Tuesday, 5 November 2019

பள்ளு இலக்கியத்தில் மள்ளர்களின் வாழ்க்கை முறைகள்


முன்னுரை:

ிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். பள்ளு நூல்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் மட்டும் கூறப்படும். மற்றவர்களின் பெயர்கள் கூறப்படுவது இல்லை. பள்ளனின் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மூத்த பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊர் அல்லது நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இளைய பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊரின் பக்கத்து ஊர் அல்லது பக்கத்து நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இரண்டு பள்ளியர்களில் ஒருத்தி சிவன் அடியாராகவும் மற்றொருத்தி திருமால் அடியாராகவும் காணப்படுவர்.

பெயர்க் காரணம்:

பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் ஆதலால் இதற்குப் பள்ளு என்ற பெயர் ஏற்பட்டது. பள்ளர்கள் என்போர் யாவர்? உழவுத் தொழில் செய்யும் மக்கள் பள்ளர்கள் ஆவர். இவர்களில் பெண்கள் பள்ளியர், பள்ளத்தியர் என அழைக்கப்படுவர். எனவே, வயல்களில் உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனலாம். 

சிலப்பதிகாரத்தில் உழவர் பாடல்கள்:

சிலப்பதிகாரம் மருத நில மக்கள் வாழ்க்கையை, அதாவது வயலும் வயலைச் சார்ந்த இடத்திலும் உள்ள மக்களின் வாழ்க்கையைக் கூறுவதைக் காணமுடிகின்றது. அப்போது இளங்கோவடிகள் 'ஏர் மங்கலம், முகவைப் பாட்டு' என்பனவற்றைக் குறிப்பிடுகின்றார். (நாடுகாண் காதை, 125 :134-137) 

ஏர்மங்கலம்:

ஏர்மங்கலம் என்பது யாது? முதன் முதலாக ஒரு நல்ல நாளில் ஏரைப் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பர். இவ்வாறு, பொன் ஏர் பூட்டி நின்ற உழவர்கள் தம் உழவுக் கருவியாகிய ஏரை வாழ்த்தி, நன்கு விளையுமாறு வேண்டிப் பாடும் பாட்டு ஏர் மங்கலம் எனப்படும். வயல்களில் நெற்ப்பயிர்கள் நன்றாக விளைந்த பின்பு அவற்றை உழவர்கள் அறுப்பர். அவற்றை வீட்டிற்குச் சுமந்து வந்து பரப்பி, மாடுகளால் மிதிக்கச் செய்து நெல்லையும் வைக்கோலையும் பிரிப்பர். அப்போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு எனப்படும். எனவே, சிலப்பதிகாரம் காட்டும் ஏர் மங்கலம், முகவைப் பாட்டு என்பன உழவர்களின் வாழ்க்கையையே காட்டுகின்றன எனலாம்.

பள்ளு இலக்கியத்தின் தோற்றம்:

இவ்வாறு காணப்படும் உழவர்கள் பற்றிய செய்திகளும், உழத்திப்பாட்டு முதலிய வழக்காறுகளும், பாட்டும் கூத்துமாக அமைந்துள்ள பள்ளு என்ற சிற்றிலக்கிய வகை தோன்ற வழி செய்திருக்கலாம். பழங்காலத்தில் உழவுத் தொழிலில் ஈடுபட்ட பள்ளர், பள்ளியர்களின் வாழ்க்கையை ஒட்டிய கூத்து வகைகள் பாட்டும் தாளமும் பொருந்தச் சாதாரண மக்களால் விரும்பி ஆடப்பட்டு வந்தன. இந்த ஆட்டங்களையும் பாடல்களையும் கவனித்து மகிழ்ந்த புலவர்கள் அவற்றை இலக்கியமாகப் படைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கலாம். அதன் விளைவாகவே பள்ளு இலக்கியம் தோன்றியது என்றும் கருதுவர். 

பள்ளு நூல்களின் வகைகள்:

பள்ளு இலக்கியத்தின் முதல் நூலாக முக்கூடற்பள்ளு என்ற நூல் அமைகின்றது. இந்நூல் 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது என்பர். அதன் பின்னர் ஞானப்பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, குருகூர்ப் பள்ளு, சிவசயிலப் பள்ளு, வைசியப்பள்ளு, வடகரைப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, சீகாழிப் பள்ளு, செண்பகராமன் பள்ளு, தில்லைப் பள்ளு, வையாபுரிப் பள்ளு, கண்ணுடை அம்மை பள்ளு, திருப்புன வாயிற் பள்ளு, கதிரை மலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, குற்றாலப் பள்ளு, திருச்செந்தில் பள்ளு, போரூர்ப் பள்ளு, இருப்புலிப் பள்ளு, திருவிடை மருதூர்ப் பள்ளு, புதுவைப் பள்ளு போன்ற பல நூல்கள் தோன்றின. 

இலக்கணம்:

பல்வேறு சிற்றிலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாட்டியல் நூல்களில் பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையின் இலக்கணம் காணப்படவில்லை. ஆனால், நவநீதப் பாட்டியலில் பிற்காலத்தில் சேர்க்கப்பெற்றுள்ள பல பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றுள் நான்கு பாடல்களில் உழத்திப் பாட்டு என்றால் என்ன என்று விளக்கப்படுகின்றது. உழத்திப் பாட்டைக் குறிப்பிட்டுவிட்டு இதைப் பள்ளும் என்பர் எனக் கூறுகின்றன.

வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் தொகை அகராதி என்ற பிரிவில் சிற்றிலக்கிய வகைகள் பலவற்றின் விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் உழத்திப் பாட்டு என்பதன் விளக்கமும் உள்ளது.

வேறு பெயர்கள்:

  பள்ளு என்ற இலக்கிய வகைக்குப் பள்ளு நாடகம், பள்ளு மூவகைத்தமிழ், பள்ளேசல், பள்ளிசை என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இப்பெயர்களால் பள்ளு என்ற இலக்கிய வகை நடித்தற்கு உரியது; பாடுவதற்கு உரியது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியது என்பன தெரிய வருகின்றன. 

செய்திகள்:

விவசாயத் தொழில் செய்யும் உழவர்கள், உழத்தியர்கள் ஆகியோரின் ஏழ்மை வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிமையாக, இனிமையாக, சுவையாகக் கூறுவதே பள்ளு இலக்கியத்தின் நோக்கம் ஆகும். இவ்வகையில் பள்ளு இலக்கியத்தின் செய்திகள் பின்வருமாறு அமைகின்றன.
ஏராளமான நிலங்களைக் கொண்ட ஒரு செல்வந்தர் பண்ணையில் பள்ளன் ஒருவன் பரம்பரை பரம்பரையாக விவசாய வேலை செய்து வருகின்றான். அவனுக்கு இரண்டு மனைவியர். பள்ளன் தன் விவசாய வேலைகளைக் கவனிக்காது இளைய மனைவியிடம் மயங்கிக் கிடக்கின்றான். மூத்த மனைவியைக் கவனிக்கவில்லை. அப்போது நல்ல மழை பெய்கின்றது. ஆற்றில் தண்ணீர் நிரம்ப வருகின்றது. பள்ளனோ விவசாய வேலைகளைச் செய்யாமல் இளைய மனைவியின் வீட்டிலேயே இருக்கின்றான். இதை மூத்த மனைவி பண்ணையிடம் கூறுகின்றாள். பண்ணைக்காரன் கோபம் கொள்கின்றான். இதை அறிந்த பள்ளன் பயந்து போய் பண்ணையிடம் வருகின்றான். பண்ணை பள்ளனிடம் விவசாய வேலைகள் பற்றிக் கேட்கிறான். பள்ளன் கூறுகின்றான். பின், பண்ணையின் ஆணைப்படி வயல்களில் ஆட்டுக் கிடை வைக்க இடையனை அழைத்து வருகின்றான். பின், பள்ளன் இளைய மனைவியின் வீட்டிற்குச் செல்கின்றான். இதை அறிந்த மூத்த மனைவி மீண்டும் பண்ணையிடம் சென்று கூறுகின்றாள். இதை அறிந்த பள்ளன் விவசாய வேலைகளைச் செய்வது போல் நடிக்கின்றான். இதனால், பண்ணை அவனைத் தண்டிக்கும் பொறி ஆகிய தொழுவத்தில் மாட்டித் தண்டிக்கின்றான். இதனால் பள்ளன் வருந்துகின்றான். இதைக் கண்ட மூத்த மனைவி மனம் வருந்துகின்றாள். பள்ளனை மீட்கின்றாள். விடுபட்ட பள்ளன் ஒரு நல்ல நாளில் வயல்களை உழச் செல்கின்றான். பள்ளனை ஒரு மாடு முட்டி விடுகின்றது. அதனால் பள்ளன் மயங்கி விழுகின்றான். பின் மயக்கம் நீங்கி வயலை உழுகின்றான். சில நாட்கள் சென்றதும் பயிர் நன்கு விளைகின்றது. அவன் மூத்த மனைவிக்கு உரிய பங்கு நெல்லைச் சரியாகக் கொடுக்கவில்லை என அவள் பள்ளர்களிடம் முறையிடுகின்றாள். இதை இளைய மனைவி கேட்கின்றாள். மூத்த மனைவிக்கும் இளைய மனைவிக்கும் சண்டை ஏற்படுகின்றது. இறுதியில் இருவரும் சமாதானம் அடைகின்றனர். பள்ளனுடன் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இவையே பெரும்பாலான பள்ளு நூல்களின் செய்திகள் ஆகும்.

