Thursday, 3 October 2019

மள்ளர் - குடும்பர் ஒன்றே

மள்ளர் - குடும்பர் ஒன்றென உரைக்கும் பள்ளுப்பாடல்கள்

    வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கிவந்த வேளாண்குடி மக்களின் வேறுபட்ட பெயர்கள் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை உணர்த்தி, மள்ளர்களின் நீண்டதோர் வரலாற்றுத் தொடர்ச்சியினை இணைத்தும், பிணைத்தும் பள்ளுப் பாடல்களே தெளிவுற்றுகின்றன. மள்ளர் குலத்தவரின் குலப்பட்டமே குடும்பர் என்பது குறித்துக் கூறும் பள்ளுப் பாடல்கள் சிலவற்றை இங்கே காட்டாகக் காண்போம்.
  • சாமிநாதப் பள்ளு
        இயற்றியவர் சிவபெருமாள் கவி.
செய்யுள் 10
        "பெருக்கமிடும் பண்ணைதனைக் காவியத்தியாய்
                வந்த
மள்ளன் பிரபலமோங்கு
        திருக்குலவு வீராச்சிமங்கை நகரக்
குடும்பன்
                வந்த திரஞ் சொல்வோமே"
    அடர்ந்த கருங்கொண்டையை முடிந்து, மீசையை நன்றாக முறுக்கு, உருமாலையை இறுக்கிக் கட்டி, வண்ணச் சோமனை இடையிற்கட்டி, சோமபானம் அருந்தி, தென்கரை நாட்டில் பெரும் புகழ் பெற்ற குடும்பனார் வரவை, அவர்தம் குடியினரான மள்ளர்கள் புகழ்ந்ததாக மேற்க்கண பள்ளு அடிகள் பரப்புரை செய்கின்றன.
  • எட்டையபுரப் பள்ளு
          இயற்றியவர் முத்துப் புலவர்
செய்யுள் 37
        "வாய்ந்த ராமனூற்றுப் பண்ணை
        மள்ளர் கட்டிய வெள்ளை காளையைப்
        பேய்த்தண்ணீர் வெறியாலே கொம்பை
        யுயர்த்திப் பிடிப்பாராம்
        குருமலை தனில் வாழும்
கெச்சிலாக்
        குடும்பன் கட்டிய யிடும்புக் காளையை 
        மறுவிலாத தென்னிசைக் குடும்பன்
        வளைத்து பிடிக்கவே...."
செய்யுள் 41
        "நெஞ்சூ டெருதுகுத்தும் நீள்காயாத்தாற் காய்ந்தே
        தொஞ்சே மயங்கி மதிசோர்ந்திருக்கும் வேளைதன்னில்
        மஞ்சாடும் பூங்கூந்தல்
மள்ளியர்கள் வாய்மொழியோர்
        சஞ்சீவிக்
குடும்பன் தானெழுந்து கொண்டானே...."
    தென்னிசைப் பள்ளு அடிகள் மள்ளரும் குடும்பரும் ஒன்றென்பதைத் தீர்க்கமுடன் தெளிவுறுத்துகின்றன. இதில் முதற் செய்யுளில் இடம் பெற்றுள்ள 'கெச்சிலாக் குடும்பன்' நினைவாகவே 'கெச்சிலாபுரம்' என்ற ஊர்ப்பெயர் ஏற்ப்பட்டுள்ளது. 'கெச்சிலாபுரம்' என்ற பெயரில் கோயில்பட்டி அருகே ஓர் ஊரும், கழுகுமலை அருகே ஓர் ஊரும் உள்ளன.
  • தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு        
        "புள்ளியுரு மாலுங்கட்டி மள்ளியர்தமைப் பகட்டிப்
        போதவே சிலப்பங் கையில் வாணத்தடியுந்த்
        துள்ளிய வீசி முருக்கி வொள்ளிய கச்சை யிருக்கித்
        தொட்டு விளிக்குஞ் சபாது பொட்டது மிட்டு
        வள்ளல் பழனியப் பேந்திரன் பண்ணை வளம்பார்க்கிறான்
        மைந்தன்
உடையக் குடும்பன் வந்து தோன்றினானே...."
           மேற்கண்ட பள்ளு அடிகளும் மள்ளர் - குடும்பர் ஒன்றென்பதை உணர்த்துகிறது.
  • பொய்கைப் பள்ளு
          இயற்றியவர் கடிகை அங்கமுத்துப் புலவர், காலம் கி.பி. 1891 
செய்யுள் 25
        "குடும்பனென்ப துயர்ந்தசாதி யானல்ல வென்பர்
        குடும்ப நுயர்ச்சியினைக் கூறவெளி தோ
        நெடுங்கடற் புவியுள் ளோரவரவர் குலத்துக்கு
        நிகழ்த்துந் தலைமையுள் ளோனே
குடும்பனாம்
        திடஞ்சேர் மறையோராதி குலசிரேட் டருங்கெல்லாத்
        சேர்ந்திருக்கு மேன்பெயர் தெரியு மீது
        தடம்புயன் சொக்கலிங்கப் பெத்தண்ணல் பண்ணை மள்ளச்
        சாதிக் குடும்பனேன்னைத்
தள்ளலரிதே ..."
    மேற்கண்ட பள்ளு குடும்பர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை உணர்த்துவதோடு 'மள்ள சாதிக் குடும்பன்' என்ற சொற்றொடரின் ஊடாக மள்ளரும், குடும்பரும் ஒன்றென்பதை விளக்கி உரைக்கின்றது.
செய்யுள் 119
        "எண்டிசையும் போற்றுசொக்க லிங்கபெத்த னேந்திரதுரை
        மண்டலங்கொண் டாடுபண்ணை
மள்ளிமூத்  தாள்சாடி
        விண்டகன்ற பின் குடும்பன் மிகக்கிடை வைத்துவயல்
        கண்டுவந்தான் போலவொரு கணத்தினில் வந்துற்றானே .."
மேற்கண்ட பள்ளு மூத்த பள்ளியை மள்ளிமூத்தாள் என்றும் பள்ளியின் கணவனை 'குடும்பன்' எனவும் குறிக்கின்றது.