவர்மன் பராந்தக சோழன் (கி.பி.918 ) காலத்தியது. இது குடும்பு வாரியப் பெருமக்களும்,தோட்ட வாரியப் பெருமக்களும் கழனி வாரியப் பெருமக்களும், ஏரி வாரியப் பெருமக்களும் பெரிய ஏரி மராமத்து செய்தது பற்றிக் குறிப்பிடுகின்றது.
“ஸ்வத்ஸ ஸ்ரீ மாதிரி கொண்ட சேர்ப்பரகேசரி பன்மர்க்குயாண்டு பன்னிரண்டாவது கோட் நாள் நூற்றுருபத்தொன்பது பருவூர்க் கோட்டடத்துக் காவதிப்பாக்கமாகிய அமணி நாராயணச் சதுர்வேதி மங்கலத்து……இவ்வாட்டைக் குடும்பு வாரிய பெருமக்களுந் தொட்ட வாரியப் பெருமக்களும் பட்டர்களும் வசிட்டர்களும் உள்ளிட்ட மகாசபையார் பணியால் இவ்வாண்டு ஏரி ாரிகஞ் செய்கின்ற ஏரிவாரிகப் பெருமக்களோம் சோழ நாட்டுப் பாம்புணிக் கூற்றுத்து அரைசூர் அரை சூருடைய …. ன் தீரன் சென்னிப் பேரரையர் பக்கல் ஒன்பதரை மாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சுப் பொன்னும் எம்மூர் பெரிய ஏரி கரை மண்ணாட்டுகின்ற ஓட நாயன்மார்க்கிடுவதற்க்கு முதலாக கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சு பொன்னாலும் வந்த வர்த்தியாலேய் பாண்டியனும் ஈழத்தரையனும் வந்து பெருமானடிகளோடு வேரூர் அஸ்திகடை செய்த நான்று இச்சென்னிப் பேரையர் சென்ற இடத்துப்பட்ட சேவகர் காரிமங்கலமுடையானுக்கும் வலிக் குட்டிக்கும் பெருநாயகனுக்கும் அழிநிலை மாடம்பிக்கும் ஆக இந்நால்வரையும்.“
பள்ளு நூல்களில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கூடற் பள்ளுவில் வடிவழக் குடும்பன் குடும்பு செய்து ஊர் மக்களுக்கு உழைத்த செய்தியைக் கீழ்கண்டவாறு உரைக்கிறது.
செய்யுள் 88
“ஆளுக்கும் பணியாள் – சீவலப் பேரிக்குள் காணியான் – வில்லென்றும்
அரிப்பிட்டுப் போட்டான் – பள்வரி தெரிப்பிட்டுக் கோட்டான்
……………………………….. குடும்பு செய்தூராருக் குழைத்தான் – அழகர் சொம்மார்க்கப் பிழைத்தான்“
என்று வடிவழகக் குடும்பன் குடும்பு செய்து ஊர்மக்களுக்காக உழைத்துத் தாழ்வின்றி தானும் பிழைத்த செய்தியை வெளிப்படுத்துகிறது. இங்ங்கனம் குடும்பு என்னும் சொல் ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் தலிமைப் பதவியைக் குறிக்கிறது.
கி.பி.1891 இல் பதிப்பிக்கப்பட்ட ஆற்றங்கரை சம்சுதான வித்துவான் கடிகை ஐந்கமுத்து புலவர் இயற்றிய பொய்கைப் பள்ளுவில், பொய்கைக் குடும்பன் குடும்பு செய்த வரலாற்றினைக் கூறுவதாகவுள்ள பாடலடிகள் வருமாறு.
செய்யுள் 27
“இன்னமென்று சொல்வேனேன் பள்ளியர் தம் பெருமை
யிதற்க்குமே லதிகமா மியம்பக்கே ளும்
மன்னு திருநெடுமால் கொண்டதும் பள்ளியீசன்
மற்றோர்சேர் வதும்பள்ளி மாநிலமெல்லாம்
பண்ணுந் துலுக்கர்தொழு கையும் பள்ளி வாசல்கல்வி
பயிலு மிடமனைத்தும் பள்ளி யிவற்றால்
தென்னன் சொக்கலிங்கபெத் தண்ணல்பண் ணைக்குடும்பு
செய்யடியேன் குலத்திற் சிறந்தோ னானேன்“
- திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மன்னார் கோயில் குலசேகரப் பெருமாள் கோயில் கல்வெட்டு (ARE No . 398 of 1916 )
-
- “வடவாறி நாட்டு உரிமையழகியானில் பரிக்கிரகம் தேவேந்திர வல்லபன்“
- “தேவேந்திரப் பல்லவரையன்” என்கிறது.
- தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், மாற மங்கலம் சந்திரசேகர் கோயில் கல்வெட்டு (தெ.க.8 / 445 ) நந்தா விளக்கிற்கு நிலம் விற்றுக் கொடுத்த ‘தெய்வேந்திரப் பேரரையன்’ பற்றிக் கூறுகிறது. தேவேந்திர குலத்தார் பெயரில் சதுர் வேதி மங்கலம் அமைத்த செய்தியை “மாற மங்கலமான தேவேந்திர வல்லப சதுர்வேதி மங்கலம்” எனக் குறிக்கிறது.
- சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் கல்வெட்டு (தெ.க.8 /178 , 8 /179 , கி.பி.1098 ) நிலம் விலை முடிக்கப்பட்ட செய்தியைக் கூறுகையில் “கீழக் கோட்டையாளன் கலங்காத கண்டநல்லூர்த் தேவன் தொங்கனான மாளவ தேவேந்திரப்ப அரையன் — சக்ரவர்த்தி மல்லனான அஞ்சாத கங்கராயன்” என்கிறது.
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் சொக்க லிங்கபுரம், சோழீசுவரர் கோயில் கல்வெட்டு (தமிழக தொல்லியல் கழகம்,ஆவணம் 11 , சூலை 2000 ப.48 ) “தேவேந்திரன் நாடாழ்வான்” என்று தேவேந்திரன் நாடாண்ட மரபினர் என்பதைக் காட்டுகிறது
- கரூரில் இருந்து கோயமுத்தூர் செல்லும் பாதையில் 27 கல் தொலைவில் உள்ள தெண்ணிலை சிவன் கோயில் கல்வெட்டு “ஸ்வஸ்தி ஸ்ரீ சிவல்லப தேவற்கு யாண்டு மூன்றாவது என்று தொடங்கும் இக்கல்வெட்டில் இவூரின் பெயர் ‘தெண்ணிலி’ என்றும், இறைவனின் பெயர் “தெண்ணிலி நாயனார் தேவேந்தீசுரமுடைய நாயனார்” (இரா.செயராமன் , கல்வெட்டு, காலாண்டிதழ் , மே. 1992 , ப.34 ) என்றும் கூறுகிறது. இக்கல்வெட்டில் கோயிலுக்குக் கொடை அளித்த செய்தி குறிப்பிட்டுள்ளது.
- கோயமுத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், அவினாசியில் அம்மன் கோயில் மகாமண்டபத் தென்சுவர் கொடுன்கையின் கீழ் காணப்படும் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு
“….இறையிலியாக உழுது பொதுவானதாகவும் இவனுக்கு இக்காணி பெற்று மற்றும்
எப்பேர்ப்பட்ட சர்வ பிராப்திக்கும் உரித்தாவதாக சந்திராத்திதவரை இவன்
மக்கள் செல்வதாக நம் ஓலை குடுத்தோம். முதலைவாய் பிள்ளை குடுத்த வேளானுக்கு
இப்படிக்கு செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க. இப்படிக்கு அருளால் ஆதி
சண்டேஸ்வரன் காஸ்யபன் சீகாழி மொழி பாகன் எழுத்து யான தட்டுருவ விட்ட
இப்படிக்கு திருகல இராமபிரான் எழுத்து சுந்தரபாண்டிய சக்கரவர்த்தி எழுத்து இப்படிக்கு மாதேவாண்டான் எழுத்து இப்படிக்கு ஆளுடையான் எழுத்து இப்படிக்கு தேவேந்திரப் பிச்சன் எழுத்து
இப்படிக்கு ஆளுடையநாயன் எழுத்து இப்படிக்கு கூத்தப் பெருமான் எழுத்து
இப்படிக்கு அருளால் ஆதி சண்டேஸ்வரன் ஸ்ரீகரணத்தான் எழுத்து இது
பன்மாஹேஸ்வரரட்சை” என்கிறது.