சான்றாக, முக்கூடற்பள்ளு என்ற நூலை எடுத்துக் கொள்வோம். இது ஒரு வைணவ சமய நூல். பாட்டுடைத் தலைவன் அழகர். திருமாலின் மற்றொரு பெயர் இது. பள்ளனின் பெயர் அழகக் குடும்பன். மூத்த பள்ளியின் பெயர் முக்கூடற் பள்ளி, இளைய பள்ளியின் பெயர் மருதூர்ப் பள்ளி.
சைவ சமய நூலாகிய திருவாரூர்ப் பள்ளில் பாட்டுடைத் தலைவன் வன்மீக நாதன். பள்ளனின் பெயர் வன்மீகப் பள்ளன். மூத்த பள்ளியின் பெயர் வன்மீகப் பள்ளி. இளைய பள்ளியின் பெயர் சீரங்கப் பள்ளி என்பது ஆகும்.

பள்ளும் குறமும்:

பாட்டியல் நூல்களால் 96 என வரையறுக்கப்பட்டவை சிற்றிலக்கியங்கள். புத்திலக்கியங்களை 'விருந்து' எனக் குறிக்கின்றது தொல்காப்பியம்.
'விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'
என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுள் 231.

இவற்றுள் பள்ளு இலக்கியங்கள் 16-ம் நூற்றாண்டையும் குறம் 18-ம் நூற்றாண்டையும் சார்ந்தவை. நொண்டி, உழத்திப் பாட்டு, ஏசல் என்பனவும் இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவை.35 பள்ளுகளும் 34 குறவஞ்சிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறம் என்பதன் பிறபெயர்கள் குறவஞ்சி, குறவஞ்சித் தமிழ், குறவஞ்சி நாடகம், குறத்திப் பாட்டு என்பன.
பள்ளு இலக்கியத்திற்கான இலக்கணம் ஏதும் இல்லை. கி.பி. பதினாறாம் நூற்றாண்டு முதல் பள்ளு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. உழவர்களின் வாழ்வியல் பேசப்படும் இலக்கியம் இது. பள்ளுவில் சிறந்தது முக்கூடற் பள்ளு எனவும் குறவஞ்சியில் சிறந்தது குற்றாலக் குறவஞ்சி என்றும் புலவர் பெருமக்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். இந்த இரண்டைத் தவிர மற்றெதுவும் நான் வாசித்ததில்லை. எனவே என்னால் ஒப்பீட்டளவில் உரையாட இயலாது. வேறெந்தக் குறவஞ்சியின் பெயர் கூட எனக்குத் தெரியாது. செண்பகராமன் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு என்று இரண்டின் பெயர் மட்டும் அறிவேன். எனக்குத் தெரிந்ததை விளம்புவதில் தவறில்லை.
உழத்திப் பாட்டு எனும் வகையைப் பள்ளு என்பாரும் பள்ளு அன்று என்பாரும் உளர். உழத்திப் பாட்டு பற்றி எழுதும் உத்தேசம் இல்லை, கைவசம் நூலும் இல்லை.

பிற பிரபந்த வகைகளில் பள்ளும் குறமும் வாசிக்க இலகுவானவை, எளிதானவை, உரை எழுத அவசியம் அற்றவை. எனினும் முன்னூறு ஆண்டுகள் முந்தியன என்பதால் அரும்பத உரை அவசியமாகலாம்.
ஆண்டை அல்லது பண்ணையார் உறவு, பள்ளன்-பள்ளிகள் பூசல், உழவு செயல்வகை எனச் சுவைபட பேசப்படுகின்றன முக்கூடற்பள்ளுவில்.

முக்கூடற்பள்ளு:

பள்ளு இலக்கியத்தில் சிறந்தது முக்கூடற்பள்ளு என்கிறார்கள். முக்கூடல் தலத்தில் கோயில் கொண்ட அழகர் மீது பாடப் பெற்றது, ஆனால் வைணவ இலக்கியம் என்று கூறி விட இயலாது.

மூன்று நதிகள் கூடும் இடம் முக்கூடல். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்பது போல் தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு எனும் ஆறுகள் கூடும் இடம் முக்கூடல். இந்த நூலின் காலம் கி.பி. 1680 என குறிப்பிடப்படுகின்றது.

பள்ளு இலக்கியம் இசைப்பாடல் தன்மை உடையது. இந்த நூலில் பந்துவராளி, பைரவி, காம்போதி, சங்கராபரணம், ஆனந்த பைரவி, புன்னாகவராளி, கேதார கௌளம், காம்போதி, மத்யமாவதி, மோகனம், நாட்டை, சுருட்டி போன்ற ராகங்களில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீர்வளம், நிலவளம் பேசும் இலக்கியம். வளை மேழி, நோக்கால், பரம்பு, மேழி, வடம், வள்ளக்கை, குத்தி, கொழு, கலப்பை, நுகம், கயமரம், கழுந்தேர்க்கால், கைக்கோல், கொட்டு, உழவுகோல், ஏர்க்கால் எனும் உழவு கருவிகள் பலவும் பேசப்படுகின்றன.

மீன்கள் பற்றிய பட்டியல் உண்டு- அயிந்தி, அயிரை, ஆரால், உய்யம், உழுவை, எண்ணெய் மீன், ஓரா மீன், கசலி, கடந்தாய், கருங்கண்ணி, கெண்டை, கெளிறு, கெளுத்தி, குறவை, கூனி, கோளை, சாம்பன், மணலி, மத்தி, மயிந்தி, மலங்கு, வரால், வாளை, சள்ளை, சாளை, திருக்கை, துதிக்கைமூக்கன், தேளி, நொறுக்கி, பசலி, பஞ்சலை, பண்ணாக்கு, பறவை, பாசிமீன், பொத்தி, மகரம், மடந்தை என இலக்கியங்கள் பதிவு செய்யாமற் போனால் பல தகவல்கள் நமக்குத் தெரிய வராமலேயே போயிருக்கும்.

பள்ளன் அழகர் அபிமானி. அழகர் அபிமானிகளாக இல்லாதவரை எவ்விதம் தண்டிப்பேன் என்பதற்குப் பாட்டுச் சொல்கிறான்.


‘ஒரு போது அழகர் தாளைக்
கருதார் மனத்தை வன்பால்
உழப்பார்க்கும் தரிசு என்று
கொழுப் பாய்ச்சுவேன்
சுருதி எண்ணெழுத்து உண்மை
பெரிய நம்பியைக் கேளாத்
துட்டர் செவி புற்றெனவே
கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதி நூற்றெட்டும்
மருவி வலம் செய்யாரைப்
பேய்க்காலில் வடம் பூட்டி
ஏர்க்கால் செய்வேன்
திருவாய் மொழி கல்லாரை
இருகால் மாடுகளாக்கித்
தீத்தீயென்று உழக்கோலால்
சாத்துவேன் ஆண்டே’

மாணிக்கவாசகர் திருவெம்பாவையில், ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்பதன் தீவிர வடிவமாயுள்ளது இந்த பக்தி.
பள்ளன் தன் பெருமை கூறுவது, மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தத்தம் குடித்தரம் கூறும் பாடல்கள் தமிழ் மணப்பது.

‘மைக்கடல் முத்துக்கு ஈடாய்
மிக்க நெல் முத்து உண்டாக்கும்
வடிவழகக் குடும்பன் நானே’

எனத் தான் விளைவிக்கும் நெல்லின் செருக்கு பேசும் பள்ளனை அறிமுகம் ஆகிறோம். மூத்த குடியாள், பெருமாள் பக்தையாகிய முக்கூடற்பள்ளியும், இளைய குடியாள், சிவனடியாளாகிய மருதூர்ப்பள்ளியும் போட்டிக்குப் பாடும் பாடல்கள் மிகவும் சுவையானவை.

வடகரையில் உள்ள, வளம் மிக்க ஆசூர் நாடு பற்றி மூத்த பள்ளி புகழ்கிறாள். அவள் நாடு அது, பெருமை பெற்றது. அந்த நாட்டில் கறை என்பதைத் திங்களில் மட்டுமே காணலாம். கடம் பட்டிருப்பது- கட்டப்பட்டிருப்பது மதங் கொண்ட யானை மட்டுமே. சிறைப்பட்டவை பறவைகள் மட்டுமே. திரிக்கப்பட்டிருப்பது நெய் விளக்கு ஏற்றுவதற்காகத் திரிக்கப்பட்ட திரி மட்டுமே, குறைப்பட்டிருப்பது கொத்தப்படுவதால் குறைபட்ட கம்மாளர்களின் அம்மி மட்டுமே. குழைத்திருப்பது பூங்கொடிகளும் பூங்கொத்துக்களும் மட்டுமே, மறைக்கப் பட்டிருப்பது உயர் செய்யுள்களின் பொருள் மட்டுமே. இவையல்லால், பிற குறைகள் ஏதுமில்லா நாடு எங்கள் நாடு என்கிறாள் மூத்த பள்ளி. பாடலைப் பாருங்கள்.

‘கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட்டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிபட்டுள்ளது நெய்படும் தீபம்
குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட்டுள்ளது வல்லியம் கொம்பு
மறைபட்டுள்ளது அரும்பொருட் செய்யுள்
வளமை அரசூர் வடகரை நாடே’

பொறுக்குமா இளைய பள்ளிக்கு? தனது நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டைப் போற்றுகிறாள். தனது நாட்டில் சூரியன் மட்டுமே காய்வான், கட்டித் தயிர் மட்டுமே மத்தால் கடையப்பட்டுக் கலங்கும். அழிந்து போவது நாழிகைகளும் கிழமைகளுமே, சுழன்று வருவது வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே, சுமை தாங்காமல் சாய்ந்தது நெற்கதிர் மட்டுமே, தவம் செய்வோர் மனம் மாட்டுமே ஆசைகள் ஒடுங்கி இருப்பது, தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே என்கிறாள். பாடலைப் பாருங்கள்:


‘காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்
தணிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்
சீவல மங்கைத் தென்கரை நாடே’


  இங்கு காய்க்குலை என்பதற்கு வாழைக்குலை என்றும் பொருள் கொள்ளலாம். மலையாளத்தில் இன்றும் வாழைக்குலையைக் காய்க்குலை என்கிறார்கள்.
இவ்வாறே தமிழ் பாடிச் செழிக்கிறார்கள் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும்.

‘மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை
மிடைந்த பூகம் சுமந்து தன் காயை
சூதம் ஒன்றிச் சுமக்கக் கொடுக்கும்
சூதம் தன்கனி தூக்கும் பலாவில்
ஓதும் அந்த பலாக்கனி வாழை
உறுக்கவே சுமந்து ஒண்குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு வாழை தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே’


என்பாள் மூத்த பள்ளி.


தெங்கின் இளநீரை, நெருங்கி வளர்ந்திருக்கும் கமுகு தாங்கும். கமுகு, தன் குலையை அருகில் வளர்ந்திருக்கும் மாமரங்களைச் சுமக்கச் செய்யும். மாமரங்கள் தன் கனிகளை அருகில் வளர்ந்திருக்கும் பலா மரங்களில் சாரச் செய்யும். பலாக்கனிகளை வாழை மரங்கள் சுமக்கும். வாழைக் குலைகளை மாதுளங் கொம்பு தாங்கும் ஆசூர் வடகரை நாடே என்பாள் மூத்தாள்.

‘பங்கயம் தலை நீட்டிக் குரம்பினில்
பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மௌ;ளத் தொடும் அந்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய்க்கதிர் செந்நெல்
அளாவி நிற்கும் அச்செந்நெலும் அப்பால்
செங்கரும்புக்குக் கைதரும் போல் வளர்
சீவல மங்கை தென்கரை நாடே’
என்பாள் இளையாள்.

கிராமத் தெய்வம் போற்றுவாள்: 

‘திங்கள் மும்மாரி உலகெங்கும் பெய்யவே
தெய்வத்தைப் போற்றி வந்து கைதொழும் காண்
பொங்கலும் இட்டுத் தேங்காயும் கரும்பும்
பூலா வுடையாருக்குச் சாலவே கொடும்
குங்குமத்தோடு சந்தனம் கலந்து
குமுக்காவுடையாரயர் தமக்குச் சாத்தும்
கங்கணம் கட்டி ஏழு செங்கிடாயும்
கரையடிச் சாத்தா முன்னே விரைய வெட்டும்’
என்று. 

இளைய பள்ளியோ:
‘பூத்தலைச் செஞ்சேவல் சாத்திரத்தாலே
புலியூர் உடையார் கொள்ளப் பலிதான் இடும்
வாய்த்த சாராயமும் பனை ஊற்றுக் கள்ளும்
வடக்குவாய்ச் செல்லி உண்ணக் குடத்தில் வையும’
என்கிறாள்.

என் வயதுக்காரர் அனைவரும் நினைவில் வைத்திருக்கும் சிந்து ஒன்றுண்டு. முக்கூடற்பள்ளு நூலில், அட தாளம், ஆனந்த பைரவி ராகம்.

‘ஆற்று வெள்ளம் நாளைவரத்
தோற்றுதே குறி – மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னு தே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்றடிக்குதே – கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றைக் குழைத்து
ஏற்றடைக்குதே – மழை
தேடியொரு கோடி வானம்
பாடி ஆடுதே
போற்று திரு மாலழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் – சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித்
துள்ளிக் கொள்வோமே’

என்பது அந்த மழைக்குறிப் பாடல்.

நெல்விதைகளின் வகைகளைச் சொல்கிறான் பள்ளன் ஒரு பாட்டில், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வகை நெல் இனங்களின் பெயர்களைக் காண முடிகின்றது.

‘சித்திரக் காலி வாளாண் சிறை மீட்டான் மணல்வாரி
செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா
முத்து விளங்கி மலை முண்டன் பொற்பாளை நெடு
மூக்கன் அரிக்கிராவி மூங்கிற் சம்பா
கத்தூரி வாணன் கடைக கழுத்தன் இரங்கல் மீட்டான்
கல்லுண்டை பூம்பாளை பார்கடுக்கன் வெள்ளை
புத்தன் கருங்குறுவை புனுகுச் சம்பா’

என, மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா? நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன்.

‘குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை
குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன்
வடர்ப் புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக் கண்ணன்
மட்டைக் கொம்பன் கருப்பன் மஞ்சள் வாலன்
படப்புப் புடுங்கி கொட்டைப் பாக்கன் கருமறையன்
பசுக்காலன் அணிற்காலன் படலைக் கொம்பன்
விடர்த்தலைப் பூ நிறத்தான் வெள்ளைக் காளையும் இந்த
உண்டு ஆயிரமே’

பசுவையும் காளையையும் எருமையையும் எருமைக் கடாவையும் மாடு என்றழைக்கும் பருவத்துக்கு வந்து விட்டோம் நாம். இந்த யோக்கியதையில் மாட்டின் சுழிகள் பற்றியும் அவற்றுள் யோகச் சுழிகள் எவை, யோகமற்ற சுழிகள் எவை என்றும் சொன்னால் நமக்கு என்ன விளங்கும்? தாமணிச் சுழி, இரட்டைக் கவம், பாஷிகம் சுழி, கோபுரச் சுழி, நீர்ச் சுழி, ஏறு பூரான், லக்ஷ்மிச் சுழி, பட்டிச் சுழி, வீபூதிச் சுழி, ஏறு நாகம் என்பன நல்ல சுழிகள் என்றும் முக்கண் அல்லது அக்னிச் சுழி, குடைமேல் குடை, ஒத்தைக் கவம், விளங்குச் சுழி, பாடைச் சுழி, பெண்டிழந்தான் சுழி, இறங்கு பூரான், நாகபடம், அவற்றுள் முன்னாகம், பின்னாகம், தட்டுச் சுழி, துடப்பச் சுழி, விறிக்கட்டு அல்லது புட்டாணிச் சுழி, ஏழு கட்டுப் பாடைக் கட்டு, வால் முடங்கி, இறங்கு நாகம் என்பன தீய சுழிகள் என்றும் பள்ளனால் அடையாளம் கண்டிருக்க இயலும்.
By - முனைவர் பூ.மு.அன்புசிவா

பள்ளு இலக்கியங்களின் பட்டியல்

பள்ளு என்றாலே பள்ளர்களின் வாழ்க்கையை முறையாக இயம்பும் முத்தமிழ் நூல்.
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திர அடைந்து விட்டோமென்று"