- கோயமுத்தூர் மாவட்டம், அவினாசி கருணாம்பிகை கோயில் மகாமண்டப வடக்குச் சுவரில் காணப்படும் கி.பி.1289 ஆம் ஆண்டைய கல்வெட்டு
“……
ஆண்டு ஒன்றுக்கு நெல்லு நூற்று ஐம்பத்திரு கலனே குறுணி அளந்து போதக்
கடவார்களாகவும் இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்ளவும். இதற்க்கு
சிலவு இரண்டுப்படி அரிசி ப….கையிலே சந்திராதித்தவரையும் அ…..மாதவாண்டான்
எழுத்து. இப்படிக்கு ஆளுடையான் எழுத்து.ஆதிசண்டேஸ்வரன் ஸ்ரீகரணத்தான்
சம்பந்தன் எழுத்து. ன தட்டுருவ விட்ட சுந்தரபாண்டிய சக்கரவர்த்தி எழுத்து. இப்படிக்கு தேவேந்திரப்பன் எழுத்து…
இப்படிக்கு ஆளுடையநாயன் எழுத்து. இப்படிக்கு கூத்தப் பெருமான் எழுத்து….
இவை ஆடிமாதம் இருபத்தொன்பதாம் தியதி முதல் சந்திராதித்ய வரை செல்வரை……..” என்கிறது.
- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மூன்றாவது தொரை மண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கி.பி.1276 இல் அரியணை எரிய இரண்டாவது ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது. “அப்பன் தேவேந்திர வல்லப பிரமாராயர் ஜீ வைஷ்ணவர்களுக்கு” அமுது படைக்க நிலம் கொடுத்த செய்தியைக் கூறுகின்றது. தேவேந்திர வல்லபன் என்னும் வேந்தன் பெயரால் பிராமணர்களுக்கும் விருதுகள் வழங்கப் பட்டன என்பதை அக்கல்வெட்டுக் கூறும்
-
- “ஸ்வத்ஸிஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முட்கொண்ட சோழபு ….. சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு 15 எதிராமாண்டு பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லப சதுர்வேதிமங்கலத்து மகாசபையோம் இவ்வூர் சிகைலாசமுடையார் சந்திரசேகர ஈஸ்வர முடைய நாயனார்க்கு சண்டேஸ்வர விலையாக….” என்கிறது.
- “ஸ்வத்ஸிஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்ரவர்த்திகள் சோனாடு… கொண்ட சோழபுரத்து வீர அபிசேகம் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு 17 -வது பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லப துர்வேதி…. லத்து மகாசபையோம். இவ்வூர் உடையார் சந்திரசேகர் ஈசுவரமுடைய நாயனார் தேவதானக் கருஞ்செய்யும் இவ்வூர் அழகிய பாண்டிய விண்ணகர்…..” என்கிறது.
- “ஸ்வத்ஸிஸ்ரீ. திரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 11 -வது பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லபச் சதுர்வேதிமங்கலத்து திருமேல் கோயிலில் அழகிய பாண்டிய விண்ணகர் எம்பெருமான் கோயிலில் திருவடி பிடிக்கும் நம்பிமாற்கு…….” என்கிறது.
- “ஸ்வத்ஸிஸ்ரீ. பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லப சதுர்வேதி மங்கலத்து மகாசபையேம்… மற்கே…. பெருமாள் திருவடி பிடிக்கும் நம்பிமார் கண்டு ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 11 -வது அற்பிகை மாதம் இவ்வூர் திருவிடையாட்டம் தாங்கள் அனுபவித்து வருகிற நிலத்துக்கு இந்நூல் முதல் வரி நீங்கப் … இவை ஸ்ரீபொகலூர் கூத்தன் பெரிய நம்பியான கருணாகர நம்பி எழுத்து. இவை இறைவாரபூற் செந்தாமரைக் கண்ணன் சூரிய தேவனான தேவேந்திரப் பிரமாதராயன் எழுத்து. இவை சிபொகலூர் சிதரன் சிகைலாஸமுடையானான சிவல்லபப் பிமாதராயன் எழுத்து…..” என்கிறது.
- “ஸ்வத்ஸிஸ்ரீ. ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு 17 -வதின் எதிராமாண்டு பராந்தவ…. மாறமங்கலமான தேவேந்திர வல்லபச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையோம். வி…..திரசேகர ஈஸ்வரமுடைய நாயனார் திருவாசலில் கூட்டக் குறைவேறக் கூடியிருந்து…..” என்கிறது.