- எனப்பாடி மகிழ்ந்தார் பாரதி 




 அடிக்குறிப்புகள்: 
 "மீண்டெளும் பாண்டியர் வரலாறு" - By, திரு.கு செந்தில் மள்ளர்

பாண்டிய வேந்தர்களும் தமிழ்ச்சங்கங்களும்













 அடிக்குறிப்புகள்: 
 "மீண்டெளும் பாண்டியர் வரலாறு" - By, திரு.கு செந்தில் மள்ளர்

Saturday, 2 November 2019

Scholars who claim Pallars are Mallars

2.10.1 M. Srinivasa Iyengar
“Brahmins were living in the city of Kanchipuram ruled by the king Ilantiraiyan whose name has been attested in Perumpaanaarrup patai. By one side of his house, fishermen were residing and on the other side, business people were residing. Surrounding their houses were Mallar or Pallar (agriculturalist) and stone masons. At one corner of the town, there were the houses of shepherds (idaiyar) and beyond that in a remote place there were the houses of eyinar and their chief. Along the Mallar streets were the Tiruvehaa temple and the palace of the king Ilantiraiyan”. (M. Srinivasa Iyengar, Tamil Studies, pp. 76)
2.10.2 Dr. Winslow Tamil – English Dictionary
The Pallars, currently engaged as farm workers by the landlords of Southern states, were the Mallars of those days. The word Pallar is a corrupt form of Mallar. (Dr. Winslow Dictionary pp. 745)
2.10.3 T. K. Veluppillai
The Mallar described in old Tamil literature came to be known as Pallar in later period. (T. K. Veluppillai, Travancore State Manual, 1940)
2.10.4 Dr. G. Oppert
The word Mallar became Pallar due to a change in pronunciation (Dr. G. Oppert, Dravidians, The original Inhabitants of India, pp. 101)
2.10.5 Lingustics Scholar Devaneyap Pavanar
The Pallars are the Mallars, the agriculturalists of Marutam region. (Centamil Selvi, April 1975)
2.10.6 Pandit Saveriyar
The word Palla is a phonetic Variant of Malla. Ancient Mallars are none but the present day Pallars. (N. C. Kantaiyapillai, History of the Tamils, pp 206)
2.10.7 C. Lakshmirathan Bharathi
The word Pallar refers to Mallar, the agricultural population of Marutam region. They are known as Devendra Kula Vellalar.
2.10.8 Census Survey of Salem District
In the census survey of Salem district for the year 1961, the monograph on the survey of a village by name Kanakkangiri it has been stated that the people referred to as Pallar are the Mallar of agricultural region. (Census of India, 1961, Vol XI, Madras Part VI, Village Survey Monograph, Kanakkangiri Village, Salem District)
2.10.9 K. R. Hanumanthan
The valiant people, described as Mallar in Sangam classics, are the ancestors of Pallars (Dr. K. R. Hanumathan, Untouchability : A historical Study, pp. 100).
2.10.10 A. V. Subramania Ayyar
It was only during the 17th century A. D. that a separate genre of literature by name Pallu emerged to describe the social life, customs and beliefs of the people engaged in agriculture. These Pallu works contain a number of references to Tamil literary works describing the social life of the people engaged in agricultural profession, namely, Mallar. They describe the services rendered by these people for the welfare of the society (A. V. Subramania Ayyar, Tamil Studies, Part II pp.67)
2.10.11 R. Deva Ashirwadam
This author, through his extensive studies, published in three books, namely, 1. Pallar alla Mallar, aam Mannar (Not Pallar, but Mallar, yes Kings), 2. Vellalar yaar? (Who are the Vellalas?) and 3. Muuveentar yaar? (Who are the King trio?), has established, citing several literary evidences, that the present day Pallars are our ancient Mallars. The above ten scholars discussed so far have been quoted by scholar Deva Ashiradam in his book entitled Pallar alla Mallar, aam Mannar published in the year 1991.
2.10.12 Pallar and Mallar
It was only during the 15, 16 and 17th centuries that the community name Mallar has been changed into Pallar. The literary works produced in Tamil before 15th century have attested the word Mallar only. The Tamil works in which both the words Mallar and Pallar have been used synonymously and interchangeably have been discussed below together with the notes given by their commentators. Moreover, the authors who have made categorical statements that Pallar and Mallar and vice versa have also been taken up for description below.
2.10.13 Veeramaamunivar
Constantine Joseph Beschi, an Italian scholar, devoted to the study of Tamil language and literature, got his name changed as Veeramaamunivar. His works paved way for the renaisaance of Tamil literature. One of his reputed works is Teempaavani. In this work, in the section on Naattuppatalam (section for the description of the country), in poem number 32, he describes about Mallars. In the commentary written by the author himself, it has been mentioned that Pallars are Mallars.
2.10.14 Kaviraakshasa Shri Kacciyappa Munivar
The work produced by him is Peeruurpppuraanam. while describing about the community of Pattiswarar, he uses both the phrases Patti mallar and Pattip pallar simultaneously in several of his poems. Some poems describe him as Patti mallar while some other poems as Pattip pallar. Thus he states that Pallar and Mallar are one and the same.
2.10.15 Thiruvavadudurai Athinam
Vidhwans and Tamil scholars of Thiruvavadudurai Athinam, namely, S. Dandapani Desikar and T. S. Meenakshisundaram Pillai, in their commentaries for Peeruurppuraanam of Kacciyappa Munivar, have mentioned that the word Mallar refers to Pallar. This commentary has been published under the authority and approval of Thiruvavadudurai Athinam.
2.10.16 Scholars of South India Saiva Siddhanta Works Publishing Society
Harichandra Puraanam was composed by Nallur Veeraraghavak Kavirayar of 16th century. He speaks about the people belonging to Mallar community in his work. A commentary for this book, written by the official scholars of the Society has been published by the Society itself. In their commentaries, the team of scholars had unanimously stated that both Mallar and Pallar belong to one and the same community.
2.10.17 Mukkuutar Pallu
The name of the author of this work is not known. This work, a pioneering attempt in Pallu literature, belongs to 16 – 17 century. The author of this work mentions that Pallars are Mallars.
2.10.18 South India Saiva Siddhanta Works Publishing Society
Publication number 880 of this Society is Mukkutarpallu. In the editorial, the publishers have stated that this work is a poetical description about agricultural women, namely, the women of Mallar community. Further, they say that Pallar and Mallar are one and the same.
2.10.19 Vidhwan N. Sethuraghunathan
He is the commentator of Mukkutarpallu, published by the South India Saiva SiddhantaWorks Publishing Society. He has worked as a Professor and Head of the Department of Tamil at Senthilkumar college, Virudhunagar. This reputed scholar in Tamil language has observed that Pallars are Mallars. He further observes that the Pallu literary works are quite popular and they serve as resource material for studying the history of ancient Tamil kings, petty kings, landlords, descendants of kings and other charitable persons.
2.10.20 Palaniccamiin Immudip Patattilakiya Kumaara Visaiyagiri Veelac Cinnoovaiyan
The above person, a hunter and a landlord of Palani, composed a literary work entitled Vaiyapurippallu. He belongs to 17-18 century. He, in his work, has mentioned that Pallars are Mallars. The Pallu literary works listed below, composed during 17 – 18 centuries, also state that the present day Pallars are the Mallars of those days.
2.10.21 Author of Tiruvaaruurp pallu
2.10.22 Author of Kurukuurp pallu
2.10.23 Author of Tirumalai pallu
2.10.24 Author of Sivasayilai
2.10.25 Author of Vatakaraip pallu
2.10.26 Author Urimaip pallu
2.10.27 Author of Siirkaalip pallu
2.10.28 Author of Tillaip pallu
2.10.29 Author of Kannutai Amman pallu
2.10.30 Author of Katirai Malaip pallu
2.10.31 Author of Paraalai Vinaayakar pallu
2.10.32 Author of Tantikaik Kanakaraayan pallu
2.10.33 Author of Ceerruurp pallu
2.10.34 Author of Maantaip pallu
2.10.35 Author of Kuutar pallu
2.10.36 Author of Tiruvitaimarutuurp pallu
2.10.37 Author of Tanjaip pallu
2.10.38 Author of Tenkaasip pallu
2.10.39 Author of Kotumaluurp pallu
2.10.40 Author of Raasaip pallu
2.10.41 Author of Putuvaip pallu
2.10.42 Author of Mukuuttup pallu
2.10.43 Author of Mannaar Mookanap pallu
2.10.44 Author of Tiriccentil pallu
2.10.45 Author of Iiroottup pallu
2.10.46 Author of Senkoottup pallu
2.10.47 Author of Tiruniilakantan pallu
2.10.48 Author of Vaittiyap pallu
2.10.49 Author of Ceemuurp pallu
2.10.50 Author of Nanap pallu
2.10.51 Author of Tiruppuvanavaayil pallu
2.10.52 Author of Kurraalap pallu
2.10.53 Author of Pooruurp pallu
2.10.54 Author of Irumatilip pallu
2.10.55 Author of Poykaip pallu
2.10.56 Author of Koottuurp pallu
2.10.57 Author of Tirukkoottiyuurp pallu
2.10.58 Author of Kattimakipan pallu
2.10.59 Author of Sappendiran pallu
2.10.60 Author of Suvaaminaata puupatip pallu
2.10.61 Author of Cenpaka Kaalinkaraayan pallu
2.10.62 Author of Palani Vadiveelpallu
2.10.63 Author of Vinaayakar pallu
2.10.64 Author of Kancamip pallu
2.10.65 Tiyaakaraayakkaviraayar
, the author of special introductory poem to the first edition of Mukkuutar pallu. The authors who use the traditional word Mallar rejecting the later day word Pallar are listed below.
2.10.66 Paranjoti Munivar, the author of Tiruvilaiyaatal puraanam
2.10.67 Sivakkoluntu Desikar, the author of Marutavanap puraanam
2.10.68 Ellappa Nayinaar, the author of Tiruvaaruurkkoovai
2.10.69 Cinnappa Naayakkar, the author of Palanippillaittamil
2.10.70 Puulaanantak Kaviraayar, the author of Arikeesanallur Talapuraanam
2.10.71 Mahavidhwan Tiricirapuram Shri Meenakshisundaram Pillai, author of Aarruurppuraanam and Tiyakarajaliilai.

Confusion among the Historians
The list presented above makes it celar that many authors have attested the fact that Pallars are Mallars. However, the History of Tamilnadu, which cites evidences extensively from literature, in its chapter on Sangam Age (Politics) page number 352 mentions that there are no evidences to show that Pallars are Mallars. Further, the authored by a Committee of Experts, unwarrantedly mentions that Kongu pallars served as menials to Kongu Vellala (page 424) quoting no evidence from any source. This is not only a deplorable statement but also a foolish and ignorant statement. The change from mallar to pallar took over only during 15 – 16 centuries; the word pallar was non existent prior to that period of time. The readers are requested to think over this without any bias and understand the truth. Truth cannot be changed by a group of few persons who claim to write the history. No one can eradicate literature. These literary works bear clear – cut evidences to our conclusion. Those who try to hide the truth and give a wrong picture and description in our history will be criticized in the future, when the truth comes out. It has to be noted here that no other caste living in Tamilnadu has a glorious and continuous history for more than two thousand years as the pallars have. Ripe time has come to make the people of Tamilnadu to understand this truth.
Cats have started to come out of the bags!
Tamil Ilakiyathil Pallar (Mallar) Devendra Kula Velalar- Adippadai Sanrugal
By, Dr.Guruswamy Siddhan


Deities described as belonging to Mallar community

Deities described as belonging to Mallar community

Tamil literary works have mentioned some of the gods as belonging to the Mallar community. References to such citations are presented below:
  1. Tirumaal
    Line number 41 and 89-90 of the third poem in Paripaatal, and poem number 28 in Palluppatalam and 15 in Kaavalan Valipatupatalam of Peeruurppuraanam composed by Kacciyappa Munivar describe Tirumaal as a god belonging to the Mallar community.
  2. Murugan
    Murugan has been discussed as a god belonging to the Mallar community in lines 262 and 269 of Tirumurugarruppatai and in Palluppatalam 27 of Peerrurppuraanam composed by Kacciyappa Munivar. Vaiyapurippallu poems 7 and 21 also discuss in the same manner.
  3. Sivaperumaan
    Sivaperumaan has been described as a god belonging to the Mallar community in the following verses: Poem numbers 25, 29, 34, 35, 36, 38, 39, 41 and 69 of Palluppatalam; poem number 60 in Tenkayilaayappatalam. Poem number 6 in Sumati Gatiperupatalam and poem number 20 in Indiran Saapamtiirtta Patalam of Peeruurppuraanam composed by Kacciyappa Munivar. The following verses from Paranjooti Munivar’s Tiruvilaiyatar puraanam also describe Lord Siva as a member of Mallar community: Tirumanappatalam 26, Cholalanai Matuvil Viilttiyapatalam 18 and Viraku virra patalam 26. Poem number 107 in Tirunaattuppatalam in Tiyagaraja liilai, Sambandar’s Teevaaram Tirunalluur poem number 10, Vaiyaapurippallu poems 7 and 25 and Sankara Naarayana Swamy kooyirpuraanam Paayiram poem number 4.
  4. Parvati/Umadevi/Tadaatakaippiraattiyaar
    Paarvati has been portrayed as a goddess belonging to the Mallar community in the following poems. Palluppatalam poem numbers 26, 30, 34 and 29 in Kacciyappa Munivar’s Peeruurppuraanam and also Paranjooti Munivar’s Tiruvilaiyaatarpuraanam poems.
  5. Vinayaka
    Palluppatalam poem number 27 of Kacciyappa Munivar’s Peeruurppuranam says that Vinayaka also belongs to the Mallar community.
  6. Brahma and his associates
    Brahma and his celestial associates also have been mentioned as belonging to the Mallar community. Kacciyappa Munivar’s Peeruurppuraanam, Palluppatalam poem numbers 28, 29, Indiran Saapam Tiirttapatalam poem number 20 and Paranjooti Munivar’s Tiruvilaiyaatarpuraanam, Nariyai Pariyaakkiya patalam poem number 59 describes this.
  7. Lakshmi, Saraswathi, Indiraani and other goddesses
    Kacciyappa Munivar’s Peeruurppuraanam Palluppatalam poem 30 and 34 say that the goddesses Lakshmi, Saraswathi, Indiraani and others also belong to Mallar community.
  8. Indiran
    Indiran, the king of the celestial beings, has been portrayed as a member of the Mallar community in the following poems:
    Kacciyappa Munivar’s Peeruurppuranam, Palluppatalam verses 28 and 29, Indiran Saapam Tiirttapatalam verses 20, Paranjoti Munivar’s Tiruvilaiyatarpuraanam, Indiran Pali Tiirtta Patalam verses 37 and 41.
    The references cited above are not exhaustive. There are many more literary works that discuss about the Malla people and their society. Due to want of space, they all have not been included in this list.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும், நெல்லின் மக்களும்


தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் நெல்லின் மக்களாம் (மள்ளர்) பள்ளர்களுக்கு வழங்கிவரும் மரபுரிமை குறித்து கட்டுரைகளை இங்கே காண்போம். ‘தாழ்த்தப்பட்டோருக்கான ஆலைய நுழைவு போராட்டம்’ என்பது போன்ற சம்பவங்களுக்கும், மள்ளர்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும், மரபு வழியாகவே மள்ளர்களுக்கு அதி முக்கிய கோவில்களில் இன்றும் முதல் மரியாதை இருந்து வருவதும் கண்கூடு.

பாண்டிய நாட்டில் உள்ள பழம் பெருமை வாய்ந்த கோவில்களில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் அமைந்துள்ள ‘திருநெல்வேலி’யின் வரலாற்றுப் பழம் பெயர் ‘மருத வேலி’ என்பதையும், இது மள்ளர் ஊர் என்பதையும், இதுவே பாண்டிய நாட்டின் தலைநகர் என்பதும் வரலாறு. வயல்வெளிகள் சூழ்ந்த மள்ளர் ஊரான பழம் பாண்டி நாட்டின் தலைநகராக விளங்கிய ‘மருத வேலி’ என்பதே பின்னர் ‘நெல் வேலி’ என வழங்கப்பட்டது. நெல்லின் மக்களான மள்ளர்கள் நெல்லை அடித்துப் பிரித்துக் குவித்திருந்த வேளை ஒரு நாள் பெரும் மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாம். அவ்வெள்ள ஓட்டத்தில் நெற்குவியல்கள் அடித்துச் செல்லாதபடி பாண்டிய வேந்தன் ஒருவன் தனது மள்ளர் படை கொண்டு வேலியிட்டுக் காத்ததுபோல காத்தானாம். இக்காரணம் பற்றியே ‘மருதவேலி’ என்பது ‘நெல்வேலி’ எனப் பெயர் மாற்றம் பெற்றதாகவும், அப்பாண்டிய வேந்தனே ‘நெல்லையப்பர்’ என நெல்லின் மக்களான மள்ளர்களால் போற்றப்பட்டதாகவும் தெரிகிறது. பிற்காலத்தில் ‘திருநெல்வேலி’ என்றானது. திருநெல்வேலி தலபுராணம் என்ற நூல் இவ்வூரினை ‘மருதவேலி’ என்றும், பாண்டிக் கோவை என்ற நூல் இவ்வூரினை ‘நெல்வேலி’ என்றும் குறிக்கின்றன.

நெல்லையப்பர் கோயிலின் முகாமையான கருவறையைச் சுற்றியுள்ள நடைக்கூடத்தை – திருச்சுற்று மண்டபத்தை கட்டியவன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆவான். (கே.வி.இராமன், பாண்டியர் வரலாறு, ப. 279). இக்கோயிலில் ஆடி மாதம் தொடங்கி 45 நாள் நடைபெறும் பூசையில் பள்ளர் குலப் பெண் அம்பிகையாக நெல் கொண்டு காட்சியளித்தல் பார்க்கத் தக்கது. நெல்வேலி கட்டின திருவிளையாடல் தை மாதம் நடைபெறும். இக்கோயிலின் நடு மண்டபத்தில் பாண்டியர்களின் உருவத்தைக் காணலாம். (பாண்டிய நாட்டு கோயில்கள், ப.98 ). அறிவர் குணா நெல்லையப்பர் கோயிலை நேரில் வந்து கள ஆய்வு செய்து இதனை ஐயனார் கோயில் என்றே அறிதியிட்டு உறுதி செய்கிறார். ஐயனார் பாண்டியரின் படைத் தலைவன் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. ‘இந்நகரில் உள்ள சிந்துபூந்துறையில் ஒரு நாள் நீராடினவர் பதினாயிரம் கிரிச பலன் அடைவர்’ என ‘நகர்பெருமை’ என்ற தலைப்பில் நெல்லையப்பர் கோயில் தன வரலாறு கூறுகிறது.(அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தலவரலாறு,ப.11 ).
நெல்லையப்பர் கோயிலுக்கு ஏறத்தாழ 512 குறுக்கம் நன்செய் நிலங்களும், 2960 குறுக்கம் புன்செய் நிலங்களும் உள்ளன. இந்நிலங்கள் தென்பத்து, பாட்டப் பத்து, கனடியப்பேரி, அருகன்குளம், சேந்தி மங்கலம், மேலப் பாளையம், பெரிய பாளையம், பல்லிக் கோட்டை ,நான்சான்குளம், தென்கலம், மணிமூர்த்தீசுவரம், பிரான்சேரி,தெய்வேந்திரபேரி, சேரன்மகாதேவி, சுப்பிரமணிய புறம், செட்டிக் குறிச்சி, திருப்பணி நெடுங்குளம், பூவாணி ஆகிய ஊர்களில் உள்ளன. (அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தலவரலாறு, ப.29 ). நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான விளை நிலங்கள் உள்ள மேற்கண்ட ஊர்கள் யாவும் பள்ளர் குலத்தவர்களின் ஊர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

நெல்லையப்பர் கோயிலில் முதல் மரியாதையும், தேரோட்டும் உரிமையும், தென்பத்துப் பள்ளர்களுக்கே உரியதாகும். இக்கோயில் தேர்த் திருவிழாவின் போது ‘தேவேந்திர குல வேளாளர்’ சமூகக் கொடியான ‘சிவப்பு பச்சை’ வண்ணக் கொடி தேரில் பறக்க விடப்பட்டே திருவிழா நடைபெறுகிறது. (நேர்காணல், ஆ.மனோன்மணி, தென்பத்து)

தென்காசி கோயிலும், தென்பாண்டி வேந்தர்களும்

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தின் அருகே பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தென்காசி. இங்கே பாண்டியர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இக்கோயிலின் ஆய்வினூடாகவும் பள்ளகளே பாண்டியர் என்று அறிய முடிகிறது. ‘காசி கலியன்’ என்ற பெரும்புலவர் பாடிய பாக்கள் தென்காசி கோயிலில் கல்வெட்டுகளாக உள்ளன. அதில்…. “சீர்கொண்ட செங்கமலை வாழத் திரையாடைப்பார்கொண்ட வாள்வீர பாண்டியன் என்று – ஏர்கொண்டகானுலா மாலைக்கன குமகுடம்பு னைந்தான் மாணவே லானபிரா மன்” (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.80 )

அபிராம பாண்டியன் போருக்கு செல்கின்ற போது அவனது வாளையும், வெண் கொற்றாக்குடையினையும் பாராட்டுகின்ற புலவர் ஏர்கொண்ட பாண்டியன் என எடுத்துரைப்பது பாண்டியர்கள் பள்ளர்களே என்பதை உணர்த்துகின்றது.
பராக்கிரம பாண்டியன் மெய்க்கீர்த்தியில் ” சிவநெறி யோங்கச் சிவாற்சனை புரிந்துமருது ராற்கு மண்டப மமைத்து” (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.89 )

எனவரும் அடிகளில் மருதூரார்களான மள்ளர்கட்கு – பள்ளர்கட்கு மண்டபமமைத்த செய்தி இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், அதிவீரராம பாண்டியன், வரதுகராம பாண்டியன், வரகுணராமன், குலசேகரன்,வரகுணராம பாண்டியன் உள்ளிட்ட பல பாண்டிய மன்னர்களில் பெயர்களைக் கல்வெட்டில் அறிய முடிகிறது.