- “திருமுகைப்படி திரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான் பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லபச் சதுர்வேதிமங்கலத்து சமையாற்கு தங்களூர் முன்பு குதிரைச் செட்டிகள்…..” என்கிறது.
“தேவேந்திர வல்லபன் பெயரால் சதுர்வேதி மங்கலம்” இருந்ததை மேற்கண்ட தென்னிதியக் கல்வெட்டுகள், தொகுதி – 8 , எண். 446 , 447 , 451 – 454 விளக்குகின்றன
- திருப்பத்தூர் அருகில் சொக்கலிங்கபுரம் அழகிய சோழீசுவரர் கோயில் கல்வெட்டில் “தேவேந்திர நாடு” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
-
சங்கரன்கோயிலில் பழங்காலப் பாண்டியரலால் கட்டப் பட்ட மண்டபங்களும், அவைகளில் உள்ள சிற்பச் சிலை வேலைப்பாடுகளும் காண்போரைக் கவரும் வண்ணம் உள்ளன. 1506 ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்ட பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகளும் சங்கரன்கோயிலில் காணப்படுகின்றன. இது இவரது 33 வது ஆட்சியாண்டைச் சார்ந்ததாகும். கோயிலைச் சுற்றியுள்ள சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளில் பராக்கிரம பாண்டியன் நிலக்கொடைவழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின் தெற்குச் சுவரில் சிதைந்துள்ள கல்வெட்டு சர்வசித்து சகம் 1510 இல் அவனது 26 ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்டுள்ளது. கி.பி.1562 -1605 வரை அதிவீரராம பாண்டியன் சங்கரன் கோயில் பகுத்யை ஆட்சி செய்துள்ளான். இவனே கழுகுமலைப் பகுதியையும் ஆண்ட பாண்டிய மன்னனாவான். சங்கரன் கோயிலின் வடக்குப் பக்கமுள்ள ஒரு கல்வெட்டில் குலசேகர பாண்டியன் சகம் 1475 ஆகிய தனது மூன்றாவது ஆட்சியாண்டில் கோட்டூர் என்னும் ஊரை இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது.( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.14-15 )
மற்றுமொரு கல்வெட்டில் (கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு)“
“விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்தில் பறையர் தங்களுக்கு இந்த
வரிசை உண்டென்று நடப்புவித்தார்கள். ஆனபடியினாலே ஐந்து சாதிக்கும் பிள்ளை என வேந்தலிலிருக்கும் அனுமக் கோடி அடிச்சாலும் (வாகைகுளம்) குட்டிக்குடும்பனும் அல்லகர்த்தாகுடும்பனும், கூட்டிக் கொண்டு சமூகம் ஏறி விண்ணப்பித்துக் கொள்ள ஆதி பூர்வ ராஜாக்கள் கொடுத்த பட்டயம் பார்த்துப் பறையர்களுக்கு உண்டான வரிசை நன்மைக்கு மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த
மாராப்பும், ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் மஞ்சியில் தண்டியக்
கொம்பில்லாத வீடும் துன்மைக்குக் கட்டணமும், பட்டடப்
படிக்கு கட்டளையிட்டோம். குடும்பிகளுக்கு குதிரைக்குடையும்
இட்டு இந்த இரண்டு கோட்டை விதைப் பாடும் கொடுத்து இந்த
வரிசைப் பரிகாரம் கட்டளை இடுவித்தோம். இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்“ ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D – 3226 , 432 /1914 )
என்று திருநெல்வேலி -சங்கரன் கோவில் – கரிவலம் வந்த நல்லூர்க்கோயில் கல்வெட்டுகள் குறித்துள்ளன. (தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D – 3226 , 432 / 1914 )
உபரித் தகவல்
‘பல்லவ
மல்லன்’ என்ற போர் வீரன் பல்லவ நாட்டில் தலையெடுத்தான். மாவீரனனான இவன்
பல்லவ மரபைச் சார்ந்தவனில்லை என்ற போதிலும் கூட நாட்டைக் காக்கப் படை
திரட்டினான். பிறகு அந்நாட்டிலுள்ள சிற்றரசர் அனைவரையும் வென்றான். வெற்றி
வாகை சூடியதும் அந்நாடு முழுவதற்கும் தானே மன்னனாகவும் முடி சூடிக்
கொண்டான். பல்லவ மல்லனுடைய வீரப் போர் வெற்றிகள் பல நாட்டு மன்னர்களையும்
கதிகலங்கும்படி செய்து விட்டது. (பதிப்பாசிரியர் எம்.செ.காலிங்கராயர்,
செண்பகராமன் பள்ளு,பக். 43 )
More Details…
In ancient times (~ 3000-1000 BC Indus valley civilization) Dravidians (Tamilians – Please read Who are Dravidians below) lived and ruled through out India (Current India, Pakistan, Bangladesh, Thailand, Laos, Afganistan, Parts of Iran)Pandian, Chola and Cheran Kings came from some other place (legend and hearsay says from the drowned continent Lemuria), settled in South India and diverted rivers and built banks to rivers, brought different spices of plants like rice (paddy), Banana, Turmeric, Beatle nuts, Palm tree etc, dug wells, created agriculture lands, created towns, cities, spread the Tamil language by organizing Tamil Sangam, created the concept of family with father as the head of the family, formed democracy (elected representatives called Perumal as chiefs for a one time tenure of 12 years), devised noble rule of war (Fight at a designated battle field to decide the victor and loser, fight only after day break and before sunset, fight only the designated solders, and that too only the soldiers that have weapons and not to attack a coward soldier who ran from attack) and created civilization.
Legends passed through generations say that Pandian, Cholan and Cheran were the children of same Mother and lived together in Korkai. The eldest, Pandian stayed there but Cholan and Cheran moved north and Cheran established in Vanjee and Cholan established in Ooraiuoor.
There were several language speaking people at that time. The important one among them were Naagar (Nagas), Oliar, Aruvaalar, Yeinar, Kurumbar.
To spread the Tamil language the three Tamil Kings, especially Pandian kings took great measure. Pandian King (Ookira-peru-valu-thee – considered to be the incarnation of Lord Shiva) researched the language with the sage Agathian and started the First Tamil Sangam (A campaign ) to spread the language.
Pandian King Ookiraperuvaluthee went to Deva World, and brought sons of Devas and Devis with the seedlings of several grains and plants, dug several wells, started agriculture and made the land fertile.
Somasundara Pandian (Lord Shiva) conquered Himalayas and established his reign there.
Tadathagai Peraatee (Meenkshi Goddess Parvathi), Pandian Princess conquered up to Himalayas and married Lord Shiva.
Lord Murugan (Pandian Prince, Son of Lord Shiva and Goddess Parvathi) commandeered the army of Devas and conquered several Kingdoms.
Chola King Gaandamun dug the Koodaku mountain and brought the Kaveri river to Chola country.
Chola King Karikaalan (ancient Cholas) build the Kall-aanai (Dam) to divert the Kaveri river to the lands were water was necessary. Another Chola King Karikaalan (later Cholas) built banks to the river Kaveri.
Karigaalan’s grand son Eelandirayan conquered the Tondaimandalam lands from the native Oliar, Aruvaalar, Yeinar, Kurumbar and immigrated Tamilians to that land and started agriculture in that area. His dynasty later became the Pallavas.
Lord Buddha liked the Malla Kingdoms, lived and spent his last years in the Malla Kingdom and died there. Last rites to Buddha were done by the Mallas. (The Malla country was a non-Monarchy at that period)
With Pandian and Tamil Kings, colonies of Roman subjects engaged in trade and settled in South India. Roman soldiers (European soldiers) acted as body guards to Tamil Kings and Roman soldiers worked in the Pandian army and army of other Tamil Kings.
Pandian Nedunj-Cheliyan was called as Aryappadai-Kaderetha- Nedunj-Cheliyan, meaning Destroyer of Aryan army – Nedunj-Cheliyan Pandian. (Please review who are the Aryans below as there is a false notion that Brahmins are Aryans)
During the end of 3rd Century A.D. the Tamil Kings went into oblivion (became smaller kings) due to Kalabiras. The 3rd Tamil Sangam stopped with that. (Till now there is no history pointing to who the Kalabiras are. But Thiru.R.Devasirvatham thinks it was an internal revolt that happened through out India that lead to Chaos through out India. It should be noted that this was the period when the Buddist Mauryan Emperor Brihadratha was murdered by one of his commanders and a Brahminism / Hinduism based society started emerging in North India).