கலியுக ஆண்டு 4558ன் மேல் கார்த்திகை மாதம் 5ஆம் நாள் (கி.பி. 1457 ) தென்காசிக் கோயிலில் பராக்கிரம பாண்டியன் கோபுரம் அமைக்கக் கால்கோளிட்ட செய்தியைப் பாடலாக வடித்துத் தந்துள்ள கல்வெட்டில்,
“செந்நெல் வயல் தென்காசி நகரில்நற்காத்திகைத் திங்கள் தியதி ஐந்தில்………………………………………………..திருக்கோபுரம் காணத் துடியிடையாய்உபான முதல் தொடங்கினானே” (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.31 )என்று தென்காசி நகர் செந்நெல் வயல் சூழ்ந்த செந்நெல் முதுகுரியினரான மள்ளர்களின் – பள்ளர்களின் ஊர் என்பது உணர்த்தப் படுகிறது. கோபுரத்தை கட்டுகின்ற வேளையில் பராக்கிரம பாண்டியன் பகை அரசர்களின் படையெடுப்பையும், உள்நாட்டுப் போர்களையும், கருவூலத்தில் போதிய பொருளின்றி நிலைகுலைந்து போனதாலும் கோபுரத்தை அவனால் முழுமையாகக் கட்டி முடிக்க முடியவில்லை.

இம்மன்னனுக்குப் பின்னர் ஆண்ட பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் சக ஆண்டு 1518 இல் இக்கொபுறப் பணியை நிறைவு செய்தான். இவனுக்குப் பின் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீரராம பாண்டியன், கி.பி 1564 இல் முடி சூடினான். இவனுக்குப் பின் கி.பி.1588 இல் துங்கராம பாண்டியன் முடிசூடி அரசாண்டான். இவன் சிறந்தத் தமிழ் புலவனாகவும் திகழ்ந்தான். இவனுக்குப் பின்னர் கி.பி.1618 இல் வரகுணராம குலசேகரன் அரசுக் கட்டிலில் அமர்ந்தான். அதனைக் கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மனனுக்குப் பின் கி.பி.1748 இல் வகோன்ராமப் பாண்டியனின் மகன்கள் தங்களுக்குள் முரண்பாடு கொண்டு தென்காசி நகரில் கீழக் கோட்டையிலிருந்தும், மேலக் கோட்டையிலிருந்தும் ஆட்சி புரிந்தனர். இவர்களுக்குள் இருந்த பகையைப் பயன்படுத்திக் கொண்ட வடுக வந்தேறிகள் இவர்களைச் சுரங்கப்ப் பாதை வழியாகச் செல்ல வைத்து வஞ்சமுடன் கொன்று ஒழித்தனர்.

முகமதியர்கள் தென்காசியக் கைபற்றி ஆட்சி செய்த பின்னர் முழுமையாக நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது தென்காசி. பாண்டியர்கள் வலிமை குன்றிய பின் உரிமை முறை பற்றிய ஓலைச் சுவடிகளைக் கோயில் கோபுரத்தில் ஒளித்து வைத்தனர். இதனை அறிந்த வடுகர்கள் கோபுரத்தையே தீவைத்துக் கொளுத்தினர். கி.பி.1771 ஆம் ஆண்டு தென்காசியில் பாண்டியர்களின் ஆவணங்கள் நெருப்பிற்கு இரையாக்கப் பட்டு அழிக்கப்பட்டதாகத் திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்பு என்ற நூல் கூறுகிறது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36 )
பிறிதொரு குறிப்பு 25 .03 .1814 ஆம் ஆண்டு தென்காசி கருவூலத்தைக் கைப்பற்றும் வகையில் பாளையக்காரன் (நாயக்கன்) ஒருவனால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது என்கிறது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36 )

சென்கி என்ற மேலை நாட்டு கிருத்தவ போதகர் தனது கி.பி.1729 ஆம் ஆண்டையக் குறிப்பேட்டில், தென்காசிக் கோபுரமும், அதன் மேலுள்ள கடிகாரமும் நன்றாக உள்ளது என்று பதிவு செய்துள்ளார். அனால் கி.பி.1824 இல் நிலம் அளக்கும் அளவர் குறிப்பில் தென்காசிக் கோபுரம் தீவைக்கப் பெற்று அழிந்து பரிதாபமாகக் காட்சி தருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36 )

இடியும், மின்னலும் கோபுரத்தைத் தாக்கி அழித்ததாகப் பின்னாளில் கட்டுக் கதைகள் வடுகர்களாலும், வடுகர்களுக்கு வாலுருவும் ஒரு சில புல்லுருவிகளாலும் புனையப் பட்டுக் கற்பிக்கப் பட்டன. உண்மைகளை உறங்கப் போடலாம்,. ஒருபோதும் கொள்ள முடியாதல்லவா? மள்ளர் குல மாமன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் உருவாக்கப் பெற்ற கோபுரம், ‘பாண்டியர் மரபினராகிய பள்ளர்களின் ஆட்சி’ மீண்டும் இந்த மண்ணில் வந்து விடக் கூடாது என்னும் வடுகச் சூழ்ச்சியினால் சாம்பலாக்கப் பட்டது.

தென்காசி கோயிலில் தேரோட்டும் உரிமை நன்னகரம் பள்ளர்களுக்கு இருந்தது. கால ஓட்டத்தில் இவ்வுரிமை மறுக்கப் பட்டு வழக்கொழிப்பு செய்யப் பட்டது. நன்னகரத்தை சார்ந்த பள்ளர்குலத்தவரான சுடலைமாடன் மகன் இசக்கி முத்து என்பவர் ஆண்டுதோறும் தென்காசி கோயிலுக்கு நாள்கதிர் கொண்டு செல்லும் வழமை இன்றுவரை நடப்பிலிருந்து வருகிறது.
தென்காசிப் பாண்டியர்களின் மரபறிய முடியாதவாறு வடுகர்கள் அடையாள அழிப்பு வேலைகளைச் செய்த போதிலும், இன்றளவும், முன்னமே பதிவு செய்துள்ள தென்காசி, செங்கோட்டைப் பகுதி வாழ் பள்ளர்களின் நில ஆவணங்களில் ‘பாண்டிய குல விவசாயம்’ என்ற பதிவுகளும், பள்ளர்கள் யாவரும் தங்களின் பெயரின் பின்னொட்டாகப் ‘பாண்டியன்’ என்னும் தமது குடிப் பெயரினை இணைத்து இடும் மரபும், தங்களை ‘பாண்டியர் சமுதாயம்’ என அழைத்துக் கொள்ளும் வளமையும் மெய்மை வரலாறுகளை உலகறியச் செய்யும்.

செந்தூர் முருகன் கோயிலும், செந்நெல் முதுகுடியினரும்

முத்துக் கொழிக்கும் பாண்டி மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள பழம்பெரும் எழிலூர் திருச்செந்தூர். இக்கடற்கரையில் அமைந்துள்ள மலை ‘சந்தன மலை’ என வழங்கப் பெற்றது. ‘செந்தின் மலை’ எனவும் அதற்குப் பெயர் இருந்தது. இது மருதமும், நெய்தலும் மயங்கிய ஊர் என்பதைக் கடைச்சங்கப் புலவர் பரணர் அகநானூற்றில்.

        “கழனி உழவர் கலிசிறந்(து) எடுத்த         கறங்கிசை வெரீஇப் பறந்த தோகை         அணங்குடை வரைப்பகம் பொலிய வந்திருக்கும்         திருமேனி விளக்கின் அலைவாய்…..”
எனப் பாடியுள்ளார். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.1 )
தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் எம்.எசு.பூரணலிங்கம் இரண்டாம் தமிழ்சங்கமிருந்த இடம் கபாடபுரம் என்றக் குறித்துப் பிறைகோடுகள் “அலைவாய்” எனக் குறித்துள்ளார்.

வால்மீகி, இராமாயணத்தில் கபாடபுரத்தின் இருப்பிடத்தைச் சுட்டும் பொழுது
“தாமிரபருணி அழகிய சந்தனச் சோலைகளால் மூடப்பெற்ற திட்டுக்களையுடயதாய்க் கணவனிடத்தில் அன்புள்ள யுவதியானவள் புக்ககம் புகுமாறு போல சமுத்திரத்தில் சென்று விழும், பிறகு பொன்னிறைத்தாயும் பாண்டியர்க்கு யோக்கியமாயுமுள்ள கபாடத்தைப் பார்க்கக் கடவீர்கள்”
(பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.1) எனக்குறித்துள்ளார்.

வால்மீகி கபாடபுரத்திற்க்குக் கூறியுள்ள குறிப்புகள் திருச்செந்தூருக்கு மிகவும் பொருத்தி வருகின்றன.

தண் பொருநையாறு (தாம்பிரபரணி) கடலோடு கலக்குமிடத்திற்க்குத் தெற்கே சந்தனச் சோலைகளும், முத்துக்களும் காணப் பெற்ற இடம் திருச்செந்தூராகும்.

‘சந்தனக்காட்டுகுள்ளே கந்தனை நான் கண்டு கொண்டேன்’ என்பது இவ்வட்டாரத்து நாடோடிப் பாடலின் ஓரடி. திருச்செந்தூர் முருகன் குடியிருக்கும் மலைக்குச் சந்தன மலை எனப் பெயர். கந்தபுராணம் இம்மலையைக் ‘கந்தமாதன பர்வதம்’ எனப் புகழும், இன்று இம்மலையில் சந்தன மரங்கள் இல்லை. ஆயினும் அருணகிரி நாதர் காலத்தில் (கி.பி.15 ஆம் நூற்றாண்டு என்பர்) இம்மலையில் சந்தன மரங்கள் அடர்ந்திருந்தன. செந்தில் கந்தனைப் பாடும் போது அருணகிரி நாதர்,
“சந்தனத்தின் பைம் பொழில் தண் செந்திலில் தாங்கும் பெருமாளே”
(பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.2) எனப் பாடியுள்ளார். இன்றும் இக்கோயிலில் வழங்கப்படுமளவு சந்தனம் ஏனைய முருகன் கோயில்களில் வழங்கப் படுவதில்லை. கால மாறுபாடுகளால் சந்தன மரங்கள் அழிந்து போயிருக்கலாம்.

சாணக்கியர் தம் பொருள் நூலில் ‘பாண்டியக் கவாடம் என்ற முத்தைப் பற்றி கூறுகிறார். கபாட புரத்தில் முத்துக்கள் கிடைத்தன. இன்றும் இப்பகுதியில் முத்தெடுக்கின்றனர். அருணகிரி நாதரும்,பகழிக் கூத்தரும் இவ்வூரில் முத்துக்கள் கொழிப்பதைப் புகழ்ந்து பாடியுள்ளனர். “செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி செந்திற் பதி நகர் உறைவோ னே” (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.2) என அருணகிரி நாதர் பாடியுள்ளார். குன்றெறிந்த குமரவேள் சங்கத்தில் இருந்ததை நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். சங்கத்திற்கு இலக்கண நூல் ஈந்த அகத்தியருக்கு இங்கு கோயில்கள் உண்டு. கபாடபுரத்தின் ஒரு பகுதியாக இவ்வூர் விளங்கி இருக்கிறது. மீதமுள்ள பகுதியே கடலால் கொள்ளப் பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களான சிவனும், முருகனும் கபாடபுரத்திலுள்ள இடைச்சங்கம் எனப்படும் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் அவைப் புலவர்களாக இருந்ததாகக் கூறப்படும் செய்திகள் இதனை உறுதிப் படுத்துகின்றன.
கலங்கள் வந்து தாங்கும் வாயிலாக அமைந்ததால் கபாடபுரம் என்றும்,பின்பு அலைவாய் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம். அகநானூறு, தொல்காப்பிய மேற்கோள் செய்யுள், திருமுருகாற்றுப் படை கந்த புராணம் ஆகிய நூற்கள் இவ்வூரை ‘அலைவாய்’ எனக் குறிப்பிடுகின்றன. முருகன் நிலை பெற்று இருப்பதால் ‘திரு’ என்ற அடைமொழி பெற்றுத் ‘திருச்சீரலைவாய்’ என்ற பெயர் நிலைத்தது. இக்கோயிலில் அலைவாயு கந்த பெருமான் எனப் பெயருள்ள இவ்வூருக்கு நாமனூர் அலைவாய் என்றும் பெயர் வழங்கப்பட்டது.
திருச்செந்தூரின் நடுவில் அமைந்துள்ள சிவக்கொழுந் தீசுவரர் கோயில் கல்வெட்டில் திருச்செந்திலூர் என்ற பெயர் காணப்படுகிறது. இப்பெயர் மருவியே ‘திருச்செந்தூர்’ என்றாகியிருக்க வேண்டும்.

கி.பி.1648 ஆம் ஆண்டு உலாந்தர்கள் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் தாக்குதல் நடத்தியாதத் தெரிகிறது. இக்கோயிலிலுள்ள பல சிலைகள் அடித்து நொறுக்கப பட்டுள்ளன. சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் முருகன் சில இருந்ததென்றும், அது கி.பி.10 ஆம் நூற்றாண்டில் கடற்கரைக் கோயிலுக்கு மாற்றப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குலசேகரன் பட்டணம் சரவணமுத்து ஞானியரது ஏடு “கி.பி.1648 ஆம் கடற்க்கரை கோயில் முருகன் கோயிலாக மாற்றப்பட்டது” எனக் குறிப்பிடுகிறது. (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.5) பேராசிரியர். க.நெடுஞ்செழியன் கருதுவதைப் போல் ஐயனார் கோயிலாகவே கடற்கரைக் கோயில் இருந்துள்ளது. அதற்க்கு முன்பாக இக்கோயில் பாண்டியரின் அரண்மனையாத் தோற்றம் பெற்றுள்ளது.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் ஏராளமான குகைக் கோயில்கள் அமைத்தனர். பாண்டியர்களும் குகைக் கோயில் அமைத்தனர். திருச்செந்தூர்க் குகைக் கோயிலும் இக்காலத்திலேயே அமைக்கப் பட்டிருக்கலாம்.
“பாண்டிய நாட்டிலும் குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன… அவை பல்லவர்கள் காலத்திலேயே உருவாக்கப் பட்டவை என்பதிலும் பல்லவக் கலை மரபையே பின்பற்றியவை என்பதிலும் ஐயமில்லை” என்கிறார் கே.ஏ.நீல கண்ட சாசுதிரி (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.7). அமெரிக்க நாட்டு பிட்சுபர்க்குப் பலகலைக்கழகச் சமத் துறைப் பேராசிரியர் டாக்டர் பிரட்டு குளோதியும் இம்முடிவுக்கே வருகிறார்.

கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ஆதி சங்கரர் திருச்செந்தூர் சுப்ரமணிய புரத்தில் “பெரிய கடலின் கரையினிலே, முனிவர்கள் போற்றிப் புகழ்கிறதாயும், பாவங்களைத் தீர்க்கவல்லதாயும் விளங்கும் கந்தமாதன மலையில் அருட்பெரும் சோதியாக் குகப் பெருமான் ஒருக்கையில் அமர்ந்து அண்டினவர்களுக்குக் கெல்லாம் ஆதரவு தருகிறார். அவரது பொற்பாதங்களைப் பற்றி உய்வாம்” என்கிறார் (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.7), இதனால் ஆதிர் சங்கரர் காலத்திற்கு முற்பட்டே இஃது ஒரு குகைக் கோயிலாக இலங்கியது என்பது புலனாகும்.

“வரகுண பாண்டியனால் திருச்செந்திற் கோயில் நித்த வழிபாட்டிற்காக 1400 பொற்காசு பன்னீருராரிடைப் பகிர்ந்து கொடுக்கப் பட்டது. வட்டி ஆண்டிற்கு ஒரு காசிற்கு இரு கலம் நெல் என்றும், வட்டியைக் கொண்டு வழிபாட்டை நடப்பிக்க வேண்ருமேன்ரும் வட்டி நிலுவையாயின் இரட்டியும் 25 காசு தண்டமும் இருக்க வேண்டுமென்றும் விதிக்கப் பட்டன. இக்கல்வெட்டு பொறிக்கப் பட்ட காலம் கி.பி. 875 ஆம் ஆண்டாகும்.” (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.126 – 127 ) பாண்டியன் மாறவர்மன் காலத்தில் மங்கலக்குறிச்சி என்னும் ஊரில் இரண்டு மா அளவு நிலங்களைப் பூசைக்குக் கொடுத்ததாக இக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. கி.பி.15 ஆம் நூற்றாண்டில் இக்கோயிலில் நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டு இக்கோயிலில் உள்ள நக்கீரர் சிலைக்குப் பூசை செய்வதற்காக ஒரு நிலத்தை 630 கலியுக ராமன் பணத்திற்கு விற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திருச்செந்தூர்க் கோயிலில் நக்கீரர் சிலை இருந்ததை அறிகிறோம்.ஆனால் இப்போது நக்கீரர் சிலை திருச்செந்தூர்க் கோயிலில் இல்லை.

“கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் அடையாளம் தெரியாமல் மறந்து விட்டனர். நாயக்க மன்னர்களும் இப்பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அடுத்திருந்த திருவிதாங்கூர் மன்னர்கள் திருநெல்வேலிச் சீமையின் தென்பகுதியை ஆண்டனர். இதற்கான ஆவணம் திருச்செந்தோர்க் கோயிலில் உள்ளது” எனக் குறிப்பிடுகிறார் கால்டுவெல். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.8 )

ஆனால் பாண்டிய மன்னர்களும், அவர் தம் வழி வந்த மரபினரும், மரபினரும் திட்டமிட்டு அடையாளம் தெரியாமல் ஆக்கப் பட்டுள்ளனர். திருச்செந்தூர்க் கோயிலின் மேற்க்குக் கோபுர வாயில் அடைக்கப்பதர்க்கான காரண காரியங்களை ஆய்ந்து ஆராய்வோமானால் பாண்டிய மரபினரை எளிதாக் கண்டறிய முடியும்.