The Pallavas moved to the north (current Andra State) during this period, adopted a different language, but came back to Tondaimandalam in the 4th Century AD and expanded and ruled till 9th Century AD.
During 6th Century AD Pandian King Kadungoan defeated the Kalabiras and once again established the Pandian Kingdom.
Pandian Kings were Jains at this time. Then Pandian King Nedumaaran (also called as KoonPandian) who married Chola Princess Mangayar-karaasi became Saivam (Devotee of Lord Shiva) from Jainism.
Pandian Kings supported the Cholas during this time and waged several wars against the Pallavas and gradually expanded their empire into the Pallava Empire.
During the 9th Century AD, Chola King Vijayalayan defeated Muthirayar (A part of the Pandian Clan) in Thanjavur and established the Chola Kingdom.
The Chola empire expanded under Raja Raja Cholan (Original name Arul-molli-varman) and his son, Rajendra Cholan. Their empire was unchallenged through out India. They had their administrative control upto Mid India (Maharastra, Madyapradesh, Orissa, Bengal ) in the North, the entire South India, Srilanka, Thailand, Malaysia, Indonesia in the South.
The Cholas built 1000s of Temples through out their Empire. The Bragadeeswarar Big Temple in Thanjavur, Chidambaram Natarajar Temple, Tiruvarur Temple were built by Cholas. (A side note: At present it is not known who built the Temples in Elephanta Caves. The Elephanta Caves have big sculpture of Lord Murugan. Lord Murugan is considered as a Tamil God. So the Elephanta Caves may be built by a Malla / Tamil King)
During 13th Century AD, Chola Empire began to decline. Because of the humiliation done to Pandian King by Cholan Kulothungan earlier, Pandian King SundaraPandian destroyed most part of Cholan Empire, burnt Tanjavur leaving only the Temples and the Convention Center (16 leg Mandapam) Built by Cholan Karikaalan.
The Pandian Empire was rich with GOLD, Pearl and Spices. The City Gates of Madurai (Capital of Pandian King at that time) was ornamented with Gold and Pearls.
During 14th Century Pandian empire began to decline because of frequent attacks my Muslim Kings. Muslim Kings raided cities, killed hundreds of thousands of citizens and took huge amount (tonnes and tonnes) of gold and Jewellery to Delhi. (It is to be noted there were about 20,000 Muslim soldiers in the Pandian army. But these soldiers betrayed the Pandian Kings and joined the Muslim army when Muslim army attacked Pandian Kingdom. A part of the modern Kallan community was Muslims at that time. As evidence the Kallan community follow certain Muslim customs like Sunnath -removing the foreskin of Pennies, having horse tail’s hair in the Mangalsudram -Taali or Wedding chain of the bride – wife)
During the end of 14th Century Vijayanagar army chiefs came to Madurai and defeated the Muslim rulers with the help of Pandian Chiefs and the Vijayanagar army chief established his rule in Madurai. Gradually Vijayanagar army and citizens moved to Chola and Pandian Kingdom and removed the privileges of the Tamil elite – Removal of land ownership from Tamils (Mallar – Devendrakulathar, Original Vellala) and forcebly transfered ownership of Land and Title to Telugu Nayaks, Telugu Brahmins and others who supported the Nayak rule. New rules were passed to stop contact with Pandian and their relatives by general citizens. Rule were passed to prevent contact and intermarriage between the 18 worker communities that supported the Tamil society and Tamil Kings, Nayaks encouraged Pallu literature and changed Name of the successors of Tamil Kings and their relatives from Malla to Pallan. Due to censure, low status and avoidance of contact with supporters of Tamil Kings many of the Mallars migrated to Kerala (Mannradiar), Ceylon and Malayasia. The Nayaks allowed other Tribes to Plunder the Mallas, motivated other communities to challange the Mallas and to claim their title, elevated the status and privilege of supporters of Telugu rule, Telugu Brahmins and encouraged Sanskrit.
After the Mallas-humiliated as Pallas, went through several distress, oppression and quarantine, many of them converted to Christianity, Islam but many still remain as Hindus. It should be noted and emphasized again that the Mallas were the originators, guardians, Gods, Goddess, devotees and builders of the Saivite and Vishnavite religion which is the basis of current but transformed Hinduism. But the descendants of Mallas were made low in the society that enjoys and cherishes the culture and civilization built by the Mallas.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.