திருச்செந்தூர்க் கோயிலுக்கு நேரடி உறவும், உரிமையும் உள்ள ஊர் ‘திருச்செந்தூர்பட்டி’. இவ்வூர் திருவைகுண்டம் வட்டம், ஆழ்வார்கற்குளம் ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இவ்வூர் ‘திருச்செந்தூர்ப் பச்சேரி’ எனவும் வழங்கப்படுகிறது. பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பள்ளர்கள் மட்டுமே வாழக்கூடிய இச்சிற்றூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊராகும். வயல் சூழ்ந்த இவ்வூரைச் சுற்றி 35 கோட்டை விதைப்பாடு நிலம் உள்ளது. கோயில் தோன்றிய காலந்தொட்டு பன்னெடுங்காலமாக ‘நாள் பூசை’ செய்வதற்குப் பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளர் குல மக்கள் பொருநை ஆற்றில் புனித நீராடி, நெல் குத்தி அரிசி கொண்டு சென்றுள்ளனர். இவ்வரிசியின் மதிப்பு ‘3 1 /2 கோட்டை’ எனக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1947 க்கு முன் திருச்செந்தூர்ப் பட்டியிலிருந்து திருச்செந்தூர்க் கோயிலுக்கு ‘நாட்கதிர்’ கொண்டு செல்லும் மரபு இருந்துள்ளது. ‘நாட்கதிர்’ கொண்டு செல்லத் திருச்செந்தூரில் இருந்து கோயில் யானை திருச்செந்தூற்பட்டிக்கு வந்து ‘நாட்கதிரை’ எடுத்துக் கொண்டு சென்று நான்கு வீதிகளில் வளம் வந்து மேற்கு வாயில் வழியாகக் கருவறைக்குள் சென்று நாட்கதிரைக் கசக்கி அதனை அரிசியாக்கி அதில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக் கோயிலில் உள்ள அரிசியோடு போட்டுப் பொங்கல் வைப்பார். யானையுடன் நாட்கதிரைக் கொண்டு செல்லக் கூடிய பள்ளர்களின் செலவுத் தொகையைக் கோயில் குடும்புவே ஏற்றுக் கொள்ளும். தமிழ்க் கடவுள் முருகனுக்குப் படைத்த அப்பம், தேங்காய், பழம் ஆகிய பண்டங்களைக் கோயிலுக்குச் சென்றவர்கள் பெற்றுக் கொண்டு வந்து திருச்செந்தூர்பட்டியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் முறைப்படி வழங்குவர். பிற்காலங்களில் சீட்டுக் குலுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட இருவர் ‘நாட்கதிரைக்’ கொண்டு சென்று கோயிலின் மேற்கு வாயில் வழியாக மண்டபத்தில் வைத்து, அதனை அரிசியாக்கிப் பொங்கலிடுவர். இதற்காகக் கோயில் குடும்பில் இருந்து ரூபாய் 500 செலவுத் தொகையாகக் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு முறை சீட்டுக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் பட்ட விவரமறியாத இருவர் நாட்கதிர் கொண்டு செல்ல அங்கே மேலாண்மை செய்ய வந்த வெள்ளையர்கள் நாட்கதிர் கொண்டு சென்ற பள்ளர்களைப் பற்றி கேட்டபோது கோயிலில் ஆதிக்கம் செலுத்தி வந்த வந்தேறி ஆரியப் பிராமணர்கள், “கோயிலுக்கும், பள்ளர்களுக்கும் இனி எந்த உறவும், வரவும் இல்லை” என ஏமாற்றிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு, 500 ரூபாயும், அப்பமும், தேங்காய், பலமும் கொடுக்காமல் அனுப்பி விட்டனர். அத்தோடு கோயில் குடும்பிற்க்கும், பள்ளர்களுக்குமான நிருவாக உறவுகள் நிறைவுற்றது.
திருமணம் செய்து கொள்ளக் கூடியவர்கள் திருச்செந்தூர்க் கோயிலுக்கு பாக்கு வைக்க வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 1 1 / 4 பணமும், முருகனுக்குக் கட்டிய பட்டும் கோயிலில் இருந்து கொடுத்து விடப்படும்.அப்பத்தைக் கட்டிக் கொண்டு தான் திருமணம் நடைபெறும். பள்ளர்கள் இறந்தாலும், ஆணாக இருந்தால் வேட்டி, துண்டும், பெண்ணாக இருந்தால் சேலையும் அடக்கச் செலவுப் பணமும் கோயிலிலிருந்து கொடுத்து விடப்படும்.

பின்னாளில் பள்ளர் குளத்தில் பிறந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாத்தூர், சின்ன ஓடைப்பட்டியைச் சேர்ந்த கோ.சங்கிலி என்பவர் திருச்செந்தூர் கோயிலின் அறங்காவல் குழுவில் இருந்தார். அதன் பின்னர் கோயில் நிர்வாகத்திற்கும், பள்ளர்களுக்குமான உறவுகள் முற்றிலும் அறுந்துப் போய் விட்டது. இருப்பினும் வரலாற்றுத் தொடர்புகள் சில உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முருகனுக்குப் பிடிக்கப்படும் வெண்கொற்றக் குடையும், இரண்டு சேவல் கொடியும் திருச்ன்சென்தூர்க் கோயிலில் இருந்து தெருச்செந்தூர் பட்டிக்கு கொடுத்து விடப்படும். அவ்வாறு இறுதியாகக் கொடுத்து விடப்பட்ட வெண்கொற்றக் குடையிலுள்ள வெண்கல கலசமும், இரண்டு சேவை கொடியும் திருச்செந்தூர் பட்டியிலுள்ள அம்மன் கோயிலில் தான் இன்றும் உள்ளது. உடையார் குளம், வடக்குக் காரசேரி, ஒனாகுளம், சிங்கத்தாங்குறிச்சி, ஆலந்தா, வல்லநாடு, நாணல்காடு, முத்தாலங்குறிச்சி, முறப்பநாடு, படுகையூர், காசிலிங்காபுரம், அனைவரதநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து பள்ளர்கள் காவடி கட்டித் திருச்செந்தூர்பட்டியில் ஒன்று கூடி அங்கிருந்து திருச்செந்தூர் சென்று மேற்கு வாயில் வழியாகச் சென்று முருகனை வழிபட்டு வந்தனர். அதன் பின்னர்தான் மேற்கு வாயில் அடைக்கப் பட்டது.
“பழம்பெரும் கோயில்களின் மேற்கு வாயில்,பாண்டிய மன்னர்களும் அவர் தம் மரபினரும் வருகின்ற வழியாதலால் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்த போது கோயில்களின் மேற்கு வாயில்கள் மூடப் பட்டன. அதிகாரத்தை இழந்ததால் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கும் கோயில் நுழைவு மறுக்கப் பட்டது” என்ற வரலாற்று அறிஞர் இரா.தேவ ஆசீர்வாதத்தின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இக்கோயில் வரலாற்றால் உறுதி செய்யப் படுகிறது.

திருச்செந்தூர்க் கோயிலின் மேலக் கோபுர வாயிலும் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தபோது இழுத்து மூடப் பட்டுள்ளது. மேற்கு வாயில் பகுதியில் உள்ள தூண்களில் குடும்பன் பெயர் தாங்கிய பல கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன. மேலக் கோபுர வாயிலில் அமைந்துள்ள தெருவிக்குக் கோட்டைத் தெரு என்று பெயர். இத்தெருவில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப் பட்ட பத்து பழம் பெரும் மடங்கள் அமைந்துள்ளன. திருச்செந்தூர்ப் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளர் குலத்தாரின் கிளைப் பிரிவினர் ஒவ்வொருவருக்கும் ஒரு மடம் என்ற கணக்கில் பத்து பெருமடங்கள் உள்ளன. கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து கோட்டைத் தெரு வழியாக வரும் போது முதலாவதாக ‘அஞஞாப் பள்ளர்’ மேடம் உள்ளது. அதன் கீழ்ப்புறம் ‘வாதிரியப் பள்ளர்’ மடமும், ‘சோழியப் பள்ளர்’ மடமும் சேர்ந்தார்ப் போல் உள்ளது. அதன் கீழ்ப்புறம் ‘வந்கப்பள்ளர்’ மடம் உள்ளது. அடுத்ததாக ‘அளத்துப் பள்ளர்’ மடமும், அதன் கீழ்ப்புறம் ‘கொற்கை நாட்டார்( பள்ளர்)’ மடமும் உள்ளது. அதற்க்கடுத்ததாகப் ‘பருத்தி கோட்டை நாட்டார் (பள்ளர்)’ மடமும், ‘சீவந்திவள நாட்டார் (பள்ளர்)’ மடமும், ‘வீரவள நாட்டார் (பள்ளர்)’ மடமும் உள்ளன. ஒவ்வொரு மடமும் அரைக்குறுக்கத்திற்கு மேல் பரப்புக் கொண்டதாகச் சுற்றுசுவர் கட்டப் பட்டுள்ளது. இவற்றில் ஐந்து மடங்கள் பயன்பாட்டிலும், நான்கு மடங்கள் பாழடைந்த நிலையிலும் இருக்கின்றன. வீரவள நாட்டுப் பள்ளர் மடத்திற்கு வடபுறம் அருகே இருந்த ஒரு பள்ளர் மடம் மற்றவர்களுக்கு விற்கப் பட்டு மடம் இருந்த சுவடு தெரியாமல் அவ்விடம் வீடுகளாகிப் போயின. கோட்டைத் தெருவின் முடிவில் வண்டிகள் நிறுத்துவதற்காக இருந்த பள்ளர்களுக்கு உரிமையுடைய நிலங்கள் பின்னாளில் பறையர்களுக்கு கையளிக்கப் பட்டது. இது தமிழர்களாகிய பள்ளர்களையும், பறையர்களையும் மோத விட்டு பிரித்தாளும் வடுகச் சூழ்ச்சியாகும்.
இக்கோயிலின் மேற்கு வாயில் ஆண்டிற்கு ஒருமுறை முருகன், தெய்வானை திருமணம் நடைபெறும் காலத்தில் மட்டும் திறக்கப் படுகிறது. திருப்பரங்குன்றத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ள முருகனுக்கும், தேவேந்திரனின் மகள் தெய்வானைக்கும் திருமணம் முடிந்து தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்கு மறு வீடு செல்லும் வழக்காறு திருச்செந்தூர்க் கோயிலில் வழக்கொழிக்கப்பட்டுள்ளது.

கால ஓட்டத்தில் பள்ளர் குலத்தவர்கள் இக்கோயில் உரிமைகளில் நாட்டம் செலுத்தாததாலும், பலர் கிருத்துவம் தலுவியதாலும், நாடர்களாகிய ‘சாணார்’ சமூகத்தவர்கள் இக்கோயிலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். இதற்க்கு இவர்களின் சமூக எழுச்சியும், பொருளியல் மேம்பாடும், அரசியல் அதிகாரப் பகிர்வும் அடிப்படையாய் அமைந்திருந்தது. இக்கோயிலில் பள்ளர் குலத்தவர்கள் முதல் மரியாதை இழந்து, முற்றிலும் உரிமைகள் பறிக்கப் பட்ட போதிலும் இக்கோயில் பள்ளர்களுக்கு மட்டுமே உரிமை உடையதேன்பதும், பள்ளர் குலத்தவர்களே பாண்டிய மரபினர்கள் என்பது இக்கோயில் சொல்லும் வரலாறு உண்மையாம்.